August 21

Date:21 Aug, 2017

August 21

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  21

                                          தேசிய செய்திகள்

 

 • உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி எனப்படும் இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் நுழைவுத்தேர்வு 2018ம் ஆண்டு முதல் ஆன்லைனில் நடைபெறும் என்று அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 • சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான “100 நவோதயா பள்ளிகள் 5 உயர்கல்வி நிறுவனங்கள்” ஆகியவற்றைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவது போன்ற ஆடம்பரங்களில் ஈடுபடக்கூடாது என்று தனது அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

 

 • பொறியியல் படிப்பு சேர்க்கைகான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் 100க்கு 100 என்ற மதிப்பெண் பெற்ற ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்த “கல்பித் வீர்வால்” என்ற மாணவனின் பெயர் லிம்கா புத்தகத்தில் “2018ம் ஆண்டு கல்வியில் சாதனை” என்ற தலைப்பின் கீழ் சேர்க்கப்படும்.

 

 • டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியுடன் 5 வருட இதழியல் பட்ட மேற்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

 • சென்னையில் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் சார்பில் பழைமையான கார் கண்காட்சி, ஸ்ரீ ராமச்சந்திரா மாநாட்டு மையத்தில் நேற்று(20.08.2017) நடைப்பெற்றது. இதில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் உட்பட அநேக பழைய கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

 

 • மெட்ராஸ் கெனைன் கிளப், கொடைக்கானல் கெனல் கிளப் அசோசியேஷன் இணைந்து கொடைக்கானலில் இந்திய அளவிளான நாய்கள் கண்காட்சியை நடத்தியது.

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • இங்கிலாந்தில் நடைபெற்ற ஐ.கியூ என்று அழைக்கப்படும் நுண்ணறிவுத்திறனை வெளிப்படுத்துகிற போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகுல் தோஷி என்ற சிறுவன் “இங்கிலாந்தின் மழலை மேதை” என்ற பட்டத்தை வென்றான்

 

 • கடந்த ஐந்து ஆண்டுகளில்(2012-2017) இந்தியாவைச் சேர்ந்த 298 பேருக்கு பாகிஸ்தான் அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.

 

 • மலேசியாவில் உள்ள இந்தியர் டான்ஸ்ரீ நல்லா கே.எஸ் அவர்களுக்கு தன்னார்வ படையின் சிறப்பு விருந்தான “துணை ஆணையர் விருதை” மலேசிய அரசு வழங்கியுள்ளது.

 

 • இன்று (21.08.2017) 99 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம். அமெரிக்காவின் 14 நகரங்களில் இந்த முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் என்று அமெரிக்க விண்வெளி நிலையம்(நாசா) தெரிவித்துள்ளது.

 

 • இரண்டாம் உலகப்போரில் ஜப்பானால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பலின் பாகங்கள் 72 ஆண்டுகள் கழித்து வட பசுப்பிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 • பிரத்தானியா நாட்டில் கார் ஓட்டுபவர்கள் செல்போன் பேசக் கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் பிரத்தாயாவின் கார்கள் காப்பீட்டு நிறுவனமான “இங்கேணியே” நடத்திய ஆய்வில் சட்டத்தை மீறி வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தி விபத்துகள் நேரிடும் பட்டியலில் பிரத்தானியா முதலிடத்தில் உள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

 

 • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

 

 • டி.என்.பி.எல் கிரிக்கெட் இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

 • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் பல்கேரியாவின் டிமிட்ரோவ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

 • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் கார்பின் முகுருசா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். உலக தர வரிசையில் முகுருசா நான்காம் இடத்தில் உள்ளார்.

 

 • இத்தாலியின் போர்பெட்டோ நகரில் நடைபெற்ற ஜுனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் லஷய் ஷெரோன், மணீஷா கீர் ஜோடி வெண்கலம் வென்றது.

 

 • உயரம் குன்றியவர்களுக்கான உலக தடகள போட்டியில் தமிழ்நாடு உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேசன் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

 

 • பல்கேரியா ஓபன் டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சவும்யஜித் கோஷ் – ஜி.சத்தியன் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.

 

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதோர் பட்டியலில் 27 சதவீத பங்களிப்புடன் பாரத் ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளது.

 

 • 10 ஆயிரம் பேட்டரி கார்களை வாங்க மத்திய அரசு திடட்மிட்டுள்ளது

 

 • இந்தியாவுக்கு 22 அதிநவீன “சீ கார்டியன்” ரக ஆளில்லாத விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

 

 • வங்கி கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகை வைத்தவர்களிடம் இருந்து பாரத் ஸ்டேட் வங்கி 235 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது.

 

 • ஹீன்டாய் நிறுவனத்தின் பிரத்தியேக எஸ்யுவி கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

 

 • அதிக அழுத்தத்தினால் ரெட்மி ஸ்மார்ட்போன் வெடிக்கக்கூடும் என சீன நிறுவனமான சியோமி தெரிவித்துள்ளது

 

Current Affairs

 

 • NASA launches “TORS – M” Satellite It aimed at ensuring astronauts as the International Space Station can communicate with Earth

 

 • Serana Williams named highest paid Female athlete of  2017

 

 • India’s Junior Para – athlete Rinku Hooda won a Silver in the Javelin throw F 40 at the World Para – Athletics Junior Championship

 

 • The union cabinet gave its approval for raising Extra Budgetary Resources (EBR) upto Rs.9020cr for long term Irrigation Fund during fiscal year – 2017-18.

Call Now