August 12

Date:12 Aug, 2017

August 12

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  12

                                          தேசிய செய்திகள்

 

 • கன்னட நாள் ஏடுகளில் ஆங்கில விளம்பரங்கள் கூடாது என்று கன்னட வளர்ச்சி ஆணையர் எஸ்.ஜி.சித்தராமையா தெரிவித்துள்ளார்.

 

 • காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்படும் போரில் இராணுவ வீரர்கள் உயிர் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அத்தகைய சண்டையில் ரோபோக்களை ஈடுபடுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

 

 • நான்கு நாட்கள் தொடர் விடுமுறையால் ஏடிஎம் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 • நாடு முழுவதும் குறைந்த அளவு மாணவ சேர்க்கை கொண்ட என்ஜினியரிங் கல்லூரிகளை மூட (ஏஐசிடிஇ) அகில இந்தியப் பொறியியல் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

 

 • அழகன்குளம் கிராமத்தில் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தப்பட்டது. இதில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமையான 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

 • உதகையில் சுற்றுலா மையங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டது.

 

 • இந்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக பிரசூன் ஜோசி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • நகரங்களில் தூய்மையை உறுதி செய்யும் பொருட்டு, குப்பைகள் அகற்றப்படாதது மற்றும் கழிப்பறை பிரச்சனைகள் போன்ற புகார்க்கான புதிய செயலியை(ஸ்வச்சதா) மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 

 • உலகில் மிக நீளமான சுரங்க இரயில் பாதை – வடகொரிய தலைநகரில் 360 அடி ஆழத்தில் உள்ளது. போர் ஏற்படும் அபாயம் இருந்தால் பொது மக்களை அங்கு தான் தங்க வைக்க போவதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.

 

 • உலக பருவ நிலை அறிக்கை(2016) – புவி வெப்பமடைதல், குளோபல் வார்மிங், இந்தியா மற்றும் மெக்சிகோவில் வெப்பம் அதிகரித்தல், கடல் நீர் மட்டம் உயர்ந்தல் போன்ற பல்வேறு பருவ நிலை மாற்றங்களால் 2016ம் ஆண்டு சுற்றுச்சூழல் ரீதியாக மிக மோசமான ஆண்டாக திகழ்ந்தது. 

 

 • இந்தியாவில் அனுமதியின்றி தங்கியுள்ள சுமார் 40000 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை நாடு கடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

 

 • இந்தியப் பெருங்கடலைப் பாதுகாப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனக் கடற்படை தெரிவித்துள்ளது.

 

 • அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி சனி கிரக ஆராய்ச்சிக்காக காசினி விண்கலத்தை அனுப்பியது. 2004ம் ஆண்டு சனி கிரத்தை அடைந்து 12 ஆண்டுகள் செயல்பட்ட இந்த விண்கலம் அடுத்தமாதம் (செப்டம்பர்) தனது செயல் பாட்டை நிறுத்துகிறது.

 

 • தாய்லாந்தில்  மூதாட்டி ஒருவர் 91வது வயதில் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • இந்தியா – இலங்கை இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லகெலேவில் இன்று(12.08.2017) தொடங்குகிறது.

 

 • இந்தியன் வங்கி கோப்பைக்கான பள்ளிகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி வரும்16ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.

 

 • உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்காவின் கோரி கார்டர் தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

 • உலக தடகள் போட்டிக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர் சிங் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

 

 • 16வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ‘டிரிபிள்ஜம்ப்’ பந்தயத்தில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் டெய்லர் தங்கப்பதக்கத்தை வென்றார்.

 

 • இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 6 விக்கெட்களை வீழ்த்தி 13 வயதான லூக் ராபின்சன் சாதனைப் படைத்துள்ளார்.

 

 • கனடாவில் மாற்று திறனாளிகளுக்கான தடகள போட்டி – தமிழக வீரர்கள் 3 பேர் 7 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தள்ளனர்.

 

 • டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி அணியை வீழ்த்தி காரைக்குடி காளை அணி ‘பிளே – ஆப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 

 • சர்வதேச அளவில் வர்த்தகச் சந்தைக்குறித்து ஆய்வு செய்யும் போர்ப்ஸ் நிறுவனம் 2017ம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 புதுமை நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

 

 • வாராக் கடன் பிரச்சனை அதிகரித்துள்ள நிலையிலும் , முதல் காலாண்டு லாபம் 5 மடங்கு உயர்ந்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.

 

 • நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், ஸ்னாப்டீலை  வாங்க ஜப்பான் நாட்டின் சாப்ட்பேங்க் சுமார் 2.5 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது.

 

 • பொதுத் துறையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் வங்கி முதல் காலாண்டில் ரூ.5112.99 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

 

 • புதுடெல்லியில் இருந்து மதுரை வழியாக சிங்கபூருக்கு ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவையை அறிமுகம் செய்துள்ளது. முதல் விமானம் ஆகஸ்ட் 15ம் தேதி புறப்படுகிறது.

 

 • “தீனதயாள் அந்த்யோதயா யோஜனா திட்டம”; – நடைபாதைகளிலும், தெருவோரங்களிலும் வீடின்றி வசிக்கும் மக்களுக்கும் இருப்பிட வசதி ஏற்படுத்தி தருவது

 

 • சமையலறை சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டிடிகே பிரெஜ்டீஜ் நிறுவனத்தின் முதல் காலாண்;டு லாபம் 6 மடங்கு அதிகரித்துள்ளது. 

 

 

Current Affairs

 

 • As per economic survey 2016 – 17 volume – II tabled in parliament by Finance Minister Arun Jately admits achieving 7.5% growth target for this fiscal as tough.

 

 • Department of Industrial policy and promotion under ministry of commerce and Industry has approved two projects for development of Industrial clusters at Hindupur and Bobbili

 

 • Delhi assembly passes minimum wages Amedment Bill 2017 seeks to make the punishment to violators of minimum wage norm stricter.

 

 • The Delhi Nethaji subash Chandra Bose bill 2017 aims to grant the existing Netaji subash institute of Technology the status of university.

 

 • 15th Bay of Bengal Initiative for multi – sectoral Technical and Economic co-operation (BIMSTEC) Ministerial meeting was held in Kathmandu, Nepal.

 

 • Facebook has partnered with the odisha’s MSME department and project mission sakthi to train 25000 entreperneurs  by end of 2018.

 

 • Oxford university press (OUP) has launched online dictionaries in Tamil and Gujarati as a part of its special focus on Indian languages.

 

 • BitBay is one of the top ten crypto currency trading platforms in the world. It has launched a platform for trade and exchange of digital currencies such as bitcoin, litecoin ether, Lisk, dash, Monero and gamecredits

 

 • Reenat sandhu presently ambassador of India to Italy. She has been concurrently accredited as the next ambassador of india to the republic of san Marino.

 

 • Real Madrid a professional Foot ball club of Spain has won the 2017 UEFA super cup football tournament.

 

 • International youth day observed on 12 Aug 2017 across the world. ( theme : Youth Building place)

Call Now