December 24

Date:24 Dec, 2017

December 24

 

We Shine Daily News

டிசம்பர் 24

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘டெம்பின்’ என்ற புயல் தாக்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் ‘கய்டாக்’ என்ற புயல் அந்நாட்டை தாக்கியுள்ளது.

 

 • அஜ்மானில் நேற்று (23-12-2017) சர்வதேச குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

 

 • ஜப்பானில் வரலாறு காணாத அளவில் பிறப்பு சதவீதம் வெகுவாக குறைந்து வருகிறது.

 

தேசிய செய்திகள்

 

 

 • குஜராத் மாநில முதல்வராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் ரூபானி வரும் டிசம்பர் 26ம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

 

 • பல்வேறு பொருள்களுக்கான சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னரே தயாரிக்கப்பட்ட பொருட்களில் புதிய எம்ஆர்பி (அதிகபட்ச சில்லறை விலை) ஸ்டிக்கரை ஒட்டுவதற்கான காலக் கெடு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ராம் விலாஸ் பாஸ்வான் (மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியாவிலேயே முதல் அதிநவீன மெட்ரோ வழித்தடமான, “தில்லி மெஜன்டா லைன் மெட்ரோ” (ஓட்டுநரே இல்லாத மெட்ரோ ரயில்) வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (25-12-2017) தொடங்கி வைக்கிறார்.

 

 • நாடு முழுவதும் 2006 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை 11 லட்சம் உயர்ந்துள்ளதாக மத்திய நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • நுரையீரல் பராமரிப்பு அறக்கட்டளை மற்றும் பெட்ரோனட் எல்என்ஜி என்ற அமைப்பு டெல்லியில் 5,300 குழந்தைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நுரையீரல் வடிவம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

 

 • வடஇந்தியாவில் முதல்முறையாக சோஷியல் மீடியா (பேஸ்புக்) மூலமாக காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • பிசிசிஐ அமைப்பின் கிரிக்கெட் செயல்பாட்டு பிரிவு பொது மேலாளராக சபா கரீம் (இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • ஆசிய பசிபிக் குத்துச்சண்டை போட்டியில் விஜேந்திர சிங் (இந்தியா) தொடர்ந்து 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

 • 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனிஉலக கோப்பை வரை டோனி நீடிப்பார்” என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

 • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிமிட்ரி ரோகோஜின் (ரஷ்ய துணை பிரதமர்) மோடியையும் (பிரதமர்) சுஷ்மா சுவராஜையும் (மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்) சந்தித்தார்.

 

புதிய நியமனம்

 

 

 • யுனிசெஃப் அமைப்பின் செயல் இயக்குநராக ஹென்ரீட்டா ஹெச் ஃபோரேவை (அமெரிக்கா) ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் நியமித்துள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

 

 • பணமதிப்பு நீக்கத்துக்கு பின்னர் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 19.5 சதவீதம் அதிகரித்திருப்பதாக நிதித்துறை இணையமைச்சர் “ஷிவ் பிரதாப் சுக்லா” தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியாவின் முதலாவது குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்டெக்கான் தனது சேவையை 10 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியுள்ளது.

 

 • இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைந்துள்ள காரணத்தால் கல்வி கடன் பிரிவில் இருக்கும் வாராக்கடன் அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் 47 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • உலகளவில் மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் அதிகளவு மொபைல் டேட்டா பயன்படுத்திய நாடாக இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

 

 • விண்வெளியில் சுதந்திரமாக வலம் வந்த முதல் வீரர் என்ற பெருமைப் பெற்ற புரூஸ் மெக்கண்டில்ஸ் கடந்த 21ம் தேதி காலமானார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவர் விண்வெளியில் வலம் வந்த ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 24முகமது ரஃபியின் (பிரபல இந்தி பாடகர்) பிறந்த நாள்

 

 

English Current Affairs

National News

 

 • The seventh edition of the India International Coffee Festival (IICF) will be held in Bengaluru.

 

 • Maharashtra set to generate 25,000MW electricity through solar power.  Rather Maharashtra as a state tops in generating power through renewable energy around 7500 MW.

 

 • PM Modi held telephonic talks with Nepali congress president Sher Bahadur Deuba, assures assistance for peace and development of Nepal.

 

 • Union Home Minister Rajnath Singh said the SSB is strengthening its position in Sikkim and Bhutan border area after Doklam issue between India and China.

 

International News

 

 • External Affairs Minister Sushma Swaraj is holding a meeting of the India-Russia Inter-governmental commission on Trade, economic, science technology and cultural co-operation

 

Banking

 

 • Airtel Payments Bank CEO Shashi Arora has quit the company after a recent controversy surrounding India’s largest telecom operator.

 

 • SBI Card, the credit card issuer and Bharat petroleum the leading petroleum company in India announced the launch of the BPCL SBI Card the most rewarding fuel co-branded credit card in the country.

 

 • India’s largest Mortgage lender HDFC has sold its realty business HDFC Reality and its digital real estate business HDFC developers to online classifieds player Quikr.

 

Appointment

 

 • Lieutenant general B.S.Sahrawat took over the reins of National Cadet Corps as its Director general.

 

 • Shri. M. Subbarayudu presently joint secretary in the ministry of external affairs has been appointed as the next ambassador of India to Republic of Peru.

 

 

 

 

­

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube