February 04

Date:04 Feb, 2017

February 04

We Shine Daily News

jkpo;

gpg;uthp 04

தேசிய செய்திகள்

 • விரைவில் புதிய 100ரூ நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படுகிறது என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  புதிய 100ரூ நோட்டுகளில் பின்பகுதியில் 2017ம் ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும்

 

 •  உத்திரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி முதல் கட்டத் தேர்தலும் மார்ச் 8ம் தேதி கடைசிக் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. 

 

 • மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) இந்த ஆண்டு மே 7ல் நடைபெறும். சிபிஎஸ்இ இந்த தேர்வை நடத்துகிறது. தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 25 என மத்திய சுகாதார அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30. அனைத்து பிரிவினரும் அதிகபட்சம் 3 தடவை மட்டும் தேர்வு எழுத முடியும்.

 

 •  ராஜூவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்ட் 20ம் தேதி மதநல்லிணக்க தினமாக கொண்டாடப்படுகிறது.
  2016ம் ஆண்டு மதநல்லிணக்க தின நிகழ்ச்சியில் ராஜூவ் காந்தி பெயர் நீக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அரசு திட்டங்களுக்கு இனி அரசியல் கட்சிகள் பெயர் சூட்டப்படாது என தெரிவித்தார்.

 

 •  மராட்டிய மாநிலம் 12ம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தில் ‘முக்கிய சமூக பிரச்சினைகள்’ என்ற தலைப்பில் ‘அசிங்கமான பெண்களுக்கு வரதட்சணை அதிகம் கேட்கப்படுகிறது’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தயுள்ளது.
  2013ல் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் ஆறு கல்வியாளர்களால் எழுதப்பட்டு மகாராஷ்டிர மாநில குழுவால் வெளியிடப்பட்டது.

 

 •  

   கர்நாடகா மற்றும் கேரள எல்லையில்; மானிலா கிராம மக்கள் மற்றும் புத்திகே கிராம மக்கள் ஒன்றாக இணைந்து கோடையை சமாளிக்க ஷிரியா ஆற்றில் தடுப்பாணை அமைத்துள்ளார்கள்.
  சுமார் 30 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இந்த பணியை செய்கிறார்கள்.

 

 •  

  குற்றவாளிகளின் டிஎன்ஏ-வை சேகரிக்க அனுமதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர ஆந்திர பிரதேச மாநிலம் தீவிரம் காட்டி வருகிறது.
  2012ம் ஆண்டு முதல்முறையாக மத்திய அரசு இவ்வரைவு திட்டத்தை கொண்டு வந்தது. மனித டிஎன்ஏ புரோபைலிங்கை மசோதா 2015 பயோடெக்;னாலஜி துறையில் தயாரிக்கப்பட்டது.
  கடந்த 20 வருடங்களில் 54 நாடுகளில் 70 மில்லியன் பேரது டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

 

 •  கரன்சி வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு மின்னணு பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது தொடர்பான விளம்பரங்களுக்கு ரூ.94 கோடி செலவிட்டிருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்ய வர்தன்சிங் ரத்தோர் தெரிவித்தார்.

 

 •  புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள 500 மற்றும் 2000ரூ நோட்டுக்களை புழக்கத்தில் விடும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாக பொருளாதார துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் கூறினார்.
  யுவுஆ – களில் மக்கள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1ம் தேதி தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 •  பிப்ரவரி 3ம் தேதி இலங்கையில் தகவலறியும் உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி இலங்கை குடிமக்களுக்கு அரசின் தகவல்களை பெறுவதற்கான உரிமை அளிக்கப்பட்டது. தரவுகள் என்பது ‘அரசின் கையில், கட்டுப்பாட்டில் அல்லது கண்காணிப்பில் உள்ள தகவல்கள்’ என பொருள்படும்.

 

பன்னாட்டு செய்திகள் :

 • மதத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை அமல் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
  டிரம்ப் “மதச் சுதந்திரம்” என்ற பெயரில் இந்த மசோதாவை வரையறுத்துள்ளார்.

 

 •  விண்ணிலிருந்து செலுத்தி தாக்கும் திறனுள்ள ஏ.ஆர்-2 ரக ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய சீனா திட்டமிட்டு வருகிறது. இந்த தகவல் சீன அரசு வெளியிடும் நாளிதழான “ஊhiயெ னுயடைல” வெளியிட்டுள்ளது.
  ஏவுகணைகளை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் பரிசோதித்தது. இந்த ஏ.ஆர்-2 ரக ஏவுகணைகள் 20 கிலோ எடையுள்ளது. 5 கிலோ எடையுள்ள ஏவுகணைகளை சுமக்கும் வல்லமை உடையது.
  மணிக்கு 735கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டவை. 8கிமீ தொலைவிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும்.

 

 • அமெரிக்காவுடன் அசைக்க முடியாத உறவைப் பேணுவோம் என ஜப்பான் பிரதமர் ஷின்ப்ஸா தபே கூறினார்.தேர்தல் வெற்றிக்கு பிறகு டிரம்பை சந்தித்த முதல் சர்வதேச தலைவர் அபே என்பது குறிப்பிடத் தக்கது.

 

 •  புணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு கணக்கில் காட்டாத வருமாய் ரூ.5400 கோடி சிக்கி உள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

 

 •  

   அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட பொதுக்கொள்கை கருத்துக்கணிப்பின் முடிவில் 52% பேர் மீண்டும் ஒபாமாவே அமெரிக்க அதிபராக வர விருப்பம் தெரிவித்தனர். 43% பேர் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து ஆதரவு அளித்தனர்.

 

 •  

   

   மேற்குலக நாடுகளுடைய ஜனநாயகத்தையும் முக்கிய உள்கட்டுமானங்களையும் குறிவைத்து ரஷ்யா இணைய தாக்குதல்களை மேற்கொண் வருவதால் கூட்டணியின் உறுப்பு நாடுகள் எல்லாம் இணைய பாதுகாப்புகளை வலுப்படுத்தி கொள்வது முக்கியம் என அமெரிக்க ஐக்கிய ராஜ்ஜிய பாதுகாப்பு அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தெரிவித்துள்ளார்.

 

 •  

  வடகெரியாவில் உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி பதவி வகித்து வந்த கிம் வோன் ஹாங் (72) – ஐ வடகொரியா தலைவர் கின் ஜாங் அன் அதிரடியாக நீக்கினார்.
  வடகெரியா தலைவர் கின் ஜாங் அன்னின் நெருங்கிய உறவினர் ஜாங் சிங் தாயிக் 2013ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கிம் வோன் ஹாங் தான் வழி நடத்தினார் என கூறி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

 

 •  

   அமெரிக்க வாழ் இந்திய டாக்டர். நீல் சர்மா என்பவர் சுகாதார காப்பீட்டு நிறுவனத்திடம் 10 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6¾ லட்சம்) லஞ்சம் வாங்கி கொண்டு நோயாளிகளை காப்பீடு செய்ய அனுப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 • அமெரிக்காவில் வீட்டு உபகரண தயாரிப்பு ஆலையை அமைக்க தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

 

 •  பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசுவதற்காக சீன வெளியுறவுத் துறை துணை இணை அமைச்சர் செங் குலோபிங் பிப்ரவரி 6 முதல் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

 

 • அமெரிக்க அதிபர் டிரம்ப்(70) தலையில் வழுக்கை விழாமல் அடர்த்தியாக முடி வளர ‘பினாஸ் டெரிட்’ என்ற மாத்திரை சாப்பிடுகிறார். இது தலைமுடி உதிராமல் அடர்த்தி மற்றும் நீளமாக வளர உதவுகிறது.
  மாரடைப்பை தடுக்க ‘பேபி ஆஸ்பிரின்’ மருந்தையும், தோல் ஏற்படாமல் இருக்க மருந்தும் சாப்பிடுகிறார் என டிரம்ப்-இன் குடும்ப டாக்டர் ஹரோல்டு என் பார்ன்ஸ்டீன் கூறினார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • 2024ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு இன்று மாலைக்குள் 3 நகரங்கள் தங்கள் இறுதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இருக்கின்றன.
  இதுவரை இந்த போட்டிகளை நடத்திய லாஸ் ஏஞ்சலஸ், பாரிஸ் மற்றும் பூதபெஸ்ட்டும் போட்டியிடுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் லிமாவில் நடைபெறும் கூட்டத்தில் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி எந்த நகரில் நடைபெறும் என்ற தீர்மானம் சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் அறிவிக்கப்படும்.

 

 •  உலக ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
  இந்தியா பெண்கள் ஒற்றையர் பிரிவு:
       ஜோஸ்னா சின்னப்பா – 14வது இடம்
      தீபிகா பலிக்கல் – 22வது இடம்
      சஷிகா இன்காலே – 79வது இடம்
     ஜானெட் வித்ஹி – 96வது இடம்
  ஆண்கள் ஒற்றையர் பிரிவு:
     சவுரவ் கோஷல் -24வது இடம்
     விக்ரம் மல்கேத்ரா -67வது இடம்
     மகேஷ் மாங்கான்கர் -70 வது இடம்
     ஹரிந்தர் பால்சந்து -99வது இடம்

 

 •  உலக பேட்மிண்டன் ஜூனியர் பிரிவு ஒற்றையர் தரவரிசைப் பட்டியலை சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டது.

 

 • இந்திய வீரர் லக்சயா சென்(15) முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் உத்தரகாண்டை சேர்ந்தவர். பெங்களுரில் உள்ள பிரகாஷ் படுகோனே அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
  உலக ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசையில் நம்பர்-1 இடம் பிடித்த 3வது வீரர் ஆவார்.

 

 •  10வது ஐPடு (ஐனெயைn Pசநஅநைச டுநயபரந) 20 ஓவர் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 20ம் தேதி பெங்களுரில் நடைபெற உள்ளது என இந்திய கிரிக்கெட்; வாரியம் அறிவித்துள்ளது.

 

 •  

   ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நடுவரான லூயிஸ் பாட்ரிக் ரோவன் (91) நேற்று மரணமடைந்தார். அதிக நாள் உயிர் வாழ்ந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் நடுவர் இவர்.
  1963- 1971 வரை 25 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியவர்.

 

 •  

   தென்மண்டல 20ஓவர் கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் கேரள அணியை இந்திய அணி தோற்கடித்தது. ரன்ரேட் அடிப்படையில் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் வென்று அகில இந்திய போட்டிக்கு தயாரானது.
   தமிழக அணி -2வது இடம்
   ஐதராபாத் அணி -3வது இடம்
   கேரளா அணி -4வது இடம்
   ஆந்திரா அணி -5வது இடம்
   கோவா அணி -கடைசி இடம்

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • இந்தியாவின் ஐபோன் உற்பத்தி செய்யவுள்ள ஆப்பிள் நிறுவனம் பெங்களுரில் ஏப்ரலில் உற்பத்தியை துவங்க உள்ளது. வருமான வரி ரிட்டர்ன் தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.

 

 •  உலக அளவில் தங்கம் இறக்குமதி செய்வதில் இந்தியா 2வது இடத்திலுள்ளது என உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் கூறினார்.

 

 •  நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ரொக்கமாக ரூ.10000க்கு மேல் சம்பளம் வழங்கினால் வரிச்சலுகை கிடைக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  சம்பள பட்டுவாடா சட்டம் (1936) சம்பளத்தை நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளாக வழங்க வகை செய்தது.

 

 •  வங்கதேச தலைநகர் டாக்காவில் அசோக் லேலண்ட் நிறுவனம் 37 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆலை அமைத்துள்ளது. இந்த ஆலையின் கட்டுமான பணி 15 மாதம் ஆகும்.

 

 • நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வேர்ல்;பூல் இந்தியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 45% அதிகரித்தது.

 நியமனச் செய்திகள்:

 •  தேசிய பங்குச்சந்தையின் புதிய தலைமை செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக விக்ரம் மாயே தேர்வு செய்யப்பட்டார்.
  விக்ரம் மாயே தற்போது ஐனுகுஊ வங்கியின் தலைமை செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் உள்ளார்.

Call Now