August 29

Date:29 Aug, 2017

August 29

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  29

                                          தேசிய செய்திகள்

 

 

 • இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி.சி – 39 ராக்கெட், ஆகஸ்ட் 31ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.

 

 • நாட்டில் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்ததாக பிரதமர் நரேந்திர தெரிவித்துள்ளார்

 

 • கரூர் மாவட்டம் மாயனூர் முதல் காவிரி ஆற்றுப்பகுதி வரை மணல் அள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிப்பு செய்து உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • இரயில்வேயில் கடைநிலை ஊழியர்களை அதிகாரிகள் தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்த கூடாது என்று இரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் லோஹானி தெரிவித்துள்ளார்.

 

 • மத்திய அரசு தேசிய தகவலியல் மையத்தின் மூலம் @gov.in என்ற டொமைனில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மின்னஞ்சல் ஐ.டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

 

 

 • தமிழகத்தில் ஆடித் திருவிழா போல, தெலுங்கான மாநிலத்தில் பதுகம்மா பண்டிகை கொண்டாடப்படுகிறது.

 

 • உலகின் மிகப் பெரிய சமையல் கூடம் – (இந்தியா) பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர் அம்ரித்சரில் உள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்ற கோயிலில் உள்ளது. இந்த கோயிலில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டுள்ளதால் “பொற்கோயில்” என்று அழைக்கப்படுகிறது.

 

 • 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கங்களை பெற்ற தந்த ஹாக்கி வீரர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 29 ) தேசிய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 

 • சீனாவில் தேசிய கீதத்தை எங்கு பாடவேண்டும் எவ்வாறு பாட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய தேசிய கீத சட்டத்தை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது.

 

 • கென்யாவில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

 

 • சீன இராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லீ ஜுவோசெங் நியமிக்கப்பட்டார்.

 

 • உலக அளவில் செல்வாக்கு நிறைந்த நாடுகளின் பட்டியலில் கனடா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 7வது இடத்தை பிடித்துள்ளது.

 

 • கனடாவில் டோஸ்ட மாஸ்டர்ஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பின் சார்பாக நடைபெற்ற சர்வதேசப் பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவழியை சேர்ந்த மனோஜ் வாசுதேவன் தங்கப் பதக்கம் வென்றார்.

 

 • சீனாவின் பீஜிங் நகரில் உலக ரோபோ கண்காட்சி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கண்காட்சிக்கென வைக்கப்பட்டது.

 

 • லண்டன் நகரில் நடைபெற்ற மென்ஸா ஐ.கி.யூ(அறிவுத் திறன்) போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லிடியா செபஸ்டியன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

 • அகஸ்ட் 29(இன்று) சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • அரைஸ் ஸ்டில் – தமிழ்நாடு விளையாட்டு பத்திரிக்கையாளர் சங்கம் (டிஎன்எஸ்ஜேஏ) சார்பில் தழிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தடகள வீரர் லட்சுமணன் ஆகியோருக்கு 2017ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

 

 • ஐபிஉல் தொடரின் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா, செக் குடியரசு பிளிஸ்கோ ஆகியோர் வெற்றி பெற்றனர்.

 

 • உலக குத்துச் சண்டை போட்டியில் 2வது சுற்றில் இந்திய வீரார்கள் அமித் பான்கல், கவுரவ் பிதுரி ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

 

 • பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைபந்து போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் ஆர்.சி.எஃப். புணே மற்றும் இந்திய ராணுவ அணிகள் வெற்றி பெற்றனர்.

 

 • திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடர் – இலங்கை அணியை தொடர்ச்சியாக 8 முறை வீழ்த்தி இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • நைஜீரியா நாட்டிற்கு 593 மில்லியன் டாலர் மதிப்பில் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

 

 • பணியாளர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் பணப் பயன்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும் என்று மத்திய உற்பத்தி மற்றும் சுங்கத் துறை (சிபிஇசி) தெரிவித்துள்ளது.

 

 • சொகுசு கார்களுக்கான கூடுதல் வரியை 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • உலகிலேயே முதன் முறையாக வைர முன் – பேர சந்தை – மும்பையில் எம்.எம்.டி.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து ஐ.சி.இ.எக்ஸ் சந்தையை நேற்று(28.08.2017) துவக்கியது

 

 • ரூ.50000 க்கும் மேல் நகை வாங்குபவர்களுக்கு பான் கார்ட் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் தற்போது எந்த நகை வாங்குவதற்கும் பாண் கார்ட் கட்டாயமாக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக நிதி குறித்த கட்டுப்படிகளை விதிக்கும் குழு அறிவித்துள்ளது.

 

 • பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனோ நிறுவனம் நடப்பு ஆண்டில் “கேப்சர்” என்று புதிய வகை சொகுசுக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

 

 

Current Affairs

 

 • Tata Sons announced the appointment of Roopa Purrusothaman as its chief economist and head of policy Advocacy

 

 • Nitasha, a trans woman from Kolkata was named the First Miss Transqueen India in Gurgoan

 

 • National Sports day – 29 Aug celebrated to mark the birthday of Dhyan – Chand

 

 • India and Germany Signed agreement to Improve grid Integration of renewable energy

 

 • Kenya Imposed world’s toughest law that selling and using Plastic will risk imprisonment up to four year or fine $ 40000.

 

 • India’s two time Olympic footballer and East Bengal legend Ahmed Khan passes away

 

 • Bharathi Entered into a Partnership with Symantec Corporation to project businesses in India from online threat

 

 • PM Narendra Modi inaugurates Various National Highway projects in Rajasthan

 

 • Karnataka tourism department launches Dasara package on Golden chariot

 

 • The Indian commodity Exchange (ICEX) landed world first diamond future contract

 

 • India’s football team won the South Asian Football Federation (SAFF) under U-15 championship

 

 • Bangladesh’s Foysal Ahmed declared as the top Scorer of the SAFF tournament

 

 • India’s Pratap Singh was chosen as Best player of the tournament

 

 • Lawis Hamilton won 58th career race and got Belgian Grand prix title  

   

Call Now
Message us on Whatsapp