April 9

Date:15 Apr, 2017

April 9

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 09

தேசிய செய்திகள் :

 • இந்தியா வங்கதேசம் இடையே இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, அணுமின் உற்பத்தி ஒத்துழைப்பு உள்பட 22 முக்கிய ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி,வங்கதேசபிரதமர் ஷேக் ஹசீனாதலைமையில் கையெழுத்தாகின.
  வங்கதேசத்தின் தந்தை எனஅழைக்கப்படும் ஷேக் முஜிபூர் ரஹ்மான்(ஷேக் ஹசீனாவின் தந்தை) கௌரவிக்கும் வகையில் தில்லியிலுள்ள முக்கிய சாலைக்கு அவரதுபெயரிடுவது என அறிவிக்கப்பட்டது.
  ஷேக் முஜிபூர்ரஹ்மானின் ‘அன்ஃபினிஸ்ட் மேமோயர்ஸ்’ நூலின் ஹிந்தி மொழியாக்கப் பதிப்பைபிரதமர் ;மோடி, ஷேக் ஹசீனாவும் இணைந்துவெளியிட்டனர்.

 

 •  சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 7 நகரங்களில் சராசரி ஒலிமாசுஅளவு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ளதாக மாநிலங்களவை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே கூறினார்.

 

 •  போக்குவரத்து துறையில் பல்வேறு சீர்த்திருங்களை உறுதிசெய்யும் மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 5லட்சம் விபத்துக்கள் நடக்கின்றன. இதில் சுமார் 1.5.லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். எனவே மனித உயிர்களை காப்பதே, மசோதாவின் அடிப்படைநோக்கமாகும்.

 

 •  ஹரியாணாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒருலட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஹரியாணா அரசு முடிவு செய்துள்ளது.

 

 •  திபெர் பௌத்தமதத் துறவி தலாய் லாமாவுக்கு இந்தியாவின் மிகஉயரிய விருதான பாரதரத்னா வழங்க கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ள்து.

 

 •  பெங்களுரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்கவும், பெண்களை பாதுகாக்கவும் பிரத்யேக ‘பிங்க் ஹொய்சாலா’ ரோந்து வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

 • ஏடன் வளைகுடா பகுதியில் கடற் கொள்ளையர்களிடம் இருந்து சரக்குகப்பலை இந்திய சீனமற்றும் பாகிஸ்தான் கடற்படைகள் மீட்டுள்ளன.

 

 • அமெரிக்க நாட்டில் தகவல் ஒழுங்கு முறை விவாகரத்துறை அலுவலகத்தின் நிர்வாகிபதவியில் நியோமிராவ் என்றபெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்திலுள்ள ஆன்டனின் ஸ்காலியா சட்டக் கல்;லூரி பேராசிரியர் ஆவார்.

 

 • ஐரோப்பா கண்டத்தில் பிரான்சிலும் ஸ்பெயினிலும் ஈட்டா பிரிவினைவாதிகள் இயங்கிவந்தனர். இந்த பிரிவினை வாதிகள் தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் வடக்கு ஸ்பெயினை இணைத்து தனிநாடு உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடியதில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 

 • வெனிசூலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக இந்தவாரத்தில் 4 வது முறையாக நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

 

 • அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதி இடத்துக்கு அதிபர் டிரம்ப் பரிந்துரைத்தநில் கோhசஸச் என்ற நபரை நியமிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

 

 • அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயானவர்த்தகம் தொடர்பாக எழுந்துள்ள விரிசலை சரிசெய்ய 100 நாள் செயல் திட்டத்தை இருநாட்டுத் தலைவர்களும் அறிவித்தனர்.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தியது.

 

 •  உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிசில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின்- ரோகன் போபண்ணா-ஸ்ரீராம் பாலாஜி ஜோடி வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்தியஅணி உலககுரூப் ‘பிளே-ஆப்’சுற்றுக்குதகுதிபெற்றது.

 

 •  வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார். யூனிங்கான் 2000-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த யூனிஸ்கானின் 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்குவருகிறது.

 

 •  இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தை 2012-ல் சர்வதேச குத்துச்சண்டை சங்கம் இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. தற்போது புதிய இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் சங்க விதிமுறையின் படி தேர்வு செய்யப்பட்டனர்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • கடந்த 2016-17 ஆம் நிதிஆண்டில்,பிப்ரவரி; வரையிலான 11 மாதங்களில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 5,734 கோடிடாலலாகஉயர்ந்துள்ளது.

 

 •  டாட்டாமோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜகுவார் லேண்டுரோவர்; சொகுசுகார்கள் விற்பனை,கடந்த 2016-17 ஆம் நிதிஆண்டில் 6,04,009-ஆக உள்ளது. முந்தையநிதிஆண்டுடன் (2015-16) ஒப்பிடும் போது இது 16 சதவீதவளர்ச்சியாகும்.

 

 •  ரபிபருவ (2016 அக்டோபர் 2017 மார்ச்) கோதுமை உற்பத்தி புதிய சாதனை அளவைஎட்டும் என மத்திய அரசுநிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

 •  மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டில் (2016-17) புண்ணாக்கு ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

Call Now