August 11

Date:11 Aug, 2017

August 11

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  11

                                          தேசிய செய்திகள்

 

 • நாட்டின் 13வது குடியரசு துணைத் தலைவராக வெங்கய்யா நாயுடு இன்று(11.08.2017) பதவியேற்றார்.

 

 • வாகன காப்பீட்டு புதுப்பித்தலுக்கு மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் கட்டாயம் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • மக்களவையில் தொழிலாளர் நல அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா சம்பளம் மற்றும் போனஸ் விதிகள் பற்றிய மசோதாவை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் அமைப்பு சாரா தொழிற்சாலைகளில் பணிப்புரியும் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்

 

 • 2022ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்ஈஜிஎஸ்) செயல்படுத்துவதற்காக 2017 – 2018 நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3820.24 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • நீட் தேர்வில் அனைத்து மொழிகளுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை தயாரிப்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.எஸ்.இ க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

 • தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து 30 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 • தமிழக அரசுத்துறை அதிகாரிகள் 21 பேருக்கு (மாநில சிவில் சர்வீஸ்) ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

  பன்னாட்டு   செய்திகள்

 

 

 • இலங்கையில் முதல் முறையாக குப்பைகளைப் பயன்படுத்தி, மின் சாரத்தை உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

 

 • “குயின் ஆப் தி டார்க்” தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த நயாகிம் காட்வெச் – மாடலிங் தொழிலில் சாதிக்கும் கருப்பு ராணி

 

 • மனைவியின் பிரசவத்திற்கு பின் தந்தைகளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் நாடுகள் (2016ம் ஆண்டிற்கான) பட்டியல் – போர்ச்சுகல் முதலிடத்தில் உள்ளது.

 

 • அமெரிக்க அதிகாரத்திற்கு உட்பட்ட மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாம் தீவை தாக்குவதற்கான திட்டத்தை வடகொரியா வெளியிட்டுள்ளது.

 

 • திருட்டுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பட்டியலில் கடந்த 2016ம் ஆண்டிற்கான தரவரிசையில் இல்-து பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது.

 

 • இலங்கையில் அனைத்து மகாண சபைகளின் தேர்தலையும் ஒரே நாளில் நடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தேசிய ஜுனியர் டென்னிஸ் போட்டி சென்னையில் (12.08.2017 தேதி முதல் 19.08.2017 தேதி வரை )எம்.சி.சி. உள்பட ஆறு இடங்களில் நடக்கிறது.

 

 • உலக தடகள போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டென் வார்ஹோலம் தங்கப் பதக்கத்தை வென்றார்

 

 • சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் வச்சியர், ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

 

 • சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் பிரணாய் இரண்டு இடங்கள் முன்னேறி 15வது இடத்தில் உள்ளார்.

 

 • இந்தியன் டெரெய்ன் பேஷன் லிமிடெட், மோன்ட்ரா ஆகியவற்றின் சார்பில் இந்திய சைக்கிள் சம்மேளன ஆதரவுடன் இந்தியாவில் 8 நகரங்களில் சைக்கிள் சாமிபியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 20ம் தேதி முதல் நடைபெறவுள்ளது

 

 • சர்வதேச கால் பந்து தரவரிசையில் இந்தியா 97வது இடத்தில் உள்ளது.

 

 • டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் “பேட்டிங்குக்கான ஆட்ட நாயகன் விருதுக்காக” சேப்பாக் சூப்பர் கில்லிஸ் வீரர் அந்தோனி தாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • சிட்டி யூனியன் வங்கியின் 100 கிளைகளில் அடுத்த ஓராண்டுக்குள் தமிழ் பேசும் ரோபோக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.காமகோடி கூறியுள்ளார்.

 

 • முருகப்பா குழுமத்தை சேர்ந்த டிஐ பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஜுன் காலாண்டில் ரூ124 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

 

 • முன்னணி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக வியன் துபே நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • 2017-18ம் ஆண்டுக்கான முதல் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிகர லாபம் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 • நிசான் நிறுவனம் தனது கார்களில் வாடிக்கையாளர்கள் உபயோகிக்கும் வகையில் ஸ்மார்ட் போனுடன் இணைந்த கார் வசதியை ‘நிசான் கனெக்ட்’ என்று பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • ரூபாய் மதிப்பு உயர்வு, விவசாயக் கடன் தள்ளுபடி, ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் 6.75-7.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டுவது கடினம் என்று மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Current Affairs

 

 • Minister of state for electronics and information technology PP Chaudhary said first phase of National Cyber co-ordination centre set up to scan country’s web trafiic to defect cyber security threats has made operational row.

 

 • The national Green Tribunal (NGT) has imposed a temporary ban on use of non-bio – degradable plastic bags which are less than 50 millions.

 

 • The Uttar Pradesh government has launched a new awareness drive called Namami gange Jagriti Yatra to focus on cleanliness along the banks of Ganga river and Maintain hygiene.

 

 • According to Asian cities and Regions outlook 2016 by Oxford economics, Delhi will have the fastest growth among all Indian cities with the economy growing almost 50 percent larger in 2021.

 

 • Facebook has launched Youtube competitor called ‘watch’ to help and keep up with the shows one follow.

 

 • ISRO to develop furl fledged Hyperspectral Imaging Earth observation satellite using a critical chip called optical Imaging detector array.

 

 • Vizag’s Rayichapalu is declared one of the rarest fish in the world by researches from the marine living Resources Departuent of Andhra University

 

 • World Bio –fuel day – August 10 celebrated to create awareness about non –fossil – fuels such as biodiesel, ethanol, biogas etc. 

 

Call Now