August 18

Date:18 Aug, 2017

August 18

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  18

                                          தேசிய செய்திகள்

 

 • ஹரியாணா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்து விதமான சிகிச்சை முறைக்கும் ரூ.10 முதல் ரூ.500 வரையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

 • கேரளா : திருச்சூர் மாவட்டம் சாலக்குடி ஆற்றில் அதிரப்பள்ளி நீர் மின்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 

 • திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த புது ஆயக்குடியில் கி.பி.7ம் நூற்றாண்டைச் சேர்ந்த சப்தமாதர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

 

 • சென்னையில் வருகிற அக்டோபர் மாதம் பிரெஞ்சு தூதரக கிளை திறக்கப்படும் என்று பிரான்ஸ் துணைத் தூதர் கேத்ரீன் ஸ்வாட் தெரிவித்துள்ளார்.

 

 • சர்வதேச சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில் தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையம் சார்பில் மீன் உணவகம் திறக்கப்பட்டது.

 

 • டெல்லி : நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த இரண்டு புதிய செயலிகளை(MyFASTag & FASTag Partner) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது.

 

 • புதுடெல்லி : ஏழைகளுக்கு, உயிர் காக்கும் மருந்துக்களை மலிவு விலையில் வழங்குவதற்காக அனைத்து அரசு பெட்ரொல் பங்க்களிலும், மருந்தகங்களை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில், 650 ஆண்டுகளுக்கு முன்னுள்ள கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதில் சென்னையைப பற்றிய ஆதாரங்கள் இருப்பதாக ‘சென்னை 2000+’ அறக்கட்டளையின் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • 40 ஆண்டு தடைகளுக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றிய சரக்குக் கப்பல் அடுத்த மாதம்(செப்டம்பர்) இந்தியா வருகிறது. உலகில் மிகப் பெரிய எண்ணெய் இறக்குமதி நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

 • ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரத்தானிய நாடு 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகாரபூர்வமாக விலக உள்ளது. அவ்வாறு விலகினாலும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் பிரத்தானிய நாட்டிற்குள் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளவும், வேலை செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்று பிரத்தானிய அரசு தெரிவித்துள்ளது.

 

 • ஜெர்மனி நாட்டில் உள்ள நிறுவனங்களில் பெண்களை கட்டாயமாக உயர் பதவியில் அமர்த்த புதிய சட்டம் இயற்றப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

 

 • கெய்ரோ : எகிப்து நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள மூன்று கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

 

 • மெல்போர்ன் : உலகின் முதல் உயிரினம் 65 ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கலாம் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு உள்ளனர்.

 

 • நோர்ஃபோல்கிலுள்ள ஜான் இன்ஸ் மையத்தின் விஞ்ஞானிகள் தாவரங்களை போலியோ தடுப்பு மருந்தாக மாற்றும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளனர். போலியோ வைரஸ்க்கு எதிர்ப்பாக அமைந்துள்ள இந்த தடுப்பு மருந்து “வைரஸ் போன்ற துகள்” என்று அழைக்கப்பபடுகிறது.

 

 • “2017 களாப்பக்ஸ் பாதுகாப்பு அறக்கட்டளை புகைப்படப் போட்டி” – பசிபிக் கடலில் இருக்கும் களாப்பக்ஸ் தீவில் வன விலங்குகள் மற்றும் அதன் இயற்கைக் காட்சிகளை படம் பிடிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு தலைப்பின் கீழும் புகைப்படங்கள் சமர்பிக்கப்பட்டன.

 

 • இலங்கை கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னைய்யா என்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை : நியூசிலாந்தில் ஜனவரி மாதம் தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

 

 • யங் சேலஞ்சர்ஸ் கால்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி சென்னை பட்டாபிராமில் உள்ள சி.வி.டி. மைதானத்தில் நாளை(19.08.2017) முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை நடக்கிறது.

 

 • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

 

 • ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரியா அணிகள் நேற்று(17.08.2017) மோதின. இதில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

 

 • பல்கேரியா ஓபன் பேட்மின்டேன் தொடரில் ஆண்களுக்கான ஜுனியர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் சாம்பியன் பட்டத்தை வென்றார்

 

 • சர்வதேச குள்ள விளையாட்டு வீரர்கள் போட்டியில் இந்திய அணி 37 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்.டி.எப்.சி. வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதங்களை 0.50 சதவீதம் குறைத்துள்ளது.

 

 • தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் அமைப்பான ‘டை’ அமைப்பின் புதிய தலைவராக கேம்ஸ் நிறுவனத்தை நிறுவிய வி.சங்கர் நியமிக்கப்பட்டார்

 

 • வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான புதிய வசதியை முன்னணி தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி(கேவிபி) ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இந்த வங்கியில் தான் முதன் முறையாக ஆதார் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

 • மிஸ்திரி குடும்பத்தை சேர்ந்த எஸ்பி குழுமத்துடனான வர்த்தக தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொள்ள டாடா குழுமம் முடிவெடுத்துள்ளது.

 

 • இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக விஷால் சிக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி சொகுசு கார் பிரிவில் ‘சியாஸ் எஸ்’ என்ற புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. 

 

 

Current Affairs

 

 • Energy efficient appliances such as LEO bulbs, tube light and fans are soon going to be sold at petrol pumps across India under this flagship scheme – Unnat Jeevan by Affordable LEDS and Appliances for All (UJALA)

 

 • India’s first Partition Museum was opened recently in Amritsar

 

 • Archaeologists have discovered three ancient toms dating back around 2000 year in Egypt

 

 • Cabinet committee on economic affairs, chaired by the PM Narendra Modi approved the proposals of Department of Investment and Public Asset Management for Strategic disinvestment

 

 • Cabinet Committee on economic affairs has given its approved to the scheme of providing budgetary support under Good and Service Tax regime for the eligible industrial units located in state of Jammu & Kashmir, Uttarkhand, Himachal Pradesh, North eastern states including Sikkim

 

 • Emma Stone has been named Hollywood’s best highest paid female actor in forbes annual list at top earners

 

 • Sohali Mahmood Pakistan’s High commissioner to India took charge at the High commission He was Pakistan’s ambassador to Thailand from 2009-2013

 

 • General Motors(GM) India has announced the appointment of Sanjiv Gupta as the new President and Managing Director of the Company.

   

   

   

Call Now