August 27

Date:27 Aug, 2017

August 27

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  27

                                          தேசிய செய்திகள்

 

 

 • மத்திய அரசுத்துறைகளின் செயல்பாடுகள் அனைத்தையும் நிகழாண்டு இறுதிக்குள் கணினிமயமாக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலன் – குறை தீர்ப்பாய்த்துறை இணையமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

 

 • தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் செல்லிடப்பேசி பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட இருப்பதாக மாநில சிறைத் துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

 

 • மாணவர்களுக்கு சிப் பொறுத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவர்கள் எங்கு செல்கின்றனர் என்பதை பெற்றோர்கள் தங்கள் செல்போனின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

 

 • செப்டம்பர் 1ம் தேதி முதல் ஓட்டுனர்கள் தங்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

 

 • தமிழக அரசின் இணை செயலராக இருந்த ஆஷிஷ்குமார், இணைமந்திரி அலுவலக சிறப்பு அதிகாரியாகவும், பிரதமர் அலுவலக சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • அகில இந்திய டென்னிஸ் அசோசியேஷனுக்கு மத்திய விளையாட்டுத்துறை அங்கீகாரம் கொடுத்துள்ளது

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • பாகிஸ்தானில் 19 ஆண்டுகள் கழித்து நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் தொகை 57 சதவீதம் உயர்ந்து 20.78 ஆக அதிகரித்துள்ளது.

 

 • குடிநீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால் டிமனெஷியா (மறதி நோய்) ஏற்படுவது குறையும் என்று டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

 • 60000 வருடங்களாக வெளி உலக தொடர்பில்லாமல் வாழும் தீவு – அந்தமான் நிக்கோபார் தீவு (பழங்குடி மக்கள் இன்றும் இத்தீவில் வசித்து வருகின்றனர்)

 

 • இலங்கையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு முதல் முறையாக 119000 ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • இரயில் விபத்தில் இரு கைகளை இழந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து பிரான்ஸ் மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

 

 • முகத்தில் முடி, மச்சம், தோல் நோய் மற்றும் மாறுகண் இருந்தால் ஆசிரியர் பணி கிடையாது என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது

 

 • சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் குடையையும் ரெயின் கோட்டையும் இணைத்து “டூ இன் ஒன் குடை” ரெயின்கோட்டை சீனர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • 74 வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோஸ்னா 15வது முறையாகவும், சௌரவ் கோஷல் 12வது முறையாகவும் ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றனர்.

 

 • 19வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 49 கிலோ உடல் எடைப் பிரிவில் இந்திய வீரர் அமித் பான்கல் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

 

 • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 • ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சாய்னா வெண்கலப் பதக்கம் வென்றார்

 

 • அமெரிக்காவை சேர்ந்த தொழில்முறை குத்து சண்டை வீரரான பிளாய்ட் மேவெதர் தொடர்ந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனைப் படைத்துள்ளார்.

 

 • தென் மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதக்கங்களை வழங்கினார்

 

 • இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனான உபுல் தரங்காவுக்கு 2 ஒரு நாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டனாக கபுகேதரா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரி மைதானத்தில் நேற்று(26.08.2017) தொடங்கியது

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 

 • கணினிகள் மற்றும் பிரிண்டர்கள் விற்பனை செய்வதில் அமெரிக்க ஐடி நிறுவனமான எச்பி முன்னிலை வகிக்கின்றது.

 

 • தங்கம் இறக்குமதியில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. தென் கொரியாவிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது.

 

 • புதிய 200 ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம் மூலம் விநியோகம் செய்யப்படுவது தாமதம் ஆகும் என்று சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 • தமிழகத்தில் காற்றின் வேகம் குறைந்ததன் விளைவாக காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வது குறைந்துள்ளது.

 

 • “கூகுள் ஆண்ட்ராய்ட் ஓ” தொழில் நுட்பம் “ஆண்ட்ராய்ட் ஒரியோ” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது(கூகுள் நிறுவனம்)

 

 

Current Affairs

 

 • Google has brought its public Wi-Fi programme ‘Google station’ to Indonesia that will help Improve access to Internet at railway stations and other locations.

 

 • The 23rd Edition of annual Delhi book fair begins at Progathi Maidan. It is organized by the India Trade promotion organization in association with the Federation of Indian publishers.

 

 • Taiwan has launched formosat – 5, the first homegrown observation satellite, from an airbase in the US, the island National Space organization announced.

 

 • Real Madrid’s star cristiano Renaldo deserves the UEFA player of the year award.

 

 • London to host 2018 Table Tennis Team world cup.

 

 • Mr.Raghuram Rajan pens Book ‘I do what I do’.

 

 • India’s oldest cinematographer Ramanada sengupta Died.

 

 • Vice president to launch sports Talent portal on Aug 28.

 

 • Manipur’s Nungthaag Tampak village has Emerged North East first 100 computer literate award.

 

 • E-waste removal from Kerala has begun with about 12,500 kg being disposed statewide.

 

 • Jammu and Kashmir government decided to build an Eco-park. It will have a botanical garden, cactus garden a cafeteria and other amenities.

 

 • In a first, Nepal launched its climate-smart snow leopard landscape management plan leading the way in safeguarding this endangered species also found in India.

Call Now