August 23

Date:23 Aug, 2017

August 23

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  23

                                          தேசிய செய்திகள்

 

 

Bank Exam Coaching Center in Anna Nagar

 

 • ரசாயனம் சுத்திகரிக்கப்படாமல் கழிவு நீர் நதிக்குள் விடப்பட்டதாகவும், தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் டை பவுடர் – காற்றில் மாசைப் பெரிய அளவில் கலப்பதாலும் “டியுகோல் ஆர்கனிக்ஸ் & கலர்ஸ்” என்ற தனியார் நிறுவனத்துக்கு மகாராஷ்ரா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்தது.

 

 • முஸ்லீம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கப் பின்பற்றப்படும் முத்தலாக் முறை சட்டபூர்வமாக செல்லாதது என்று உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது

 

 • சென்னையிலிருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமான சேவை வருகிற 30ம் தேதி தொடங்குகிறது என்று தென்மண்டல ஏர் இந்தியா நிறுவன இயக்குனர் கேப்டன் அருள்மணி கூறியுள்ளார்.

 

 • பாஸ்போர்ட் விண்ணப்ப விவரங்களை காவல்துறை விசாரணையின்றி சரிபார்க்க – ஒரு ஆண்டிற்குள் புதிய சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி கூறியுள்ளார்.

 

 • தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொது தேர்வு முறையில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்.1 மற்றும் பிளஸ்.2 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11ம் தேதி தொடங்குகிறது.

 

 • மின் கம்பத்தில் வீட்டு விலங்குகளை கட்டியால் அபராதம் விதிக்கப்படும் என்று வேலூர் மின் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 • செப்டம்பர் முதல் வாகனம் ஓட்டும் போது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

 • லேசார் திட்டங்களிடமிருந்து குறைந்த கட்டணத்தில் மின்சாரம் பெறும் வகையில் புதிய வழிகாட்டு விதிமுறைகளை “லேசார் மின் உற்பத்தியை பெருக்கும் திட்டம்” மத்திய மின்சாரத்துறை உருவாக்கியுள்ளது.

 

 • திறந்தவெளி பள்ளித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று திறந்தவெளி கற்றலுக்கான தேசிய நிறுவனத்தின் (என்ஐஒஎஸ்) மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 

 • அமெரிக்காவில் திங்கட்கிழமை(21.08.2017) முழு சூரியக் கிரகணம் நிகழ்ந்தது. 2 நிமிடம் 44 வினாடி சூரிய கிரகணம் நீடித்தது. அமெரிக்காவின் அடுத்த முழு சூரிய கிரகணம் வரும் 2024ம் ஆண்டு நிகழும் என்று நாசா தெரிவித்துள்ளது.

 

 • இங்கிலாந்து விஞ்ஞானிகள் காது, மூக்கு, தொண்டைக்கு அறுவை சிகிச்சை செய்யும் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

 

 • நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட “அப்பல்லோ 16” என்ற செயற்கை கோளிலிருந்து தற்போது பெறப்பட்ட புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது நிலவில் தற்போது நீர் இல்லை என்றும் 45 வருடங்கள் கழித்து நிலவு வறட்சியாக காணப்படுவதும் உறுதிப்படுத்தபட்டுள்ளது.

 

 • உயிரினங்கள் வாழ்வதற்கு அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. 2020ம் ஆண்டில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பாக்டீரியா அல்லது பாசி இனங்களை விண்கலன் மூலம் நாசா அனுப்பவுள்ளது.

 

 • அணு ஆயுத பரிசோதனையை ஒருபோதும் நிறுத்த முடியாது என்று ஐ.நா. சபையில் வடகொரியா தெரிவித்துள்ளது.

 

 • இன்னும் 15 ஆண்டுகளுக்குள் இலங்கையை சிங்கப்பூராக தரம் உயர்த்துவதற்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவோம் என்று சினா அறிவித்துள்ளது.

 

 • ஜான்சன் &  ஜான்சன் நிறுவனத்தின் முகப்புவுடரை பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த 63 வயதான எவா எச்செவேர்ரியா 417 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க அந்த நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • ஜப்பானை சேர்ந்த மஸாகோ வகாமியா என்ற 82 வயது மூதாட்டி ஆப்பிள் ஐபோனுக்கு அப் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தேசிய விளையாட்டு விருதுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், ஆரோக்கிய ராஜீவ், அமல்ராஜ் உட்பட 17 பேர் அர்ஜுனா விருது பெறுகிறார்கள்.

