August 17

Date:17 Aug, 2017

August 17

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  17

                                          தேசிய செய்திகள்

 

 • உலகிலே முதன் முறையாக காச நோய்க்கான புதிய சிகிச்சை முறையை அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் அமைப்பும் சண்டிகரில் உள்ள சிஎஸ்ஐஆர் ரின்  ஐஎம்டெக் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இணைந்து இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளனர்.

 

 • தற்கொலையைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டான “புளுவேல்” இணைப்புகளை உடனடியாக அகற்றுமாறு சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்திற்கு மூன்று மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • தமிழகத்தைப் போல பெங்களுரிலும், 108 வார்டுகளிலும் மலிவு விலை உணவகம் திறக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து பெங்களுரில் மலிவு விலை இந்திரா கேன்டீனை ராகுல் காந்தி திறந்து வைத்தார்.

 

 • தனியார் துறையும், பொதுத் துறையும் இணைந்து செயல்படும் புதிய மெட்ரோ இரயில் கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • வழிப்பாட்டு தலங்களில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

 • மரக்கன்றுகளை நடுவதற்கு புதிய தொழிநுட்பத்தை கண்டுபிடித்து அரசுக்கு சமர்பித்த டாக்டர் கொ. சத்திய கோபால் அவர்களுக்கு சுதந்திர தினத்தன்று(15.08.2017)  நல்ஆளுமை விருது வழங்கப்பட்டது.

 

 • விமானிகள், பணியில் இருந்து விலகுவதாக ராஜிநாமா கடிதம் கொடுத்தாலும், ஓராண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.

 

 • இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதராக சோஹைல் முகமது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று(16.08.2017) பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

 • எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளை இலவசமாக படிக்கலாம் என்று இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகம்(இக்னோ) அறிவித்துள்ளது.

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • இஸ்ரேல் காஸாவுடனான எல்லையையொட்டி, பூமிக்கு அருகில் 60 கி.மீ நீள சுரங்க அரண் சுவற்றை அமைக்கும் பணியை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. சுரங்கப் பாதை வழியாக எல்லையைத் தாண்டி ஊடுருவ முயல்பவர்களைக் கண்டறிய உதவும் சாதனங்கள் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 • உலகில் நிம்மதியாக வாழத் தகுந்த நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் முதலிடத்தில் உள்ளது.

 

 • எரிமலைகள், வெப்பமான பிரதேசங்கள் பனிப் பிரதேசங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து இனங்காணப்படாத 138 எரிமலைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • இந்திய தேசிய கீதத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மேத்யூ ஹைடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதை டுவிட்டரில் பகிர்ந்து சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

 

 • அமெரிக்காவில் 2018ம் ஆண்டிற்கான ஆளுநர் தேர்தலில் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ் பெண் கிரிஷாந்தி விக்ன ராஜா போட்டியிடவுள்ளார். 2018 ஆண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு போட்டியிடும் முதல் பெண் கிரிஷாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான மோதலுக்கு தீர்வு காண ஜெர்மனி தன்னால் இயன்ற உதவியைச் செய்யும் என்று அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

 

 • சவூதி உள்ளிட்ட ஐந்து நாடுகள் கத்தாருடன் ராஜீய உறவுகளை துண்டித்துக் கொண்ட பிறகு முதல் முறையாக கத்தார் ஹாஜ் புனித யாத்ரீகர்களுக்கு எல்லையை திறந்து விடும்படி சவூதி அரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

 

 • வடகொரியா ஏவுகணை என்ஜின்களை இறக்குமதி செய்யாமல் தானே தயாரிக்கும் திறமைப் பெற்றுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி – இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் லஷயா சென் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

 • இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, துபாயைச் சேர்ந்த பசுபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்க உள்ளார்.

 

 • ஒரு நாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. இதில் உபுல் தரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

 

 • யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் 18 மாதங்கள் தடைக்கு பின் மரியா ஷரபோவா பங்கேற்க உள்ளார்.

 

 • இங்கிலாந்தில் நடைபெற்ற நான்காம் தர உள்ளுர் கிரிக்கெட் போட்டியில் 54 வயதான மெக்கோம்ப் என்பவர் ஒரே ஓவரில் 40 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

 

 • ஸ்பனிஸ் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அலகு இறுதிப் போட்டியில் ரியல் மாட்டிட் அணி, பார்சிலோனா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • ஆட்டோ மொபைல் துறையின் முக்கிய நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக(சிஎப்ஓ) பி.பி. பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 • 22 காரட்டுக்கு மேற்பட்ட தங்க நகை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

 

 • கனடா, சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் சென்ற ஜுலை மாதத்தில் ரூ.20428 கோடியாக உள்ளது என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.

 

 • புதுச்சேரி – ஐதராபாத் இடையிலான விமான சேவையை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று(16.08.2017) தொடங்கி வைத்தார்

 

 • “டிஜிட்டல் வால்ட்” எனப்படும் மின்னணு பணப்பை சேவை குறித்த புதிய விதிமுறைகள் விரைவில் வெளியேறும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

 • தொலை தொடர்பு சேவையில், அழைப்புகளை இணைக்கும் வசத்திக்காக, நிறுவனங்கள் பெறும் கட்டணத்தை குறைக்க தொலை தொடர்பு ஒழுங்குமுறை வாரியமான டிராய் திட்டமிட்டள்ளது.

 

 

Current Affairs

 

 • India will host the next “Steering Committee” meeting of the Turkmenistan – Afghanistan – Pakistan – India (TAPI) gas pipeline

 

 • Natco Pharma the pharmaceutical company recently received nod from US Food and Drug Administrator to market Lanthanum Carbonate Chewable tables.

 

 • Alexander Zverev Won the men’s singles title at the Rogers cup 2017.

 

 • The war museum of Auckland was lit up in the color of Indian flag for the first time ever to mark the 70th Independence day of India.

 

 • Elina Svitolina Won the Women’s singles title at the 2017 Rogers cup.

 

 • The government sponsored food outlet called India’s Canteen was inaugurated in this city –Bangalore.

 

 • Italy would be hosting the G-7 Interior Minister’s  summit 2017 on security issue.

 

 • Union Cabinet approves MOU between India and Sweden aims at establishing a wide ranging and flexible mechanism through which both the nations can exchange best practices and work together on training program.

 

 • Nepal and China has signed three pacts to boost their ties in power and energy sector and undertake a feasibility study to excavate natural gas and petroleum in the Himalayan country including in the Southern Terai Plains.

 

 • Space X has successfully launched Hewlett Packard Enterprise (HPE) Space borne  computer towards International Space station using Falcon 9 . Rocket.  

Call Now