April 7

Date:15 Apr, 2017

April 7

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 07

தேசிய செய்திகள் :

 • எதிரி நாடுகளின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து நமது நாட்டை பாதுகாக்கும் வல்லமை கொண்ட நவீன ஏவுகணை பாதுகாப்பு சாதனைத்தை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. இது தொடர்பாக இஸ்ரேல், இந்தியா இடையே சுமார் ரூ.13 ஆயிரம் கோடிமதிப்பில் 2 முக்கியஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

 

 •  கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1.37 லட்சம் கோடிக்கும் அதிகமான வரிஏய்ப்பு கண்டறிய பட்டுள்ளதாக மத்திய வருவாய்துறை தெரிவித்துள்ளது.

 

 •  கடந்த 2011லிருந்து இதுவரை 48 ராணுவ விமானங்களும், 21 ஹெலிகாப்டர்களும் விபத்தில் சிக்கியதாகவும், இவ்விபத்துகளில் 79 பேர் உயிரிழந்து விட்டதாகவும் மத்திய பாதுகாப்புதுறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே தெரிவித்தார்.

 

 •  தமிழக அரசுக்கு மருத்துவ சேவைக்கான சிறப்புவிருது டெல்லியில் வழங்கப்பட்டது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இவ்விருதை வழங்கினார்.

 

 •  உத்திரபிரதேசத்தின் முசாபர் நகரிலுள்ள குடும்பநல நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாகபணியாற்றிய தேஜ் பகதூர் சிங் வழக்கறிஞர்கள் போராட்;டம் மேற்கொண்ட போதும் 327 பணி நாட்களில் 6065 வழக்களுக்கு தீர்ப்புசொல்லி உலகசாதனை பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதனை கின்னஸ் சாதனை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

 

 •  பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகளுக்கு வீரதீர செயல்களை புரிந்ததற்கான சௌர்யசக்ரா விருதுகளை குடியரசுதலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

 

பன்னாட்டு செய்திகள் :

 • சிரியாகெமிக்கல் ஆயுததாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் உள்ள விமானதளம் மீதுஅமெரிக்கா சுமார் 60 தொமஹாக் க்ரூப்ஸ் கப்பல் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.

 

 • மெக்சிகோவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஆல்பிரிடோ பெல்ட்ரான் லெய்வாவுக்கு சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அமெரிக்க கோர்ட் வாழ்நாள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்து.

 

 • ரானுவஆட்சி நடந்து வரும் தாய்லாந்தில் புதிய அரசியல் சாசனத்தில் மன்னன் மகா வஜ்ஜிரலோங்காரன் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அடுத்தஆண்டு அங்கு பொதுத் தேர்தல் நடக்கஉள்ளது.

 

 • துருக்கிநாட்டில் பி.கே.கே என்றுஅழைக்கப்படுகிற குர்து இன போராளிகள் ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். இவர்களை பயங்கரவாதிகள் என கூறி துருக்கிஅமெரிக்க ஐரோப்பிய யூனியன் தடைசெய்துள்ளன.

 

 • இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவிவரும் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணவேண்டும் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறித் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இக்கருத்தை ஐ.நா வெளியிட்டுள்ளது.

 

 • சிரியா கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ரசாயன குண்டுவீச்சு நிகழ்த்த வில்லை என சிரியா வெளியுறவுத் துறைஅமைச்சர் வாலித் முவல்லம் திட்டவட்டமாக கூறினார்.

 

 • அல் காய்தாபயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அல் – ஷபாப் குழுவின் சோமாலியநாட்டில் அடிக்கடி தாக்குதல்கள் நிகழ்த்திவரும் நிலையில் சோமாலியா நாடுமுழுவதையும் போர்ப் பகுதியாக புதியஅதிபர் முகமதுஅப்துல்லா முகமது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • பெங்களுரு டேவிஸ் கோப்பைடென்னிஸ் போட்டியில் இந்தியா– உஸ்பெகிஸ்தான் அணிகள் இடையிலானஆட்டம் பெங்களுருவில் இன்றுதொடங்குகிறது. அணியிலிருந்து மூத்தவீரர் லியாண்டர் பெயஸ் நீக்கப்பட்டுள்ளார்.

 

 •  ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரானஆட்டத்தில் புனேஅணி வெற்றியை பெற்றுத.

 

 •  சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பெண்கள் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து–வது இடத்தில் இருந்து 2 –வது இடத்துக்குமுன்னேறியுள்ளார்.

 

 •  உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த மாதத்தில் 132 –வது இடத்தில் இருந்த இந்தியஅணி 101-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

 

 •  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்துஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் மிஸ்பா உல்-ஹக்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • கடந்த 2016-17 ஆம் நிதிஆண்டில் சூரியசக்திமின் உற்பத்திதிறன் 5526 மெகாவாட் உயர்ந்துள்ளது என மத்திய புதுப்பிக்கத்தக்கஎரிசக்திதுறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 •  உர்ஜித் பட்டேல் புதியகவர்னராக பொறுப்பேற்ற பிறகு நான்காவது முறையாக ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கை முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அவரதுதலைமையின் கீழ் 6 உறுப்பினர்கள்; கொண்ட நிதிக் கொள்கை கமிட்டி வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளது.

 

 •  முக்கியஅம்சங்கள் : ரெப்போரேட் 6.25 சதவீதமாகநீடிக்கிறது. ர்pவர்ஸ் ரெப்போரேட் 6 சதவீதமாகஅதிகரிப்பு. நடப்புநிதிஆண்டில் (2017 -18) நாட்டின் பொருளாhதாரவளர்ச்சி 7.4 சதவீதமாகஉயரும். முதல் அரையாண்டில் பணவீக்கம் சராசரியாக 4.5 சதவீதமாக இருக்கும். ஜீன் 5-6 தேதிகளில் ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆய்வுக் கூட்டம். இந்தியாவில் சென்ற நிதிஆண்டில் டிராக்டர்கள் விற்பனை 18 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்தநிதி ஆண்டில் (2016-17) ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் சீனா உடனான வர்த்தகத்தில் 4670 கோடி டாலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Call Now