April 6

Date:15 Apr, 2017

April 6

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 06

தேசிய செய்திகள் :

 • வங்கதேசத்தின் குல்னா நகர்- கொல்கத்தா இடையேயான புதிய ரயில் சேவை ஜீலை மாதம் தொடங்கப்பட உள்ளது.

 

 •  உலகளவில் புகைப்பழகத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பாக ‘தி லான்செட்’ எனும் மருத்துவ இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலகளவில் புகைப்பழக்கத்தால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படும் முதல் 4 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. அவர்கள் சீனா, இந்தியா. அமெரிக்கா. ரஷ்யா ஆகிய 4 நாடுகளை சேர்ந்தவர்கள்.

 

 •  மாட்டுவண்டி பந்தயத்தின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாக கூறி அதனை நடத்துவதற்கு 2014ம் ஆண்டு தடை விதித்தது. தடை செய்யபட்டிருந்த மாட்டுவண்டி பந்தயத்தை மீண்டும் நடத்த அனுமதி அளிக்கும் வகையில் மகாராஷ்டில சட்டபேரவையில் சட்டத் திருத்த் மசோதா நிறைவேற்றப்பட்டன.

 

 •  குழந்தைகள் பாதுகாப்பு சங்கங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை 4 வார காலத்துக்குள் நிரப்ப வேண்டும் என மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 •  வெளிநாடுகளிலிருந்து 5 லட்சம் டன் வரையிலான சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய ஜீன்; மாதம்; 12ம்; தேதி வரை அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

 

 •  நெசவாளர்களின் தங்களுடைய பழைய தறிகளை புதிதாக மாற்றுவதற்காக மத்திய அரசு 90மூமானியம் வழங்கும் என மத்தி;ய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

 

 •  நாட்டிலேயே நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

 

பன்னாட்டு செய்திகள் :

 • முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்த ஏவுகனையின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது என தென்கொரியா அறிவித்தது.

 

 •  அமெரிக்கா தேசிய பாதுகாப்புக் கவுன்சிலில் இருந்து ஸ்டீவ் பேனனை அமெரிக்கா அதிபர் டிரம்ப் திடீரென நீக்கியுள்ளார்.

 

 •  ஆஸ்திரேலியாவில், சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட, 903 கிலோ எடை கொண்ட ‘மெதாம் பெடாமைன’ என்ற போதை மருந்தை போலீஸார் கைப்பற்றினர். 68 கோடி டாலர் மதிப்பிலான இந்த போதை மருந்து தான் போலீஸாரால் கைப்பற்றப்பட்டதிலேயே மிகவும் அதிகளவாகும்.

 

 •  பிரபல ஊடகவியாளர் டினா பிரவுன் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுடன் இணைந்து (உமன் இன் த வேர்ல்டு) என்ற பெயரில் நியூயார்க்கில் சர்வதேச மகளிர் வருடாந்திர உச்சி மாநாட்டை நடத்தினர்.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • 10-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஏப்ரல்-5-ல் கோலாகலமாக தொடங்கியது.

 

 •  வங்காள தேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

 

 •  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் செயல்பட்டு வரும் பேட்மிண்டன் அகாடமிக்கு இந்த ஆண்டுக்கான வீரர்-வீரங்கனைகள் தேர்வு செய்யப்படுகின்றனர்

 

 •  கிரிக்கெட்டின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் (அல்மனாக்)பத்திரிக்கை கடந்த ஆண்டில் (2016) எல்லா வடிவிலான ஆட்டத்திலும் விராட்கோலி அபாரமாக செயல்பட்டதை அங்கீகரிக்கும் வகையில் விராட்கோலியை உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்று அறிவித்து இருப்பதுடன், இந்த வாரத்தில் வெளியான பத்திரிகையிலும் அவரது படத்தை வெளியிட்டு மீண்டும் கவுரவம் அளித்து இருக்கிறது

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • ரிசர்வ் வங்கி ஆய்வுக்கூட்டத்தின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 64 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 27 புள்ளிகள் அதிகரித்தது.

 

 •  மார்ச் மாத இறுதியில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.18.30 லட்சம் கோடியை எட்டி உள்ளது.

 

 •  சங்கரா பில்டிங் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்குகள் நேற்று பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.

 

 •  நடப்பு நிதி ஆண்டில் (2017-18)பாசுமதி அரிசி ஏற்றுமதி 41 லட்சம் டன்னை எட்டும் என கடன் தகுதி தர நிர்ணய நிறுவனமான இக்ரால தெரிவித்துள்ளது.

 

 •  பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டி உள்ளது. பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் என்பது கடன் சார்ந்த ஆவணங்கள் ஆகும். இந்த ஆவணங்களை பங்குகளாக மாற்ற இயலாது.

Call Now