August 15

Date:15 Aug, 2017

August 15

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  15

                                          தேசிய செய்திகள்

 

 • டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றினார்.

 

 • இந்திய சுதந்திர தின ஸ்பெஷல் : நயாகரா நீர் வீழ்ச்சியில் இன்று(ஆகஸ்ட் 15) இரவு 10 மணி முதல் 15 நிமிடங்களுக்கு இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிரும்காட்சி இடம் பெறுகிறது. நயாகரா நீர் வீழ்ச்சியில் இந்திய தேசியக்கொடி நிறத்தில் ஒளிர வைப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

 

 • சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில், 1947 ஆகஸ்ட் 15ம் தேதி ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி, செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் 70 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

 • தமிழக அரசு சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடி ஏற்றினார்.

 

 • சுதந்திர தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது – பேராசிரியர் மற்றும் விஞ்ஞானியுமான தியாகராஜனுக்கும், கல்பனா சாவ்லா விருது – திருவண்ணாமலையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர் செல்வி பிரித்திக்கும், சிறந்த மாநகராட்சிக்கான விருது – திருநெல்வேலிக்கும், சிறந்த நகராட்சிக்கான விருது – சத்தியமங்கலத்திற்கும், சிறந்த பேரூராட்சிக்கான விருது – பொன்னம்பட்டிக்கும், சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருது – சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் வழங்கப்பட்டது.

 

 • தமிழக முதல்அமைச்சரின் நல் ஆளுமை விருது – தமிழ் நாடு காவல் வீட்டு வசதி வாரியம், வேளாண்மை துறை, வணிகவரித் துறைக்கு வழங்கப்பட்டது.

 

 • 2017ம் ஆண்டுக்கான ஜனாதிபதி விருது சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் கூடுதல் கமிஷனர் சேஷசாய் உள்ளிட்ட தமிழக போலீஸ் அதிகாரிகள் 26 பேருக்கு வழங்கப்பட்டது.

 

 • உடல் உறுப்புகளை ஒரு வாரம் பாதுகாக்கும் புதிய ரசாயன திரவத்தை இந்திய டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • அணு ஆயுதம் மற்றும் அணு ஏவுகணை சோதனையில் ஈடுபடும் வடகொரியா மீது ஐ.நா சபை கடும் பொருளாதார தடையை விதித்தது. இதன் காரணமாக வடகொரியாவிலிருந்து இரும்பு மற்றும் இரும்பு தாது இறக்குமதி செய்வதை இன்று முதல் சீனா தடை செய்துள்ளது.

 

 • லண்டனின் மிகப் பிரபலமான பிக் பென் கடிகாரம் கடந்த 157 ஆண்டுகளாக மணி ஓசையை ஒலித்து கொண்டே இருந்தது. கோபுரத்தில் மிக முக்கியமான பழுது நீக்கும் பணி நடைபெறுவதால் 2021ம் ஆண்டு வரை இம்மணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 • ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா – போலியா இல்லாத நாடு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 • பாகிஸ்தானில், தெற்கு ஆசியாவிலே மிக உயரமான 400 அடி கம்பத்தில் கொடி(120 அடி நீளமும் 180 அடி அகலமும்) ஏற்றப்பட்டு (14.08.2017) சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

 

 • அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 3 சீக்கியர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

 

 • கத்தாரில் ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வென்று சாதனைப் படைத்தது.

 

 • ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை போட்டியின் போது நடுவரை தள்ளி விட்டதால் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோவுக்கு, ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் அபராத தொகையும் ஐந்து போட்டிகளில் விளையாட தடையும் விதித்துள்ளது.

 

 • உலக தடகள போட்டியில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

 

 • ரோஜர்ஸ் கோப்பை சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை, ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரே வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

 • இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் ஆட்ட நாயகனாக ஹார்திக் பாண்டியாவும், தொடர் நாயகனாக தவனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

 

 • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தென் ஆப்பிரிக்கா வீராங்கனையான செமன்யா தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

 • இந்தியா – கனடா அணிகளுக்கு இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் நீக்கப்பட்டார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • சமூக ஈடுபாட்டை கொண்ட வங்கியான செலான் வங்கிக்கு மதிப்பு மிக்க விருதான “SLT 01” விருது வழங்கப்பட்டது. இவ்வங்கி இதுவரை (உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில்) 35 விருதுகள் பெற்றுள்ளது.

 

 • இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சொத்து மதிப்பு பட்டியலில் சச்சின் டென்டுல்கர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

 • பேட்டரி இல்லாத மொபைல் போன்களை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் இவை அறிமுகம் செய்யப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 • இந்தியாவில்முதன் முறையாக கோல்டு ஆப்ஷன் கான்ட்ராக்ட் வர்த்தகத்தை புதுடெல்லி மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

 

 • நாடு முழுவதிலும் புதிதாக 60 புத்தக விற்பனை நிலையங்களைத் தொடங்கவும், 800 புதிய தலைப்புகளில் தமிழ் நூல்களை வெளியிடவும் திட்டமிட்டிருப்பதாக சப்னா புத்தக நிறுவனங்களின் தலைவர் நிஜேஷ் ஷா தெரிவித்துள்ளார்

 

 • ஐஆர்சிடிசி இணையதளத்தில் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, டிக்கெட் புக் செய்த பிறகு கட்டணத்தைச் செலுத்தும் முறையினை ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்ததுள்ளது.

 

Current Affairs

 

 • Gabriel Chundan the snake boat powered by oarsmen of Thuruthippuram Boal Cluh has won the 65th edition of the prestigious Nehru Trophy held at the punnamda lake

 

 • A three day annual cultural festival named ‘Fete de puducherry’ organized by the Government of India begins in puducherry. This is part of celebrating independence day and also liberation day of Puducherry.

 

 • As per the new study published in The Astrophysical Journal, researches have found that the TRAPPIST. I Star between 5.4 and 9.8 billion rears.

 

 • According to the global leader in broadband testing Ookla declared that Norway has the fartest Mobile Internet in the World.

 

 • Santhosh Sharma was appointed as the Chairman and Managing Director of Hindustan Copper Limited.

 

 • India claimed their first ever 3.0 win overseas, beating srilanka in the third and the final test at pallekele international cricket stadium.

 

 • Pakistan on 14th of August celebrated its Independence Day. Pakistan hoisted a 400 feet high national flag, the largest in its history at the Attari-Wagah border to mark its 70th Independence Day.

 

 • Social Security day observed on 14th

 

 • The India – Asean Youth Summit has begun in Bhopal. It focuses to bring the participant to work for eradication of terrorism, poverty and drug menace. The Summit with the theme – “Shared Values, Common destiny”.

 

 • Afla the successful launch of the countyr’s first Indigenously developed robot ‘BRABO’ in April, TAL manufacturing a wholly – owned subsidiary of TATA Motors, has launched ‘Robo Whiz’

Call Now