April 30

Date:30 Apr, 2017

April 30

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 30

தேசிய செய்திகள் :

 • ஆந்திர மாநிலத்தில் தினமும் 3 மணி நேரம் மட்டுமே மின் சப்ளை செய்ததால் மக்கள் தத்தளித்து வந்தனர். இதற்கு முடிவு கட்டும் வகையில் சோலார் மின் உற்பத்திக்கான திட்டங்களை அம்மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் ஆந்திரா மாநிலம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது.

 

 • குறைப்பிரசவங்கள் அதிகரித்து வருவதால் குழந்தைகளை பராமரித்து சிகிச்சை அளித்து காப்பாற்றும் வகையில் நவீன முறையில் செயற்கை கருப்பையை மருத்துவர்கள் உருவாக்கி வருகின்றனர். மேலும் இந்த செயற்கை கருப்பையை உருவாக்கும் முயற்சியை அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் கரு ஆராய்ச்சி மையத்தில் வைத்து ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • ஐஐடியில் தற்போது பெண்களுக்கு 8 முதல் 9 சதவீதம் வரை இட ஒதுக்கீடு உள்ளது. இதனை 2020ம் ஆண்டுக்குள் 20 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பாட வாரியாக மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • புதிய ரெயில் தண்டவாளம் அமைப்பது தொடர்பாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பாட்நாயக் விடுத்த கோரிக்கைக்கு மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பாபு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

 

 • ஆந்திராவில் ரேசன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் ரூ.1– அரிசியை வாங்க விரும்பாதவர்களுக்கு பணமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

பன்னாட்டு செய்திகள் :

 • அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக 70 வயது டெனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று, நேற்று முன்தினம் 100 நாட்களை கடந்தார். இதையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் செய்தி விடுத்தார்.

 

 • பிரசித்தி பெற்ற கூகுள் இணைய தள நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தவர் சுந்தர் பிச்சை. இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 61ஃ2 லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடியே 22 லட்சத்து 50ஆயிரம்). ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1300 கோடி). 2015ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட தொகையை விட இது இரு மடங்கு ஆகும்.

 

 • துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த வருகையின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள், அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவுக்கான இடம், ஒன்றிணைந்த தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸ் ஆகியோரிடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பிராந்திய பிரதிநிதித்துவத் தன்மையை மேம்படுத்தும் வகையில், அந்த அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவளிப்பதாக அதிபர் அனஸ்டாசியாட்ஸ் உறுதியளித்தார்.

 

 • சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து உருவாக்கிய ஜேஎப்-17பி என்ற புதிய போர் விமானத்தின் சோதனைப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று சீன அரசு விமான நிறுவனம் அறிவித்தது.

 

 • மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தை பலப்படுத்தும் வகையில் பிரிட்டன் தலைநகர் லண்டன்-சீனா இடையிலான முதல் நேரடி சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. பிரிட்டன்-சீனா இடையிலான இந்த சரக்கு ரயில் 12,000கி.மீ கடந்து சீனாவுக்கு வந்தடைந்தது. மேலும் இது உலகின் இரண்டாவது நீளமான ரயில் பாதையாகும்.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஸ்ட்டகர்ட் போட்டியின் அரை இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மரியா ஷரபோவா பிரெஞ்சு வீராங்கனையான லாடெனோவிக்கிடம் தோல்வியடைந்தார்.

 

 • மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் 22 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

 

 • 19வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் மற்றும் இந்திய நட்சத்திரம் ஜோஸ்னா சின்னப்பா இருவரும் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர். மேலும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சவுரவ் கோஷல் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார்.

 

 • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், மற்றும் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • டலஹாஸீ ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ராம்குமார் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • சரக்கு மற்றும் சேவை வரி வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் நடுத்தர காலத்தில் எட்டு சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி இருக்கும். மேலும் இந்த சீர்திருத்தம் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும் என சர்வதேச செலவாணி நிதியம் கணித்திருக்கிறது.

 

 • சென்னையில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்படும் சுந்தரம் பி.என்.பி. பரிபா நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் ரூ.154 கோடி லாபம் ஈட்டியது. 2015-16 நிதி ஆண்டில் ஈட்டிய லாபம் ரூ.153 கோடியுடன் ஒப்பிடும் போது இது சற்றே அதிகமாகும்.

 

 • தேசிய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 185 புள்ளிகள் உயர்ந்து 9304 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் ரூ.1,42,309.69 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

 

 • நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முட்டை விலையின் விலை 6 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 324 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

Call Now