August 22

Date:22 Aug, 2017

August 22

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  22

                                          தேசிய செய்திகள்

                                            

 • ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லடாக் ஸ்கவுட் படைப்பிரிவுக்கு கொடியை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கௌரவித்தார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு ராம்நாத் கோவிந்த் தில்லிக்கு வெளிNயு அதிகாரப் பூர்வமாக பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.

 

 • வாகனக் கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை ரத்து செய்வதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

 

 • நாடு முழுவதும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 • விண்வெளித் தொழில் நுட்பத்தில் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட இந்தியா பரிசீலித்து வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கிரண்குமார் கூறினார்.

 

 • கேரளாவில் நடப்பாண்டு பருவமழை 29.1 சதவீதம் பற்றாக்குறையாக பெய்து உள்ளது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 

 • ஒடிஸா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

 

 • நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் கர்னலாகப் பணியாற்றிய அமர் பகதூர் சிங் வயோதிகம் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 20 அன்று காலமானார். அவருக்கு வயது 102.

                                                                                            பன்னாட்டு   செய்திகள்

 

                                                                                               

 

 • உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க ‘நாசா’ மையம் திட்டமிட்டுள்ளது.

 

 •  பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ஜெரி லூயிஸ் (91) ஆகஸ்ட் 20 அன்று காலமானார். ஜெரி லூயிஸ் எழுதி இயக்கி 1963ஆம் ஆண்டு வெளியான ‘நட்டி புரொபசர்’ உலகப் புகழ் பெற்றது. ‘நட்டி புரொபசர்’ அமெரிக்காவின் 100 சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்ந்மெடுக்கப்பட்டு தேசிய கலை ஆவணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 •  நேபாளத்தில் வரும் நவம்பர் 26ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அரசு அறிவித்தது.

 

 •  கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் குடியேறிய 298 பேருக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கியுள்ளது.

 

 •  வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்த கூட்டு ராணுவப் பயிற்சி ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

 •  சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்க அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அங்கு தரை வழியாகவும், வான் வழியாகவும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள டெயிர் அல்ஜோர் நகரில் ரஷிய படை அதிபயங்கர வான்வழி தாக்குதலை நடத்தியதில் 200 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டன.

 

 •  லிபியாவில் மிசுரடா நகரில் கடந்த ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சூடான் நாட்டை சேர்ந்த 4 சிறுவர்கள் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் லிபியாவில் உள்ள சூடான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

                                                                                        விளையாட்டு செய்திகள்

 

                                                                                                          

 

 • ஹைதராபாத்தில் 2000திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட மாரத்தான் பந்தயத்தில் பெண் ஒருவர் புடவையில் முழு 42 கிமீ தூரத்தையும் ஓடி முடித்து சாதனை படைத்தார்.

 

 •  சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவும், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

 

 •  உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 •  திருச்சியில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற 83ஆவது அகில இந்திய ரயில்வே தடகளப் போட்டியில் மேற்கு ரயில்வே அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

 

 •  அர்ஜூனா விருது உள்ளிட்ட விளையாட்டு விருதுகள் வழங்கும் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான பணிகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.

 

 •  ஜார்ஜியாவின் டிபிளிசி நகரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட 7 பேர் பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டி செப்டம்பர் 2 முதல் 27 வரை நடைபெறுகிறது.

 

 •  இத்தாலியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரின் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

 

                                                                              பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

                                                                                                   

 

 • ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் புதிதாக ‘கிளிக்’ என்கிற ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

 

 •  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் ரூ4000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. பயணிகள் வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களை புதிதாக அறிமுகம் செய்ய இந்த முதலீட்டை மேற்கொள்ள உள்ளது.

 

 •  நடப்பு நிதியாண்டில் 60 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய ஹோண்டா மோட்டார் சைக்கிள் ரூ ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது என அதன் தலைவர் மினோரு காட்டோ கூறினார்.

 

 •  பசுமை இல்ல வாயுக்கள் அளவைக் குறைக்க வேண்டும் அதற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை ஊக்கப்படுத்த வேண்டும் இல்லையெனில் உலக பொருளாதாரம் சரிவைச் சந்திக்கும் என மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியுஷ் கோயல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 •  மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 266 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

 

 •  பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சில குறிப்பிட்ட கடன்களுக்கு பரிசீலனைக் கட்டணங்களை முழுவதுமாக தள்ளுபடி செய்துள்ளது.

 

 •  ‘அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான 322 திட்டங்களின் தாமதத்தால் அவற்றை முடிக்க நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக 1.71 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 •  வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகளின் வருவாயை பெருக்குவது, சுலபமாக தொழில் துவங்கும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்குவதற்கு ஆறு குழுக்களை ‘நிடி ஆயோக்’ அமைத்துள்ளது. இக்குழுக்களில் சிஇஓ எனப்படும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 200 தலைமை செயலதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

 

 •  வசதி இருந்தும் கடனை திரும்பச் செலுத்தாமல் உள்ள வாடிக்கையாளர்கள் கணக்கில் எஸ்பிஐ, எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 27 சதவீத பங்குடன் முதலிடத்திலுள்ளது.

 

                                                                 Current Affairs

 

  • The Law and Judiciary department has issued an order for setting up of first three of the total 24 fast track courts for Maharastra in Mumbai and Thane.

   

  • Rahul Dashi a 12 year old Indian origin boy who was crowned as the UK’s child Genius in a popular television quiz competition.

   

  • The State Government of Assam announced that it would be launching a new scheme called scheme for compassionate family pension in place of compassionate

   

  • Arabian cap shaped world – cup stadium to be built in Qatar for FIFA – 2022.

   

  • A team of civilian researches led by Microsoft co-founder paul Allen have discovered the Wreckage of World War II worship USs Indianpolis 18000 feet below the surface in the pacific ocean, nearly after 72 years.

   

  • India’s first calf delivered by a surrogate cow through In Vitro Fertlization (IVF) technology carried out in a mobile laboratory was born in August 2017 in Indapur, pune of Maharastra.

   

  • The Reserve Bank of India introduced Rs 50 bank notes in the Mahatma Gandhi (New) series bearing signature of Urjit patel Governor of Reserve bank.

   

  • The minister of state for minority Affairs Mukhtar Abbas Naqvi said that his government has decided to offer 40 percent reservation for girls at 100 Navodaya type schools.

   

  • The National Bank of Agriculture and Rural Development (NABARD) has sanctioned a loan assistance of Rs 1349.55 Crore to the Rajasthan government for creation of Rural Infrastructure Development fund (RIDF)

   

  • Telangana chief minister Chandrasekhar Rao has been selected for the Prestigious Leadership award 2017, for his innovative services rendered to the welfare of farmers and the farm sector.

Call Now