April 8

Date:15 Apr, 2017

April 8

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 08

தேசிய செய்திகள் :

 • உலகசுகாதாரதினத்தைமுன்னிட்டு, இந்திய தொலைமருத்துவசங்கம் சார்பில் சிறந்த மருத்துவ சேவைகளுக்கான சிறப்பு விருது தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டது.

 

 • 2016ம் ஆண்டு திரைப்படங்களுக்கான 64வது தேசியவிருதுகள் டெல்லியில் நேற்றுஅறிவிக்கப்பட்டன.
  தமிழ் சினிமாவுக்கு 6 தேசியவிருதுகள் கிடைத்துள்ளது. தமிழ்ப் படத்துக்கான விருது ;ஜோக்கர்’ படத்துக்கு கிடைத்துள்ளது. சூர்யா நடித்தள்ள ’24’படத்துக்கு 2 தேசியவிருது கிடைத்தது.

 

 • இந்தியா- வங்கதேசம் இடையிலானபயணிகள் ரயில் சேவையின் சோதனை ஒட்டத்தை பிரதமர் மோடியும் இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் தொடங்கிவைத்தனர்.

 

 • மாநில ஆளுநர்களின் பணிகள் என்னென்ன என்பது குறித்து டெல்லியில் இன்று உயர்நிலைஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சுமார் 12 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தகுழுவின் கூட்டம் நடைபெறுகிறது.

 

 • நிதியாண்டின் தொடக்கத்தை ஏப்ரல் மாதத்திலிருந்து ஜனவரிக்கு மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லிதெரிவித்தார்

 

பன்னாட்டு செய்திகள் :

 • 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடையாது என அசாம் மாநிலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக புதியகொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்த புதியமக்கள் தொகை கொள்கை வரைவை அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ளார்

 

 •  நமதுநாட்டில் மனநலம் பாதித்தவர்களின் நலன்களைப் பேனும் வகையில் மனநல சட்டம் 1987இ செயல்பட்டு வந்தது. 29 ஆண்டுகளுக்கு மேலாக அமலிலிருந்த இச்சட்டத்தை நீக்கிவிட்டு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு புதியசட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இச்சட்டம் மனநலசட்டம் 2017 என்றழைக்கப்படும். இச்சட்டம் மனநலம் பாதித்தவர்களை சங்கிலியால் பிணைத்துக் கட்டிப்போட தடை விதித்துள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த புதிய சட்டத்துக்கு தனது ஒப்புதலை வழங்கிவிட்டார்.

 

 •  அமெரிக்க அதிபரின் செயல் அலுவலகத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இந்திய அமெரிக்கரான விஷால் அமின் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 •  உ.பி மாநிலத்தில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் 25 புதிய மருத்துவ கல்லூரிகளைஅமைக்கும் பணியை யோகிஆதித்யநத் அரசு தொடங்கியது.

 

 •  பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசன்தீவல் இன்று (ஏப்ரல் 8 ) சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் 40 முறைநிலஅதிர்வுகளும் ஏற்பட்டது. இந்தநிலநடுக்கம் நிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது.

 

 •  எதிரிநாடுகளின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து நமது நாட்டை பாதுகாக்கும் வல்லமை கொண்ட நவீன ஏவுகணை பாதுகாப்புச் சாதனத்தை இஸ்ரேயிடம் இருந்து இந்தியாவாங்குகிறது. இது தொடர்பாக இஸ்ரேல் இந்தியா சுமார் ரூ 13 ஆயிரம் கோடி மதிப்பில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

 

 •  இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துடன் ரபேல் நிறுவனத்துடனும் ஒப்பந்தமானது.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐ.பி.எல் கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரமிக்கவைத்தது.

 

 •  கடந்தஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான மாரத்தான் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற கென்யா வீராங்கனை ஜெமிமாசம் காங்கி ஊக்க மருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது

 

 •  உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியவீரர்கள் ராம்குமார்,குணேஷ்வரன் வெற்றிபெற்றனர்

 

 •  கிரிக்கெட்டில் இப்போதும் டோனியே உலகின் தலைச்சிறந்த கேப்டன் என்று புனே அணி வீரர் ரஹானே புகழாரம் சூட்டியுள்ளார்.

 

 •  ஆஸ்திரேலியாகிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஓ கீபேநியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் சங்க விருது வழங்கும் விழாவில் பங்கேற்கையில் குடிபோதையில் அவதூறாக பேசியதால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஸ்டீவ் ஓ கீபேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • வாரத்தின் இறுதி வர்த்தகதினமான வெள்ளிக்கிழமையன்று பங்குவர்த்தகம் சரிந்தது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டுஎண்  சென்செக்ஸ் 221 புள்ளிகள் சரிந்தது. தேசியபங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 64 புள்ளிகளை இழந்தது.

 

 •  அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனப் பங்கு விலை. கடந்தமார்ச் மாதம் 21-ந் தேதிமுதல் இதுவரை 150 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.

 

 •  கடந்த 2016-17-ஆம் நிதிஆண்டில் காற்றாலைமின் உற்பத்திதிறன் 5,400 மொகவாட் அதிகரித்துள்ளது.

 

 •  பாரத ஸ்டேட் வங்கியின் வாராக்கடன் ஓராண்டு காலத்தில் 49 சதவீதம் அதிகரித்துள்ளது. 

Call Now