August 30

Date:30 Aug, 2017

August 30

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  30

                                          தேசிய செய்திகள்

 

 

 • சீனாவில் செப்டம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலங்து கொள்கிறார்.

 

 • மும்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக மும்பை வானிலை மையம் தெரிவித்துள்ளது

 

 • இந்தியா முழுவதும் சாதனைப் படைத்த 12 மகளிருக்கு தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி “விமன் டிரான்ஸ் ஃபார்மிங் இந்தியா” எனும் விருதுகளை வழங்கினார்.

 

 • 2022ம் ஆண்டுக்குள்அனைவருக்கும் வீடுகள் வழங்க இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

 

 • குடும்ப உறவினர்களுக்குள் உடல் உறுப்பு தானம் திட்டத்தில் தற்போது வளர்ப்பு தாய் மற்றும் வளர்ப்பு குழந்தைகளும் இடம் பெறுவார்கள் என்று மத்திய அரசு புதிய சட்டத்தை அறிவித்துள்ளது.

 

 • உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.

 

 • மாவட்ட தாலுகா அளவிலான நீதிமன்றங்களில் அடுத்த மாதம்(செப்டம்பர்) 17ம் தேதி முதல் தேசிய லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெறும் என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலர் நீலு மெயின்வால் தெரிவித்துள்ளார்.

 

 • மத்தியக் கொள்கைக் குழு சார்பில் வெளியிடப்பட்ட மூன்றாண்டு செயல்திட்ட வரைவு அறிக்கையில், நாட்டில் உள்ள செயல்பாடற்ற அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்தியக் கொள்கைக் குழு (நிதி ஆயோக்) பரிந்துரைத்துள்ளது.

 

 • தேசிய பசுமை தீர்ப்பாயம், பசுமைத் தீர்ப்பாய வழக்குகளை இணையதளம் மூலம் தாக்கல் செய்யும் நடைமுறையை (e-Filing) செப்டம்பர் 2ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது என தென்னிந்திய பசுமைத் தீர்பாயத்தின் நீதிசார் உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

 

 • நாட்டில் உள்ள அனைத்து மாநில வாக்காளர் பட்டியல் தகவல்களும் “இஆர்ஓ – நெட்” என்ற தேர்தல் ஆணையத்தின் தகவல் தொகுப்பு மையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அங்கு எளிதாக பெயர் சேர்க்க, நீக்க முடியும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • அமெரிக்காவைத் தாக்கிய ஹார்வி புயலைத் தொடர்ந்து பெய்த மழை கடந்த ‘500 ஆண்டுகளில் காணாத மழை’ என்று அமெரிக்க வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 • ஸ்காட்லாந்து மற்றும் எடின்பரோவை இணைக்கும் வகையில் ஃபோர்த் ஆற்றின் மீது குயின்ஸ்ஃபெரி க்ராசிங் பாலம் (இரண்டே முக்கால் கிலோ மீட்டர் நீளம்) கட்டப்பட்டுள்ளது

 

 • வெடி குண்டுகளின் வாசனையை கண்டறியும் புதிய கணினியை “கொனிகு கோர்” நைஜீரியாவின் ஓஷி அகபி கண்டுபிடித்துள்ளார்.

 

 • அமெரிக்காவின் சைரகஸ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியரராக பணியாற்றும் சாம் வான் அகேன் ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கும் அதிசய மரத்தை உருவாக்கி சாதனைப்படைத்துள்ளார்.

 

 • 900 கோயில்கள் உள்ள உலகில் அதிசய மலை – இந்தியாவை சேர்ந்த குஜராத் மாநிலத்தின் ஷத்ருஞ்ஜய் மலை.

 

 • ஈராக்குடன் கொண்டுள்ள வர்த்தகத்தின் அடிப்படையில் கடந்த 2015ம் ஆண்டிற்கு பிறகு ஜோர்டான் நாடு தற்போது எல்லையை திறக்கிறது

 

 • ஐ.நா. சபையின் தடையை மீறி வடகொரியா மீண்டும் சக்தி வாய்ந்த புதிய ஏவுகணை சோதனையை நேற்று(29.08.2017) மேற்கொண்டுள்ளது.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று (ஆகஸ்ட் 29) வழங்கினார்.

 

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் வீராங்கணை வீனஸ் வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்குபெற்று 20வது ஆண்டை நிறைவு செய்கிறார். (1997ம் ஆண்டு தனது 17வது வயதிலே அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டார்)

 

 • 19வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் கவுரத் அரை இறுதிக்கு முன்னேறி, தனக்குண்டான வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார்

 

 • அமெரிக்காவில் நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மரியா மற்றும் அமெரிக்காவின் வில்லியம்ஸ் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றிப்பெற்றது.

 

 • இந்தோனேஷியாவில் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற்ற ஆசிய பள்ளிகளுக்கிடையேயான டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் திருச்சி மாணவர் ராஜேஸ் கண்ணன் வெண்கலப்பதக்கம் வென்றார்.

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • ஜி.எஸ்டி.வரி மூலம் ஜுலை மாதத்தில் மட்டும் 92,283 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 

 • என்டிபிசி என்னும் பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமானது மத்திய அரசின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து ரூ 7,800 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

 

 • டயர் தயாரிப்பில் முக்கிய நிறவனமான எம்ஆர்எப் புதிதாக பர்ஃபின்ஸா என்கிற ப்ரிமியம் வகை டயரை அறிமுகம் செய்துள்ளது.

 

 • வேலை வாய்ப்பு தொடர்பாக நிதி ஆயோக் தனது இறுதி அறிக்கையை அரசுக்கு ஆகஸ்ட் 31ம் தேதி அறிவிக்க உள்ளது.

 

 • கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை ரீசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் வீடியோகான், ஜேபி, காஸ் டெக்ஸ், யுனிட்டி இன்பிரா புராஜெக்ட்ஸ் உள்ளிட்ட 40 நிறுவனங்களின் பெயர் இடம் பெற்றுள்ளன.

 

 • வரிநிலுவை காரணமாக வோடபோன் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.7,900 கோடி அபராதம் விதித்துள்ளது.

 

 

Current Affairs

 

 • The Indian National Centre for Ocean Information Services (INCOIS) of the Ministry of Earth Science here inaugurated the Ocean Forecasting System for  The Indian Ocean countries Comoros, Madagascar and Mazambique at Papua New Guinea

 

 • UN opens Atomic fuel Reserve in Kazakhstan to ensure supply

 

 • Ministry of Textiles decided to organize Pan India Camps in handlooms and handicrafts clusters under the initiative – Hastkala Sahyog Shivir doing 7th – 17th Oct

 

 • Uber Selected Dara Khosrowshahi as its New CEO

 

 • The Delhi Police launched Yuva a skill development programme under Pradhan Manthi Kaushal Vikas Yojana to connect youth by upgrading their skill to gain employment

 

 • Finance Minister Arun Jaitely announced GST earnings across target in maiden Month Rs.92,283 crore collected in July

 

 • The National Research Development corporation the technology transfer and commercialization arm has won two awards. It has won the Assoc ham Service Excellence award and its chairman Mauaging Directors H.Purusotham with International Association of Advanced Material.

 

 • International Atomic Energy has opened world’s first low Enriched Uranium Bank in Oskemen in Kazakhstan

 

 • The union ministry of Earth Science is going to launch Deep Ocean Mission by Jan 2018 to space research activities in Ocean Science 

Call Now
Message us on Whatsapp