April 29

Date:29 Apr, 2017

April 29

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 29

தேசிய செய்திகள் :

 • தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நீர் இருப்பு விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் நீர் இருப்பு விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • மத்தியப் பிரதேசத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு 20லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு வீடும், மத்திய அரசின் ரூ.3லட்சம் மானியத்துடன், மாநில அரசின் ரூ.2லட்சம் நிதியுடன் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 • தில்லியில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற யுசிஜி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி மாணவர்கள் குறித்த விவரங்களை, அந்தந்த பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு விவரங்களை வெளியிடும் போது மாணவர்களின் ஆதார் எண் விவரத்தை வெளியிட வேண்டாம். ஆதார் சட்டப்படி, ஒருவரின் ஆதார் விவரங்களை வெளியிடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது என பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

 

 • இந்தியா – சைப்ரஸ் இடையே விமானச் சேவை, கடல் வழி வர்த்தகம் ஆகியவற்றை ஊக்குவிப்பது உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

 • அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதில் இந்தியா போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால், அமெரிக்காவின் சில காப்புரிமைகள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

 

 • இந்தியாவில் வரும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ள சரக்கு – சேவை வரி விதிப்புச் சட்டத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என்று பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

 • பயிர் உற்பத்தியை அதிகரிக்க குழு விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் வலியுறுத்தினார்.

பன்னாட்டு செய்திகள் :

 • அணுஆயத ஏவுகணை சோதனைகளை நிறுத்துமாறு வடகொரியாவிடம் சீனா கேட்டுக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

 

 • பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முகத்தை முழுவதுமாக மறைக்கும் வகையிலான பர்தா முகத்திரை அணிவதற்கு ஜெர்மனி தடை விதித்துள்ளது.

 

 • விவசாயிகளின் தற்கொலைக்கு ஒரு முக்கிய காரணமாக அவர்களிடம் ஆன்மீக உணர்வின் போதாமையும் விளங்குகிறது என்று பிரபல ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.

 

 • வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் இறங்கி உள்ளது. இந்த சோதனை தோல்வியில் முடிந்தது என பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது.

 

 • பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.8 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 • தற்போது அமைக்கப்பட்டு வரும் கிழக்கு புறவழி அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துடன் மேலும் 12 அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மூன்று திட்டங்கள் இவ்வாண்டு துவங்கப்படும் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

விளையாட்டுச் செய்திகள் :

 • மலேசியாவில் 26-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது.

 

 • இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சுஷிலா பன்வார் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

 • 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகப் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்களில் ஒன்றான கொச்சியில், போட்டிக்கான ஏற்பாடுகள் தாமதமாக நடைபெற்று வருவதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 

 • சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகள் சமீபத்தில் நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த (சிஆர்பிஎஃப்) வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார்.

 

 • ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மரியா ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேறினார்.

 

 • 19வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த கால்இறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் ஹாங்காங்கைச் சேர்ந்த லியூ டஸ் விங்கை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அதே போல் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா ஜப்பானைச் சேர்ந்த மிசாகியை வெளியேற்றி அரை இறுதிக்கு முன்னேறினார்.

 

 • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 3வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தர வரிசையில் 7வது இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை ஹீ பிஞ்சியாவிடம் தோல்வியடைந்தார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • இந்தியாவை சேர்ந்த டாடா குழுமத்துக்கும், ஜப்பானை சேர்ந்த டொகோமோ நிறுவனத்துக்கும் இடையேயான இழப்பீடு விவகாரத்தில் ரிசர்வ் வங்கி தலையிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • இந்தியாவில் சொத்து சமநிலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐநா ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஒரு சதவீத பணக்காரர்கள் மொத்த சொத்தில் 53 சதவீதத்தை வைத்திருக்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

 

 • இந்தியாவின் முக்கியமான மேலாண்மை நிறுவனமான ஐஐஎம் அகமதாபாத்தின் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் ஆஷிஷ் நந்தா ராஜினாமா செய்துள்ளார். இன்னும் ஓர் ஆண்டுக்கு மேல் இவரது பதவி காலம் இருந்தாலும், தன்னுடைய சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

 

 • முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ரூ பைனான்ஸ் நிறுவனம் ஜனவரி-மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.665.88 கோடியை நிகர வருவாயாக ஈட்டியது. 2015-16 நிதி ஆண்டில் ஈட்டிய நிகர வருவாய் ரூ.603.42 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 10சதவீதம் அதிமாகும்.

 

 • தனியார் துறையைச் சேர்ந்த ஃபெடரல் வங்கியின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.256.59 கோடியாக இருந்தது.

 

 • சாதகமற்ற சந்தை நிலவரங்களால் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் சாதனை அளவான 30,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது.

Call Now