April 5

Date:07 Apr, 2017

April 5

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 05

தேசிய செய்திகள் :

 • குஜராத் மாநில காவல்துறை தலைவராக (டிஜிபி) மூத்த ஐபிஎஸ் பெண் அதிகாரி கீதா ஜோரி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் குஜராத் மாநிலத்தின் முதல் பெண் டிஜிபி எனும் பெறுமையை அவர் பெற்றுள்ளார்.

 

 •  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய திட்டமான பொலிவுறு நகரங்களின் அடுத்த பட்டியல் வரும் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 25ல் பொலிவுறு நகரங்களின் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் 100 பொலிவுளு நகரங்களை உருவாக்குவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது வரை 60 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு பொலிவுறு நகரங்களாக அறிவித்துள்ளது.

 

 •  ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான 2 நாள் சர்வதேவ மாநாடு லண்டனில் ஏப்ரல் 1,2 தேதிகளில் நடைபெற்றது. 55 நாடுகளை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஆயுர்வேத மருத்துவத்தை உலகளவில் ஊக்குவிப்பதற்காக 9 அம்ச தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 •  பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து அடுத்த மாதத்துடன் 3 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. இதையடுத்து இந்த 3 ஆண்டுகள் மத்திய அரசு செய்த சாதனைகளை விளக்கி விரிவான அறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 •  187 உறுப்பினர்கள் கொண்ட சர்வதேச தொழிலாளர் நிறுவனம் 1919ல் நிறுவப்பட்டது. இந்தியா இதனை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். இதுவரை இதன் 45 தீர்மானங்களை இந்தியா ஏற்றுள்ளது. அதில் 42 நடைமுறையில் உள்ளது. கைலாஷ் சத்யார்த்தி 2014ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசினை பாகிஸ்தானின் மலாலா யூசுப் சாய்யோடு பகிர்ந்து கொண்டார்.

 

 •  200ரூபாய் நோட்டு அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த 200ரூ நோட்டுகள் ஜூன் மாதத்துக்கு பின் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தனது ஒப்புதலை அளிக்க வேண்டும் என்பது அவசியம்.

 

 • உத்திரப் பிரதேசத்தில் ரூ 36 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 •  தில்லியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மணிக்கு 714பேர் பிடிபடுவதாக போலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது இருமடங்காக அதிகரித்துள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

 • ஹாங்காங்கில் சோத்பை நிறுவனம் சார்பில் ஏப்ரல் 4ல் நடந்த ஏலத்தில் பிங்க் ஸ்டார் வைரம் ரூ 470 கோடி விற்பனையாகி புதிய உலக சாதனை படைத்துள்ளது. 59.60 காரட் கொண்ட இந்த வைரம் உலகிலேயே மிகப்பெரியது என அமெரிக்காவின் ஜெம்மாலஜிகல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த 1999ம் ஆண்டு ஆப்ரிக்காவில் உள்ள சுரங்கத்தில் டி பீர்ஸ் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. 2.69க்கு 2.06 செமீ அளவும் 11.92 கிராம் எடையும் கொண்டது.

 

 • சீனாவின் அதிகாரமிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் சீனஅதிபர் ஜிஜின்பிங் பங்கேற்ற கூட்டத்தில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து 100கிமீ தொலைவில் நியூயார்க் நகரத்தை 3 மடங்கு பெரியநகரம் உருவாக்குவது குறித்து திட்டமிட்டுள்ளனர்.

 

 •  பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் உள்துறை மந்திரி இஸ்மாயில் சூனோவின் பதவியை பறித்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

 

 •  இந்தியா வந்துள்ள பிரிட்டன் நிதியமைச்சர் பிலிப் ஹாமண்ட், இந்திய நிதியமைமச்சர் அருண் ஜேட்லி ஆகியோரிடையே இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தை தில்லியில் நடைபெற்றது. மேலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரிசக்தி திட்டங்களுக்காக இந்தியாவும், பிரிட்டனும் இணைந்து 50கோடி பவுண்ட் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

 

 •  உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஏலத்தில் 53503 டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. அயோவா மாகாணத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் தொடர்பாக எழுந்த பல்வேறு சந்தேக கேள்விகளுக்கு ஐன்ஸ்டீன் 1953 செப்டம்பர் 7ம் தேதி எழுதிய மிக விவரமான பதில் கடிதம் ஆகும்.

 

 •  சிரியாவின் இத்லிப் மாகாணம் கான்ஷேகுன் என்ற இடத்தில் போர் விமானம் ரசாயனத் தாக்குதல் நிகழ்த்தியதில் 58 பேர் பலியாகினர்.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • சர்வதேச ஊக்கமருந்து தடுப்புக் கழகத்தின் 2015ம் ஆண்டுக்கான ஊக்கமருந்து தடைமீறல் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3வது ஆண்டாக 3வது இடம் பெற்றுள்ளது.

 

 •  10வது ஐபிஎல் போட்டி ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது.

 

 • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில ஜூனியர் ஹாக்கி போட்டியில் திருச்சி மாவட்ட அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

 •  ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு தொடரிலும் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும் அதிக விக்கெட்டுகளை சாய்க்கும் வீரருக்கு ஊதா நிறதொப்பியும் வழங்கப்படுகிறது.

 

 •  ஐபிஎல் போட்டி ஏப்ரல் 5 முதல் மே 21 வரை நடக்கவுள்ளது. சோனிசிக்ஸ், சோனி ஈ எஸ் பின், சோனி மேக்ஸ் ஆகிய சானல்களில் ஐபிஎல் போட்டிகளில் ஒளிபரப்பாகின்றன.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை தொழில் நிறுவனங்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்தன என்ற விவரத்தை தாக்கல் செய்யுமாறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 •  செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோட்டரோலா நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி5 மாடல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்டின் நவீன வடிவமான ‘நூகட்” தொழில்நுட்பத்தில் மோட்டோ ஜி5 இயங்க கூடியது. மோட்டோ ஜி5 செல்லிடப்பேசிகள் அமேஸான் வலைதளத்தில் கிடைக்கும். இதன் விலை ரூ 11999.

 

 •  இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைத்தின் புதிய தலைவராக கணேஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையிலுள்ள ஆகாஷ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் மற்றும் விஜய் சில்க் ஹவுஸ் குழுமத்தின் தலைவராக உள்ள இவர் ஏப்ரல் 1லிருந்து இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

 

 •  வர்த்தக வாகனங்களைத் தயாரிக்கும் ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு பிஎஸ்-IIIதடை காரணமாக ரூ 2500 கோடி இழப்பு ஏற்படும் என்று தரச்சான்று நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. பிஎஸ்-III புகை சோதனைக்குள்பட்ட வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து தயாரிக்க கூடாது என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 •  கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் இனி ஹெச் -1பி விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 •  நடப்பு 2017 -18 நிதியாண்டில் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி ரூ. 33 லட்சம் கோடியை எட்டும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Call Now