 

 • உலக பேட்மிட்டேன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

 

 • தென்மண்டல அளவிலான கராத்தே போட்டியில் சென்னை, திருச்சியை சேர்ந்த மாணவ மாணவிகள் 21 தங்கம் உள்பட 49 பதக்கங்களை வென்றனர்.

 

 • இந்திய ஆடவர் ஜுனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஜஜட் ஃபெலிக்ஸ் செபாஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • ஜுனியர் பாட்மிண்டன் ஆசிய கோப்பை, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி கேப்டனாக லஷயா சென் அறிவிக்கப்பட்டுள்ளார்

 

 • மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் “பெனாடிக் விளையாட்டு மியூசியம்” அமைந்துள்ளது. இங்கு உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களின் நினைவான பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வகையில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி, அரையிறுதி ஆட்டத்தின் போது பயன்படுத்திய சட்டை மியூசியத்தில் இடம் பெற உள்ளது.

 

 • விளையாட்டுத் துறை சாதனையாளருக்கான மத்திய அரசு விருதுகள் : மாற்று திறனாளி தடகள வீரர் தேவேந்திர ஜஹஜரியா(ஈட்டி எறிதல்), ஆண்கள் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் சர்தாத் சிங் ஆகியோர் “கேல் ரத்னா விருது” பெறுகின்றனர்.

 

 • சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் முதலிடத்தில் உள்ளார்.

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • “எஸ்ஸார்” நிறுவனத்தின் இந்திய சொத்துக்களை ரூ.1,290 கோடி டாலர் மதிப்பில் ரஷ்யாவைச் சேர்ந்த “ரோஸ்நெப்ட்” தலைமையினான குழுமம் கையகப்படுத்தியுள்ளது.

 

 • சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) மூலம் மத்திய அரசுக்கு ரூ.42,000 கோடி வரி கிடைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) சில குறிப்பிட்ட கடன்களுக்கான பரிசீலனைக் கட்டணங்களை முழுவதுமாக தள்ளுபடி செய்துள்ளது.

 

 • எல் & டீ(லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின்) நிர்வாகத் தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறவிருக்கும்; ஏ.எம். நாயக்கின் ஓய்வூதியத் தொகை ரூ. 38.04 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 • ஹண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் காரை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒய்.கே.கூ, புதுடெல்லியில் நேற்று(22.08.2017) அறிமுகம் செய்து வைத்தார்.

 

 • இந்தியவரலாற்றில் முதன் முறையாக புதிய 200 ரூபாய் நோட்டுகள் வரும் செப்டம்பர் முதல் புழக்கத்திற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 • மும்பை பங்குச் சந்தை பட்டியலில் உள்ள சுமார் 200 நிறுவனங்கள் அடுத்த 10 வருடங்களுக்கு எவ்விதமான வர்த்தகமும் செய்ய முடியாத அளவிற்கு செபி தடைவிதித்துள்ளது.

 

 • பங்கு சந்தையில் டாப் 10 பட்டியலில் பல ஆண்டுகளாக இருந்து வந்த இன்போசிஸ் தற்போது 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 

 

Current Affairs

 

 • The 8th world Renewable Energy technology eongress in Delhi addressed by Shri Piyush Goyal, The Minister State for power, coal and renewable energy and Nines

 

 • Government of India’s Street Lighting National Programme (SLNP) has illuminated 50000 km of Indian roads with installation of 30 lakhs LED street light across the country

 

 • Festival of India being organized in Cote D’ivoire, Liberia and Guinea. The festival will showcase diverse Indian culture

 

 • The cell for IPR promotion and management (CIPAM) a professional body under the age sis of the Department of Industrial policy and promotion (DTPP) Conducted a three day workshop on Intellectual property Rights in New Delhi

 

 • Goa would be hosting the International Him festival of  India 2017

 

 • Swasth Bachche, Swasth Bharat programme, an initiative of Kendriya Vidyalaya an initiative of Kendriya Vidyalaya Songathan to prepare a physical Health and Fitness profile card for more than 12 lakhs of Kendriya Vidyalaya student in Kochi

 

 • Dharmendra Kumar IPS appointed as the Director – General Railway protection Force, Railway Board

 

 • Dr.Pinaki Panigrahi a  US based doctor has discover an inexpensive prevention technique against Sepsis

 

 • Farmer Manipur CM Rishang Keishing passes away

 

 • Android 8-0 version that was recently launched by Google – Android Oreo

 

 • British Scientist recently developed the world’s smallest surgical robot named versions

Call Now