August 24

Date:24 Aug, 2017

August 24

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  24

                                          தேசிய செய்திகள்

 

 • தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 4வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

 • நாட்டின் முதலாவது மக்களவையில் இடம் பெற்றிருந்த எம்.பி.யும், மணிப்பூர் முன்னாள் முதல்வருமான சிஷாங் கெய்ஷிங்(96) நேற்று(23.08.2017) காலமானார்.

 

 • இரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக ஏர் – இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஸ்வனி லோஹானி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • உலக அளவில் முதல் 10 மொழிகளில் தமிழைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

 

 • யமுனை நதியில் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பது மற்றும் குப்பைகளை கொட்டுவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் டெல்லி மாநில அரசு எந்தவொரு அறிக்கையும் தாக்கல் செய்யாததால் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

 

 • கடல்சார் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைக் கோள், பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 31ம் தேதி விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

 

 • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டும் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • பிற்படுத்தப்பட்ட மக்களின் வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • திருப்பத்தூர் அருகே உள்ள கோணப்பட்டு கிராமத்தில் சோழர் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

 

 • தமிழகத்தில் 21 வகையான அரிய மூலிகை தாவரங்கள் வளர்க்கும் திட்டத்தை தமிழக வனத்துறை செயல்படுத்தியுள்ளது.

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • உலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் ரயில்களை சீனா மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ரயில்களுக்கு “ஃபக்ஸிங்(புத்துயிர்ப்பு)” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

 • சவூதி அரேபியாவில், சாலையின் குறுக்கே நடனமாடிய 14 வயது சிறுவனை அந்நாட்டு போலிசார் கைது செய்தனர்.

 

 • வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டத்துக்கு உதவிய ரஷ்ய, சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

 

 • அமெரிக்காவின் பிரபல ‘போர்ப்ஸ்’ பத்திரிக்கை உலக அளவில் சினிமா துறையில் பணக்காரர்களுக்கான பட்டியலை நேற்று (23.08.2017) வெளியிட்டது. இதில் முதல் இடத்தை ஆலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க் பிடித்துள்ளார். இதில் முதல் 10 இடங்களுக்குள் இந்திய இந்தி நடிகர்கள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். பிரபல நடிகர் ஷாருகான் 8வது இடத்தில் உள்ளார்.

 

 • கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இயற்கை ஒளித் தொகுப்பினை அதிகரிக்க “சைபோர்க்” எனும் பாக்டீரியாக்களை உருவாக்கியுள்ளனர். இந்த பாக்டீரியாக்கள் அதிக அளவு சூரிய ஒளியை சோலார் கலங்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடியது.

 

 • இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள முஸ்லீம் தொண்டு நிறுவனம் 153.1 கிலோ எடையுள்ள மிகப்பெரிய சமோசா தயாரித்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.

 

 • ஆசியாவின் பொருளாதார மையமாக விளங்கும் ஹாங்காஹ் நகரை கடுமையான ஹாடோ புயல் தாக்கியது.

 

 • வடகொரியாவில் கூடுதலான ராக்கெட்டுகள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வெடிகுண்டுகள் ஆகியவற்றை தயார் செய்ய அந்நாட்டு ஜனாதிபதி “கிம் ஜங் உன்” உத்தரவிட்டுள்ளார்.

 

 • அமெரிக்காவின் தேசியப் பறவை வெண்தலை கழுகு. ஆலாஸ்காவிலுள்ள அனலாஸ்கா தீவில் இந்த கழுகுகள் வசிக்கின்றன.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஐரோப்பிய சுற்றுப்பயணம் : இந்திய பெண்களுக்கான ஹாக்கி அணி அறிவிப்பை “ஹாக்கி இந்தியா” அமைப்பு வெளியிட்டது.

 

 • உலக பேட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • ஜெர்மனி ஆண்கள் டென்னிஸ் தலைவராக “போரிஸ் பெக்கா” நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • கனெக்டிவ் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா(போலந்து) கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

 • சர்வதேச கால்பந்து ஆட்டத்தில் இருந்துஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் வெய்ன் ருனி ஓய்வு பெறுகிறார்.

 

 • இந்தியா – இலங்கை 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று(24.08.2017) நடைபெறுகிறது.

 

 • “ஸ்பார்டன் மார்ஷியல் ஆர்ட்ஸ்” அகாடமி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி திருத்தணியில்(21.08.2017) நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்குபெற்றனர்.

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்


 

 • அதிகப்பட்சமாக 31.84 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் பால் சாதனைப் படைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • பொதுத்துறை நிறுவனமான பாரத் வேகனை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

 • வைரஸ் அச்சுறுத்தல் உள்ள 500க்கும் மேற்பட்ட செல்போன் ஆப்களை, ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.

 

 • இந்திய கடற்படையை வலிமையாக்க மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 234 விமானங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளது.

 

 • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.64.05 ஆக உள்ளது.

 

 • “வேளான் ஸ்டார்ட் அப்” நிறுவனங்களுக்கு உதவ தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 • சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி எல் அன் டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட சி – 435, சி – 436 ஆகிய இரண்டு அதிநவீன ரோந்துப் படகுகள் இந்தியக் கடலோரக் காவல்படையிடம் நேற்று(23.08.2017) ஒப்படைக்கப்பட்டது.

 

 

Current Affairs 

 

 • Home Minister Rajnath Singh Launched Digital Police Portal under CCTNS (crime and criminal Tracking Network and systems) which will be useful all stakeholders including the policy makers

 

 • Cloud seeding project of Karnataka took off at Jakkur air field. The Project named Vardhashree has been fully operational and taken up for a period of today

 

 • NITI Aayog launched the Mentor India Campaign, a Strategic nation building initiative to engage leaders who can guide and Mentor Students at more than 900 Atal Tinkering Labs

 

 • The Indian council of Medical Research has signed an MOU with the International Vaccine Institute for collaborating on Vaccine research and development

 

 • Foreign Direct Investment, FDI, into the country grew by 37 percent to 10 (points) Four billion US Dollar during the first quarter of the current fiscal

 

 • Subroto Cup International football Tournamed Begau in Delhi

 

 • The Seventeenth Meeting of the Financial Stability and Development Council was held in New Delhi under chairmanship of union Minister of  Finance Arun Jaitely

 

 • The telecom Regulatory Authority of India has signed MOU agreement with the Malaysian communication and Multimedia commission to Strengthen the co-operation in the field of Broad casting and telecommunication Regulation

 

 • National Sports Award announced 2017

  Rajiv Gandhi Khel Ratna award – Jhajharia (Para – Olympian), Sardar Singh (Hockey)

  Arjuna awards

  Cricket – Harmanpreet kaue, Cheteswax pujara

  Shooter – PN Prakash, L.Devendro Singh

  Tennis – Sakesh Mymeni

  Football – Oinam Bembem

  Dronacharya awards

  R.Gandhi(Athletics)

  Heera Nand Kataria (Kabbadi)

  G.S.S.V.Prasad (Badminton)

  Briji Bhusan Mohanty (Boxing)

  P.A Raphel (Hockey)

  Snjay charkraverthy (shooting)

  Roshan Lal (wrestling)

  Dhyan Chand award

  Mr. Bhupendra Singh – Athletics

  Mr.Syed Shahid Hakim – Football

  Ms. Sumarai Tete – Hockey

   

   

   

Call Now
Message us on Whatsapp