December 26

Date:26 Dec, 2017

December 26

We Shine Daily News

டிசம்பர் 26

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • அமெரிக்காவை தொடர்ந்து கவுதமலா நாட்டின் அதிபர் ஜிம்மி மாரலெஸ், இஸ்ரேலுக்கான தங்கள் நாட்டின் தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றப் போவதாக அறிவித்துள்ளார்

 

 • மின்டனாவ் (பிலிப்பைன்ஸ்) மாகாணத்தை ‘டெம்பின்’ புயல் தாக்கியது

 

 • கனடா, வெனிசுலா நாட்டு தூதரக அதிகாரிகள் அனைவரையும் மொத்தமாக தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது

 

 • சீனா, உலகிலேயே நிலம் மற்றும் நீரில் இயங்கக்கூடிய ஏஜி 600 என்ற மிகப் பெரிய விமானத்தை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளது

 

 • சீனா அரசு கடந்த 2 வருடங்களில் 13000 இணையதளங்களையும், 1 கோடி மக்களின் சமூக வலைதள கணக்குக்களையும் முடக்கியுள்ளது(அதீத இணையதள பயன்பாடு, பொய்யான தகவல் மற்றும் மக்கள் தீய வழிக்கு செல்வதைக் தடுப்பதற்காக)

 

 • அமெரிக்க அரசு ஈரான், ஈராக், சோமாலியா, சூடான், சிரியா, மற்றும் ஏமன் போன்ற 11 நாடுகளை சேர்ந்த அகதி மக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதித்திருந்தது. இந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • 20 ஆண்டுகளுக்குப் பின் உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்

 

 • 2015-16 நிதியாண்டில் 2 கோடி பேர் மட்டுமே வருமான வரியைச் செலுத்தி உள்ளனர் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது

 

 • மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய பணிக் காலம், பணிப் பயன்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் ‘இ-எச்ஆர்எம்எஸ்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது

 

 • 1975ம் ஆண்டு எமர்ஜென்சியை அமல்படுத்திய போது சிறையில் அடைப்பட்டவர்களுக்கு சுதந்திரபோராட்ட வீரர் அந்தஸ்து வழங்க மராட்டிய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • அனைத்து அரசு சாரா தொண்டு நிறுவனங்களும்(என்ஜிஓ) அங்கீகரிக்கப்பட்ட 32 வங்கிகளில் இன்னும் ஒரு மாதத்துக்குள் கணக்கு தொடங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

 

 • ஆக்ரா – கான்பூர்(உத்தரபிரதேசம்) மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்

 

 • பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான புதிய நடத்தை நெறிமுறைகளும், விதிகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், செயல்பாடுகள் கொள்கைகளை விமர்சிக்கவும், குறை கூறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • நாடு முழுவதும் 21 அணு உலைகள் தொடங்கப்படும் என்று அணுசக்தித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஐசிசி, டுவென்டி-20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2வது இடத்தில் உள்ளது

 

 • ஐரோப்பிய கண்டத்தில் 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படும் ஆல்ஃப்ஸ் மலையில்(சுவிட்சர்லாந்து) கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் ஸ்மித், அப்ரிடி, சேவாக் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு ‘செயின்ட் மோரிஸ்’ தொடர் என்று பெயரிடப்பட்டுள்ளது

 

 • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான டேரன் லேமன், 2019 ம் ஆண்டில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்

 

 • 19 வயதிற்குட்பட்ட தமிழக கிரிக்கெட் அணிக்கு கவிமேகன் என்ற மாணவன் (கிருஷ்ணகிரி) தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய முயற்சியாக 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றது

 

 • இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • வானத்தில் வண்ண மயமான நட்சத்திர ஒளி பிழம்புகளை ‘ஹப்பிள்’ தொலைநோக்கி மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது

 

 • மென்மையான மற்றும் மீள் தன்னை உடைய குண்டு துளைக்காத ஆடையை(2 படையிலான கிரபீன்களை கொண்டது) விசேட விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் குழு(நியூயார்க்) உருவாக்கியுள்ளனர்

 

 

புதிய நியமனம்

 

 

 • இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக, ஜெய்ராம் தாக்குர் நாளை (டிசம்பர் 27)  பதவியேற்கவுள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 26 – சுனாமி பேரலையின் நினைவு தினம்(13ம் ஆண்டு)

 

வர்த்தக செய்திகள்

 

 

 • 2016 – 17ல் ஏற்றுமதி செய்வதில் ஒடிசாவை முதன்மை மாநிலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது

 

 • மத்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) ஆகியவை, இயற்கை எரிவாயுப் போக்குவரத்து மற்றும் விற்பனைத் துறையில் ஈடுபடவுள்ளது

 

 • நவரத்தினங்கள் மற்றும் ஆபரண துறையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை ஏற்றுமதி சரிவடைந்துள்ளது

 

 • டிசம்பரில் அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து 7,300 கோடி ரூபாய் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளது

 

 • மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • Jitendra Singh the union minister of state the ministry of Development of North Eastern Region has launched electronics – Human Resource Management system in New Delhi.

 

 • Hondo Motor is planning to set up a lithium-ion battery manufacturing unit in India with the main aim to move only potential electric vehicles on roads by 2030.

 

 • India is all set to get its first runway on a ‘Sea bridge’ as the Airports Authority of India has been given nod to extend Lakshadweep’s Agatti Airport

 

 • The world’s longest glass bridge opened in China to the public. It is located in Shijiazhang.

 

 • Vijay Rupani was sworn in at a grand ceremony in the state capital of Gandhinagar as the CM of Gujarat State.

 

International News

 

 • The UN General assembly has decided to mark the 100th anniversary of Nelson Mandela’s focusing on world peace the summit will be called “Nelson Mandela peace summit”

 

 • Belgium appoints world’s first ever female ambassador to Saudi Arabia. Dominique Mineur who currently serves as the European nations ambassador to the UAE.

 

Economy

 

 • According to Japanese financial services major Homura’s composite leading Index 7.5% in 2018.

 

Sports

 

 • India finished runners up after going down 1-0 to Bangladesh in the final of the SAFF U15 women’s championship in Dhaka Bangladesh.

 

Obituary

 

 • Bengali film icon Partha Mukhopadhyay passes away at 70.

 

Books

 

 • The way I see it – a Gauri Lankesh

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube