August 13

Date:14 Aug, 2017

August 13

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  13

                                          தேசிய செய்திகள்

                                           

 • உத்திரப் பிரதேசத்திலுள்ள அரசு மருத்துவமனையொன்றில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில் கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

 • தற்கொலைக்கு தூண்டும் ‘நீல திமிங்கலம்’ (புளு வேல்) விளையாட்டை தடைசெய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

 

 • காவிரி ஆறு;றுநீர்ப்படுகை ஆலோசனைக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆகஸ்ட் 14ல் நடைபெறுகிறது.

 

 • இந்தியாவில் தற்போது 6800 மெகாவாட்டாக உள்ள அணு மின்சார உற்பத்தியை இரண்டுக்கு பங்குக்கும் மேலாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய எரிசக்தி மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

 • நாடு முழுவதும் 71வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சர்வதேச பயங்கரவாதிகளின் புகைப்படத்தை தில்லி காவல்துறை ஆகஸ்ட் 12ல் வெளியிட்டது. அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாகவும் அறிவித்தது.

 

 • சீனாவின் சான்டோங் மாகாணத்திலிருந்து மியான்மர் எல்லை வழியாக இந்தியாவுக்கு ரூ10 கோடி மதிப்புள்ள ‘வைட்டமின் சி’ மருந்து (அஸ்கோர்பிக் அமிலம்) கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

 • ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ராணுவ டாங்கிகள் போட்டியில் ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளின் டாங்கிகள் கலந்து கொண்டன. இதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட அர்ஜூனா டாங்கிகள் இறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டன.

 

 • ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதலின் ஊடுருவலைத் தடுக்கவும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களை ஒடுக்கவும் போராடி வருகிற நம் ராணுவ வீரர்களின் உயிர் சேதங்களை குறைக்கும் வகையில் ரோபோக்களை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • ஜம்மு காஷ்மீர் மாநிலம் கே.ஜி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஜக்ராம் சிங் தோமர் வீரமரணம் அடைந்தார்.

 

பன்னாட்டு   செய்திகள்

 

                                                                                                

 

 • சவுதி அரேபியாவில் 14 பேரின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க பத்து நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 •  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைகளை நடத்திய வடகொரியா தற்போது நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை நடத்த முடிவு செய்து புகுகுக்சோங் -1 எனும் பெயர் கொண்ட நீர்மூழ்கி ஏவுகணை வசதியை மேம்படுத்த முயல்வதாக ராணுவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 •  நாசாவில் விஸி விண்கலம், முழு வானத்தையும் ஸ்கேனிங் செய்துள்ளது. இவை தொலைதூர பயணிகளுக்கு புதிய நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது. சுமார் 7 மடங்கு நீண்ட கால வால் நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை 0.6 மைல்ஸ் அல்லது ஒரு கிலோ மீ அளவை கொண்டிருக்கின்றன. இந்த கொடிய வால் நட்சத்திரங்கள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் என நாசா கூறுகிறது.

 

 •  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா நவம்பர் மாதம் 28ம் தேதி சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

 

 •  இந்தியா – சீனா இடையிலான டோக்லாம் எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என சீனா பாதுகாப்புத்துறை நிபுணர் தெரிவித்துள்ளார்.

 

 •  ஐரோப்பாவிலும் உலகின் பிற இடங்களிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்த இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கம் நிதிஅளித்து வருகிறது என ஐ.நா அமைத்த நிபுணர்கள் குழு நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 •  இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாநிலத்தில் துபான் நகரில் சீனர்களின் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் ஏற்கனவே இருக்கும் கடவுளார் சிலைகள் போல புதிதாக 100 அடி உயரத்தில் குவான் யு என்கிற கடவுளின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லீம்களும் தேசியவாதிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

விளையாட்டு செய்திகள்

 

                                                                                              

 

 • சின்கியூபில்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்துக்கு 2வது இடம் கிடைத்தது.

 

 •  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 200மீ ஓட்டத்தில் நெதர்லாந்து வீராங்கனை டேப்னே ஸ்கிப்பர்ஸ் தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டார். அவர் 22.05 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார்.

 

 •  5வது சீசன் புரோ கபடிலீக் போட்டியின் 24ஆவது ஆட்டத்தில் யு.பி.யோதா அணி தெலுகு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது.

 

 •  தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 25ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருவள்ளுவர் வீரன்ஸ் அணியை கோவை கிங்ஸ் அணி தோற்கடித்தது.

 

 •  உலக தடகள சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீராங்கனையான பிரிட்னி ரீஸ் தங்கப் பதக்கம் வென்றார். அவர் வெல்லும் 4வது தங்கப் பதக்கம் இதுவாகும்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

                                                                                                   

 

 • சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்கிற்கான வட்டியை 0.50 சதவீதம் குறைத்தது.

 

 •  ‘சர்வதேச சந்தையில், ஆடை, தோல், காலணி ஆகிய துறைகளில் சீனாவின் பங்கு குறைந்து வருவதால் இத்துறைகளில் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியாவுக்கு இதுதான் சரியான வாய்ப்பு என பார்லியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 •  எம்சிஎக்ஸ் எனப்படும் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் செப்டம்பரில் ‘கோல்டு ஆப்ஷன் கான்ட்ராக்ட்’ வர்த்தகத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக இத்தகைய வர்த்தக நடைமுறை அதிகமாக உள்ளது என எம்சிஎக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முர்கங்க் பரஞ்சபி தெரிவித்துள்ளார்.

 

 •  பெப்சிகோ நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான ‘குர்குர்ரே’வை பல்வேறு புதிய சுவைகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குர்குர்ரே நிறுவனம் அறிவித்திருக்கிறது.

 

 •  சோலார் பேனல்களுக்கு வரியைக் குறைக்கும் திட்டமில்லை என மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

 •  வாராக் கடன் பிரச்சனை அதிகரித்துள்ள நிலையிலும், முதல் காலாண்டு லாபம் 5 மடங்கு உயர்ந்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

 

 •  மோட்டார் சைக்கிளில் சாகச பயணத்தை 4 ஆண்டுகளுக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 34 வயது இளைஞர் கேதார்நாத் தொடங்கியுள்ளார். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இமாலயன் மோட்டார் சைக்கிளில் இவர் பயணம் மேற்கொள்கிறார்.

 

 

Current Affairs

 

 • The Human Resource development (HRD) Ministry has launched a new video of the National Anthem in sign language, featuring disabled and partially disabled children.

 

 • To improve road safety in Hyderabad with the use of technology the government of Telangana along with world Resource Institute announced the launch of smart street lab program.

 

 • Dr. Ruth Pfall a German doctor popularly known as pakistan’s ‘mother teresa’ for dedicating her life to eradicate leprosy in the country passed array in Karachi

 

 • US President Donald Trump has appointed Indian American Neil Chattejee as chair of the federal Energy Regulatory commission.

 

 • The Hindu Playwright award 2019 is awarded to Gerish Khemani and Akshat Nigam for this play ‘In search of Dariyasayar’

 

 • Veteran Journalist TIS George has bagged for first kesari Media award.

 

 • Bollywood lyricist – screen writer and odgurer prasoon joshi appointed as Chairperson of CBFC (Central Board of film Censor)

 

 • Kenya’s president Uhuru Kenyatta has won a second and final five year term as president.

 

 • Gaitri Issac kumar an IFS presently Ambassador of India to Belgium. She has been Concurrently accredited as the Ambassador of India to the grand Duchy Luxembourg

 

 • Vinay Dube has joined as Chief Executive officer of Jet airways

   

Call Now