April 4

Date:07 Apr, 2017

April 4

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 04

தேசிய செய்திகள் :

 • நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பித்துள்ளது. பெங்களுரில் அமைந்துள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

 

 • கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் உள்ள வீரபத்ர சிங்கின் ‘மேப்பிள் டேஸ்டினேஷன்ஸ் அன்ட் டிரீம் பில்ட்’ என்ற பெயர் கொண்ட பண்ணை வீடு முடக்கப்படுகிறது. அந்த மதிப்பீட்டு விலை ரூ 6.61 கோடி. ஆனால் அதன் சந்தை மதிப்பு ரூ 27 கோடியாகும்.

 

 •  ராணுவ தளவாடங்கள் கொள்முதல் கமிட்டி கூட்டம் ராணுவ மந்திரி அருண்ஜேட்லி தலைமையில் நடந்தது. இதில் சுமார் ரூ 860 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தரையிலிருந்து விண்ணில் ஏவப்படும் பராக் ஏவுகணை ரூ500 கோடிக்கு இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கான அனுமதியும் இதில் அடங்கும்.

 

 •  இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் ஓராண்டுக்குள் 2 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் என பிரதமர் மோடி கூறினார். ஏழைப் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உறுதியோடு இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

 

 •  சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களுரு, ஐதராபாத் ஆகிய 6 பெருநகரங்களில் பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் மாதாந்திர சராசரி இருப்பு தொகையாக ரூ 5000 வைத்திருக்க வேண்டும். ஏப்ரல் 1 முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.

 

பன்னாட்டு செய்திகள் :

 • இந்தியாவுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்பல் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 •  ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் குர்ராம் பகுதியானது பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகும். பயங்கரவாதம் காரணமாக எப்போதும் பதற்றமான நிலையை கொண்ட பகுதியாகும். ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்கள் இரு நாடுகளிலும் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

 

 •  தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் லெனின் மொரீனோ வெற்றி பெற்றார்.

 

 •  கொலம்பியாவின் மொகோவா நகரில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 254 பேர் உயிரிழந்தனர்.

 

 •  சீனாவில் அன்ஹீயி மாகாணம் ஆன்குயிங் நகரில் வான்ஹீவா எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான சிறப்பு வகை எண்ணெய் ஆலை சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

 

 •  ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காணவும் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படவும் ரஷியா, சீனா, பாகிஸ்தான் இணைந்து முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

 

 •  டெல்லியில் நடந்து வந்த இந்திய ஓபன் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பி.வி.சிந்து, ஸ்பெயினின் கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 •  உலக பெண்கள் ஆக்கி லீக் போட்டியில் இந்திய அணி பெலாராசை தோற்கடித்து 2வது வெற்றி கண்டது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • சர்வதேச அளவில் மிக விலையுயர்ந்த அலுவலக இடங்களில் டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் 9வது இடத்தை பிடித்துள்ளது. கன்னாட் பிளேஸில் ஒரு ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கு 105.71 டாலர் வாடகையாக உள்ளது என பிராப்பர்டி ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஹாங்காங் சென்ட்ரல் முதலிடத்தை பிடித்துள்ளது.

 

 •  4ஜி தொழில்நுட்பத்தில் தரவுகளை அதிவேகத்தில் பதிவிறக்கம் செய்வதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தை பிடித்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ‘டிராய்’ தெரிவித்துள்ளது.

 

 •  கடந்த 2016-17 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத கால அளவில் இந்திய நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 9.5 சதவீதம் அதிகரித்தது.

 

Call Now