April 3

Date:03 Apr, 2017

April 3

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 03

தேசிய செய்திகள் :

 • ஆந்திராவில் கடந்த 2014ல் ஜூன் 8, தெலுங்குதேசம் பாஜக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்று முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகிக்கிறார். ஆந்திர அமைச்சரவை நேற்று பெரியளவில் மாற்றியமைக்கப்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ்க்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும் 10 பேர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 • தேர்தல் ஆணையம் தன்னிடமுள்ள கடந்த 2006ம் ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்ட 9லட்சத்து 30ஆயிரத்து 430 மின்னணு வாக்கு பதிவு இயந்திர பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக தேர்தலின் போது முறைகேடுகள் செய்ய யாராவது முயற்சி மேற்கொண்டால் தானாகவே நின்றுவிடக் கூடிய அடுத்த தலைமுறை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. புதிய இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ. 19400 கோடி செலவாகும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது. இந்த இயந்திரங்கள் 2018க்குள் அறிமுகம் செய்யபட வாய்ப்புள்ளது.

 

 • டெல்லி வந்துள்ள மலேசிய பிரதமர் நஜூப் ரசாக் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ரூ.34347 கோடி மதிப்பிலான 5 திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இரு நாட்டு வர்த்தக உறவை வலுப்படுத்த இருவரிடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

 • காஷ்மீரில் 9 கிமீ நீளமுள்ள ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். காஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும் ஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் செனானி நஷ்ரி இடையே 9.2கிமீ தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி 2011ல் தொடங்கியது. இமயமலை அடிவாரத்தில் 1200மீ உயரத்தில் ரூ3720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்க பாதை ஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும். சுரங்கப் பாதையின் ஒவ்வொரு 300 மீட்டரிலும் குறுக்குப் பாதை அமைத்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

 

 • சரக்கு மற்றும் சேவை துறைகளில் நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், ஆன்மீக பயணங்கள், திறன் மேம்பாடு போன்ற துறைகள் தற்போது வரிவிதிப்பில் இருந்து விலக்கு பெற்றுள்ளன.

 

 • ரயிலில் தீப்பிடித்தால் தானாக ரெயிலை நிறுத்தும் நவீன பாதுகாப்பு கருவி ராஜ்தானி மற்றும் தேஜாஸ் எக்ஸ்பிரசில் பொருத்தப்படுகிறது. ரயிலில் தீப்பற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டால் முதலில் இந்த கருவி அபாய ஒலியை பலமாக எழுப்பி தீ பற்றியது குறித்து அறிவிக்கவும் செய்யவும். இரண்டாவதாக அதிக அழுத்தத்துடன் நீரை வெளியேற்றி தீ பற்றிக் கொள்ளாமல் தடுக்கும். மூன்றாவது நிலையாக பிரேக் போட்டு உடனடியாக ரயிலை நிறுத்திவிடும்.

 

பன்னாட்டு செய்திகள் :

 • இந்தோனேசிய கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 81 வெளிநாட்டுப் படகுகளை பறிமுதல் செய்து இந்தோனேசிய அரசு ஏப்ரல் 1ல் தீயிட்டு அழித்தது. 2014ம் ஆண்டிலிருந்து இதுவரை 317 படகுகள் அழிக்கப்பட்டுள்ளன.

 

 •  தென்மேற்கு கொலம்பியாவின் பலபகுதிகளில் கடந்த சிலநாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 206 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 •  பிரபல ரஷிய கவிஞர் இவ்ஜினி இவ்டுஷென் கோ அமெரிக்காவில் (ஏப்ரல் -1)ல் காலமானார். இவர் மாஸ்கோவில் இலக்கிய பாடத்தில் உயர் கல்வி கற்றார். தனது 20வது வயதில் கவிதைகள் எழுத தொடங்கினார். இவர் இரண்டாம் உலகப் போரின் இறுதி கால கட்டத்தில் சேவியத் யூனியனில் படுகொலைக்கு ஆளான யூதர்கள் குறித்த ‘பாபி யார்’ என்ற இவருடைய மிகப் பிரபலமான கவிதைகள் உலகமெங்கும் புகழை தேடி தந்தது.  ரஷிய தலைநகர் மாஸ்கோ அருகே எழுத்தாளர்களின் குடியிருப்பையொட்டி உடல் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது இவருடைய இறுதி ஆசை.

 

 •  இலங்கை அரசமைப்பு சட்ட வழிகாட்டல் குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு பண்டாரநாயகா காலத்தில் 1972 மே 22ல் அரசமைப்புச் சட்டம் அமல் செய்யப்பட்டது. அதற்கு மாற்;றாக 1978ல் புதிய அரசமைப்பு சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.

 

 •  பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் இந்தியாவின் கொள்கை தோல்வியடைந்து விட்டது. பாகிஸ்தானை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்த முயலுவது அறிவற்ற செயலாகும். பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் கொள்கைளை கடைப்பிடித்தால் இந்தியா தான் பாதிக்கப்படும் என ஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதர் மலிகா லோதி தெரிவித்தார்.

 

 •  கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 10 இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கி கணக்கு விவரங்களை ஸ்விட்சர்லாந்து அரசிடம் இந்திய அரசு கேட்டுள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 •  மகளிர் உலக ஹாக்கி லீக் 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷ_ட் அவுட் முறையில் உருகுவே அணியினைத் தோற்கடித்தது.

 

 •  தஞ்சாவூர் மாநில அளவிலான அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்க இடையே நடைபெற்ற வாலபால் போட்டியில் ஆடவர் பிரிவில் நீலகிரி மாவட்டம் முதலிடம் பிடித்தன.

 

 •  இந்திய ஓபன் சூப்பர்சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.லியோன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் கனடாவின் ஆதால் ஷம்சுதீன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 26 ஆண்டுகளில் பயஸ் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவதொரு போட்டியில் பட்டம் வென்றிருக்கிறார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ‘249 ரூபாய்க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட்’ திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி தினசரி 10ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா இலவச அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.

 

 •  கடந்த 2015 – 16 நிதியாண்டில் காற்றாலைகள் மூலம் 3423 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் 2016- 17 நிதியாண்டுக்கான இலக்கு 4000 மெகாவாட்டாக நிர்ணயக்கப்பட்டது. காற்றாலை மின்உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்த பல்வேறு கொள்கை திட்டங்களால் அதன் உற்பத்தி இலக்கை விஞ்சி 5400 மெகாவாட் என்ற அளவை எட்டி சாதனை படைத்துள்ளது.

 

 •  டாடா மோட்டார்ஸின் அங்கமான டி.ஏ.எல் நிறுவனம் இந்தியாவில் தயாரித்த ‘பிரா போ’ ரோபோக்கள் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

 

 •  கள்ள நோட்டு புழக்கத்தை கண்டுபிடிப்பதற்காகவும் தடுப்பதற்காகவும் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை 3 அல்லது 4 வருடத்துக்கு ஒருமுறை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

 

Call Now