August 31

Date:31 Aug, 2017

August 31

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  31

                                          தேசிய செய்திகள்

 

 

 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைகோளை பி.எஸ்.எல்.வி.சி39 ராக்கெட் மூலம் இன்று(செப்டம்பர் 1) விண்ணில் செலுத்தியது.

 

 • பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஓபிசி பிரிவினர் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஆண்டு வருமான உச்சவரம்பு முறையை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

 • அரசு நலத்திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கி வருகிறது. இந்த நலத் திட்டங்களை பெற மக்கள் தங்கள் ஆதார் விவரத்தை அரசுக்கு அளிப்பதற்கு விதிக்கப்பட்ட இறுதி காலக்கெடு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • இந்திய இராணுவத்தில் 57000 அதிகாரிகள் மற்றும் இதர ஊழியர்கள் பணியிடங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • கோரக்பூர் மருத்துவமனையில் இந்த மாதம் (ஆகஸ்ட்) மட்டும் 290 குழந்தைகள் உயிரிழந்தது கண்டறிப்பட்டுள்ளது.

 

 • நாடு முழுவதும் 3 கோடியே 35 லட்சம் பேர் ஆதார் கார்டு எண்ணை தங்கள் பான் கார்டு எண்ணுடன் இணைத்துள்ளனர். இதற்கான காலக்கெடு இன்றுடன்(ஆகஸ்ட் 31) நிறைவடைகிறது.

 

 • ரேஷன் கடைகளில் நாளை (செப்டம்பர் 1) முதல் ஸ்மார்ட் கார்டு மூலமாக பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • இந்தியா மற்றும் கனடா இணைந்து செப்டம்பர் 21ம் தேதி தபால் தலை வெளியிட உள்ளது.

 

 • தென் கொரியாவின், அமெரிக்காவிற்கான தூதராக சோ யோன் ஜே நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • சர்வதேச மோட்டார் சைக்கிள் சந்தையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2016-2017 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 1.75 கோடி மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

 • ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சர்வதேச இறுதிச் சடங்கு மற்றும் இடுகாடு கண்காட்சி இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது.

 

 • ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 8400ல் இருந்து 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது

 

 • ஹஜ் புனித யாத்திரை – உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் மார்க்கக் கடைமையை நிறைவேற்றுவதற்காக் மெக்காவில்(சவுதி அரேபியா) உள்ள புனித ஆலயமான கஃபத்துல்லரிஹில் ஆண்டுக்கு ஒருமுறை கூடுவது இந்த பயணமாகும்.

 

 • தென்கொரியாவின் ஜப்பானுக்கான தூதராக லீ சூஹீன் மற்றும் சீனாவுக்கான மூத்த தூதராக நோஹ் யாங்கின் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 • 3 மைல் அகலம் கொண்ட எரிகல் (நாளை)செப்டம்பர் 1 பூமியின் அருகாமையில் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது

 

 • இடைமறித்து அழிக்கும் ஏஜிஸ் ஏவுகணை தெழில்நுட்ப சோதனையில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளது.

 

 • ஆகஸ்ட் 30 (நேற்று) “சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக” அனுசரிக்கப்பட்டது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை விழ்த்தி சாதனைப் படைத்துள்ளது.

 

 • கோவையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைபந்து போட்டியில் ராணுவம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிகள் மோதுகின்றன.

 

 • தென் ஆப்பிரிக்க அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல் – ரவுண்டர் ஒட்டிஸ் கிப்சன் நியமிக்கப்படடுள்ளார்.

 

 • சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர் சர்ஜீல் கான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு 5ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 2019க்குப் பிறகு சர்ஜீல் கான் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தவிட்டுள்ளது.

 

 • கொழும்புவில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு 300 வது ஒரு நாள் போட்டி ஆகும்

 

 • நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார். 

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பபடும் அறைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • “உபெர் டெக்னாலஜீஸ்” நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஒ) டாரா கோஸ்ரோவ்ஷாஹி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • உபெர் நிறுவனம் ஐசிஐசிஐ லம்பார்டு காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து உபெர் டிரைவர் பார்ட்னர்களுக்கு பிரத்யேக காப்பீடு அறிமுகம் செய்துள்ளது.

 

 • சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.ரத்தினவேல் பாண்டியன் ‘என் வாழ்க்கை பயணம் ஏ முதல் இசட்’ என்ற சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.

 

 • பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் ஒரு சதவீத பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 • குளிர் சாதன வசதியுடன் கூடிய ஆட்டோவை டிவிஎஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

 

 • தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற திருமணத்தில் 24 கேரட் மதிப்பிலான தங்க சாப்பாடு செய்து சமையற் கலைஞர் சாதனைப் படைத்துள்ளார்.

 

 

Current Affairs

 

 • Union minister of youth affairs and sports Minister Vijay Goel announced that the first edition of Rural Games will be held in Delhi.

 

 • Ten year term for self styled Goodman Gurmeet Ram Rahim.

 

 • Konkani writer Mahabaleshwar Sail (74) was bestowed with prestigious “Saraswati  Samman 2016”. He was awarded for his novel “Hawthan”

 

 • Shri Rajiv Gouba took over as secretary to the government of India.

 

 • Unicity International, headquartered in Orem, Utah, United states launched world first ever Genomeceutical range of products to India.

 

 • Ujjivan small finance Bank receives Schedule Bank status from Reserve Bank of India.

 

 • DR. RK. Raghavan appointed as the next commissioner of India to Cyprus.

Call Now
Message us on Whatsapp