February 03

Date:03 Feb, 2017

February 03

We Shine Daily News

jkpo;

gpg;uthp 03

 

தேசிய செய்திகள்

 • டிசம்பர் மாதத்துக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளின் வருமான வரிவிலக்கு சலுகை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 • மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கௌரவிக்க வேண்டும் என அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த் வலியுறுத்தியுள்ளார்.
 •  தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஆகஸ்ட் 22ல் அச்சிடத் தொடங்கிய நிலையில் செப்டம்பர் 4ல் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்ற உர்ஜித் படேல் கையெழுத்திட்டது எப்படி என கேள்விகளை தந்தி டிவி எழுப்பியுள்ளது.
 •  புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பிய நாள் – 19 மே, 2016
 •  புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நாள் – 7 ஜூன், 2016
 •  2000 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தொடங்கிய நாள் – 22 ஆகஸ்ட், 2016
 •  500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தொடங்கிய நாள் – 23 நவம்பர், 2016
 •  தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
 •  சமூக வலைதளமான டிவிட்டரில் ஜனவரி -30 முதல் பிப்ரவரி -2 வரை பட்ஜெட் என்ற பெயரில் ஹேஷ்டேக்கிட்டு மொத்தம் 7.2 லட்சம் ‘ட்வீட்கள்’ குவிந்து பெரும் சாதனை படைத்துள்ளது.
 •  மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச்சட்டத்தை வாபஸ் பெறக்கோரி 16 ஆண்டுகள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் தொடங்கிய புதிய கட்சிக்கு ‘விசில் சின்னம்’ ஒதுக்கி தருமாறு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளார்.
 •  ஆதார் பே, வர்த்தகர்களுக்கான ஆதார் அட்டை மூலம் பணம் பெறும் வசதி விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. டெபிட் கார்டு மற்றும் இ-வாலட் இல்லாத வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெறுவதற்கு இது உதவும். சிறப்புப் புலனாய்வுக் குழு பரிந்துரையின் படி ரூ 3 லட்சம் வரை மட்டுமே அனுமதி.
 •  மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினையை சமாளிக்க எவ்வித தீர்வுகளும் எடுக்கப்பட வில்லை.
 •  ஜம்மு காஷ்மீர் மாநில பிரிவினைவாத இயக்கமான ஹரியத் மாநாடு கட்சித் தலைவர் சையத்அலி ஷா கிலானிக்கு நேற்று இரவு திடீர் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 •  காஷ்மீரில் சம்பா செக்டாரில் எல்லை பாதுகாப்பு படை முகாமை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
 •  ‘பிரெக்ஸிட்’ எனப்படும் ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
 •  வருமான வரி கணக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய தவறினால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 •  பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வகுத்துள்ள வழிகாட்டுதல் நெறிகளை சரியாக பின்பற்றும் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
 •  இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ‘சென்சார்’ உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நவீன வேலிகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
 •  நிதியின்மையால் முடங்கியுள்ள சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடியில் புதைந்துள்ள சங்ககாலப் பொருட்கள் தொடர்புடைய அகழ்வாராய்ச்சி பணிகளை மீண்டும் தொடர வேண்டும் என மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

 

பன்னாட்டு செய்திகள் :

 •  ஓபாமா நிர்வாகத்தில் கையெழுத்தான ஆஸ்திரேலிய – அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் ஓர் ‘வாய் பேசா ஒப்பந்தம்’ என டிரம்ப் விமர்சித்துள்ளார்.
 •  அமெரிக்காவினுடைய புதிய பாதுகாப்புத் துறைச் செயலரான ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ், கிழக்கு ஆசியாவிலுள்ள அமெரிக்காவின் நட்புறவு நாடுகளுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் தொடக்கமாக தென்கொரியா சென்றார்.
  அதிபர் டிரம்பின் அமைச்சரவையிலிருந்து உறுப்பினர் ஒருவர் வெளிநாடு ஒன்றுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
 •  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விசா தடைவிதிப்பு இஸ்லாமியர்களுக்கு எதிரானது கிடையாது என ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத் துறை மந்திரி ஷேக் அப்துல் பின் ஜயாத் அல்நாக்யான் கூறினார். சவுதி அரேபியாவின் அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமெரிக்காவின் நட்பு நாடாக காணப்படுகிறது.
 •  பாகிஸ்தான் உள்பட 5 இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளுக்கு விசா வழங்க குவைத் தடைசெய்தது.
 •  சீனா 10 அணு ஆயுதங்களை சுமந்து சென்று பல்வேறு இலக்குகளில்; தாக்குதல் நடத்தும் டிஎப் -5சி ஏவுகணை ஷாங்ஷி மாகாணத்தில் சோதனையை மேற்கொண்டது.
 •  வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிலின், மத்திய கிழக்கு வட்டாரத்தில் ஈரான் பதற்றத்தை அதிகரிக்க முயல்கிறது எனவே ஈரான் கண்காணிக்கப்படும் என கூறினார்.
 •  சட்டத்திற்கு புறம்பாக வேறொரு நிறுவனத்தின் விஆர் எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பத்தை பிரபல பேஸ்ஃபுக் அக்குலஸ் நிறுவனம் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சுமார் 500 மில்லியன் டாலர்கள் இழப்பீடு தர அமெரிக்கா நீதிமன்றம் உத்தரவிட்டது.
 •  அமெரிகக்காவின் புதிய வெளியுறவுத் துறைச் செயலராக ரெக்ஸ் டில்லர்சன் (64) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எக்ஸன் மொபில் நிறுவத்தின் முன்னாள் தலைவரும் மற்றும் தலைமை செயலதிகாரியும் ஆவார்.
 •  போதைப் பொருள் கடத்தல் தொடர்பான போரில் ராணுவத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் நிறைய பேர் கொல்லப்பட இருக்கிறார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் சபதம் ஏற்றுள்ளார்.
  டியுடெர்ட் பிலிப்பைன்ஸின் அதிபராக ஜூன் 30, 2016ல் பதவியேற்றது முதல் 5000 பேர் குற்றவாளிகள் எனக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 •  அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகரான ஸ்டீவ் பெனான் இன்னும் சில ஆண்டுகளில் கண்டிப்பாக சீனா மீது போர் தொடுக்கப்படும் என கூறினார்.
 •  அமெரிக்காவிடம் ரஷ்யாவை காட்டி கொடுத்ததாக ரஷ்ய இணை பாதுகாப்பு நிபுணர்கள் மூவர் மீது தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
  செர்கே மீகைலோவ், டிமிட்ரி டொக்குசைஎப் – எப் எஸ் பியின் தகவல் பாதுகாப்பு மை துணைத் தலைவர்கள். ரஸ்லன் ஸ்டியானப் – காஸ்பர் ஸ்கை லேப்பின் ஊழியர் ஆவார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

 •  ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஏலத்தில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரரும் ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றால் அவர் பல மில்லியன் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியுமென்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறினார்.
 •  தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கம் மற்றும் சிங்கை ஸ்போர்ட்ஸ் லவ்வர்ஸ் கிளப் சார்பில் 64வது தென்மண்டல கபடி சாம்பியன்ஷிப் போட்டி நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்க புரம் அகஸ்தியர் பட்டியிலுள்ள மைதானத்தில் 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
 • புணேவில் நடைபெற்ற தேசிய ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார். இது அத்வானியின் 29வது தேசிய சாம்பியன் பட்டமாகும்.
 •  டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் ஆசிய – ஓசியானியா குரூப் 1 சுற்று புனேவில் இன்று தொடங்குகிறது.
 •  முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆந்திரத்தை தோற்கடித்தார்.
 •  விளையாட்டின் ‘ஆஸ்கர்’ என்றழைக்கப்படும் ‘லாரஸ் உலக ஸ்போர்ட்ஸ்’ விருது கடந்த 2000 முதல் தரப்படுகிறது. இந்த ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி மொனாக்கோவில் பிப்ரவரி 14ல் நடக்க உள்ளது.
 •  இந்தியா- இங்கிலாந்து 20 ஓவர் தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து 20 ஓவர் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது.
  நியூசிலாந்து – 1வது இடம்
  இந்தியா – 2வது இடம்
  வெஸ்ட்இண்டீஸ் – 3வது இடம்
  தென்னாப்பிரிக்கா – 4வது இடம்
  ஆஸ்திரேலியா – 5வது இடம்
  இங்கிலாந்து – 6வது இடம்
 •  சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
  இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 6வது இடமும், சாய்னா நெவால் 9வது இடமும் பிடித்தார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 •  மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மிகவும் வரையறுக்கப்பட்ட சிறந்த  பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என தென்னிந்திய தொழில் வர்த்தக சகை (எஸ்ஐசிசிஐ) கருத்து தெரிவித்துள்ளது.
 •  வெள்ளியின் விலை சென்னையில் கிலோவுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42835க்கு விற்பனையாகிறது.
 •  டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 63மூ அதிகரித்தது.
 •  பொதுக்காப்பீட்டு நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ.11000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 •  பொதுத்துறையைச் சேர்ந்த விஜயா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் 4 மடங்கு அதிகரித்தது.

 

 

Call Now