August 25

Date:25 Aug, 2017

August 25

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  25

                                          தேசிய செய்திகள்

 

 

 • குஜராத் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியும், கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 • ஆற்று மணலுக்கு மாற்றாக தயாரிக்கப்படும் “எம் சேண்ட்” (நல்;ல உறுதியான கற்களை எந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மணல்) விழப்புணர்வு பற்றிய புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்

 

 • சரக்கு ஏற்றி செல்லும் வாகனத்தின் அளவைத் தாண்டி சரக்குக்களை ஏற்ற வாகனங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

 

 • தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் ‘ஆரோக்கியம் அண்ட் ஃபிட்நெஸ் எக்ஸ்போ’ மருத்துவக் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆகஸ்ட் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறுகிறது.

 

 • கடந்த எட்டு மாதங்களில் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 22,186 பேர் எனவும் இதில் 1094 பேர் உயிரிழந்தனர் எனவும் பிடிஐ செய்தி நிறுவனம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

 

 • பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் சர்வதேச கருத்தரங்கு(பனை வளத்தின் மகிமையை உலகறியச் செய்வோம்) கொழும்பில் ஆகஸ்ட் 25 இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது

 

 • மோட்டார் வாகன ஓட்டிகளிடமிருந்து போக்குவரத்து காவல் துறையினர் லஞ்சம் வாங்குவதை கண்காணிக்கும் விதமாக காவலர்களின் புதிய மோட்டார் சைக்கிள்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

 

 • காவலர் உடற்தகுதி தேர்வில் திருநங்கை ஜெகதீஸ்வரன் என்ற நஸ்ரீயா பங்கேற்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 • சீனாவின் ஷாங்காய் மாநகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் “இதோசுரியூ” உலகக் கராத்தே சுற்றுப் போட்டியில் முதன்முறையாக சுவிட்சர்லாந்து ஈழத்தமிழ் இளையோர்கள் வெற்றி பெற்றனர்.

 

 • ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு குழந்தை பிரசவிக்கும் காலத்தில் தாய், தந்தை இருவருக்கும் 56 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கும் சலுகையை அறிவித்துள்ளது.

 

 • ஐ.நா. சபையின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையை மேற்கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா வடகொரியா மீது போர் தொடுத்தால் அமெரிக்காவிற்கு ஜெர்மனி ஆதரவு அளிக்காது என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார்.

 

 • மலேசியாவின் பேராக்கில் உள்ள சுல்தான் இத்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தினமலர் இணைந்து நடத்தும் “உலகத் தமிழ் இணைய மாநாடு” இன்று (ஆகஸ்ட் 25) முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

 • சீனாவின் ஷாங்காய் நகரில் விலங்குகள் சுகாதார மையம் ஒன்று நாய் மற்றும் பூனைகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளித்துவருகிறது.

 

 • இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் அத்துமீறி நுழைபவர்கள் “அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் அவர்கள் சிறப்பு துப்பாக்கி வீரர்களால் சுட்டு கொல்லப்படுவார்கள் என அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.

 

 • சிரியாவில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாக்கா நகரில் ஒரே வாரத்தில் அமெரிக்க கூட்டுப் படை விமானங்கள் 250 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர் ரையன் டில்லன் தெரிவித்துள்ளார்.

 

 • சீனாவின் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டதை விமர்சித்த இலங்கை நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜ்பச்சேவை அந்நாட்டு அரசு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • இலங்கைக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

 

 • இந்தி கிரிக்கெட் வாரியம் “ஆண் பேரினவாத அமைப்பு” என பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் டயனா எடுல்ஜி கூறியுள்ளார்.

 

 • உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் இன்று ஆகஸ்ட் 25 தொடங்குகிறது.

 

 • “மிஸ்டர் தெற்கு ஆசியா” போட்டியில் மகுடம் சூடியவருமான மணிப்பூரைச் சேர்ந்த பிரதீப் குமார் சிங் பற்றிய சுயசரிதை புத்தகம் வெளியாகி உள்ளது

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • புதிய 200 ரூபாய் நோட்டு நாளை முதல் வெளியாகும் என்று ஆர்பிஐ அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

 

 • இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக நந்தன் நிலகெனி பொறுப்பேற்க உள்ளார்.

 

 • எடல்வைஸ் டோக்கியா ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வரும் 2012ம் ஆண்டுக்குள் ரூ.1000 கோடி பிரீமியம் ஈட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளதாக அந்நிறுவனதலைவர் ஒய்.எம். பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

 • ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இதுவரைக்கும் 20 லட்சத்திற்கும் அதிகமான தொழில்துறையினர் பதிவு செய்துள்ளனர் என்று ஜிஎஸ்டி வரி வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

Current Affairs

 

 • The 17th meeting of the financial stability and Development council (FSDC) was held in New Delhi

 

 • The central scheme SAMPADA scheme for Agro-marine processing and development of  Agro processing cluster got the cabinet approval for rename as Pradhan Mantri Kisan Sampada Yojana. The objective of the scheme is to supplement agriculture, modernize processing and decrease Agricultural waste.

 

 • Government has finalized new cadre policy of IAS, IPS and IFS officers aimed at ensuring national integration in the country’s top bureaucracy.

 

 • The Supreme Court has declared Right to privacy as a fundamental Right under constitution Article 21

 

 • The Indian coast guard ship ‘Varuna’ Decommissioned. It’s fourth in its series known as offshore patrol vessel (OPV)

 

 • Qatar Airways entered into new interline partnership with full service domestic airline Vistara.

 

 • Ashwani Lohani will be new chairman of Railway Board.

 

 • Odhisa chief minister Naveen Patnaik conferred the Biju Patnaik Award for Scientific Excellence for year 2016 to prof Digambar Behera.

 

 • Brian Aldiss the ‘grand old man’ of science Fiction has died at 92.

 

 • MOU between India and Nepal for laying down implement arrangement for construction of a closure of loss making Bharat Wagon and Engineering company.

 

 • MOU between India and Nepal on Drug Demand Reduction and prevention of Illicit Trafficking in Narcotic Drugs and Psychotropic substance and precursor chemical and related Matters.

   

   

   

Call Now
Message us on Whatsapp