April 28

Date:28 Apr, 2017

April 28

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 28

தேசிய செய்திகள் :

 • அக்னி3 ஏவுகணை சோதனை நேற்று ஒடிசா மாநிலம் தாம்ரா கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 16மீட்டர் உயரமும், 8டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணை இந்தியாவின் போர் ஆயுத சொத்தாக கருதப்படுகிறது. 1.8 மீட்டர் அகலம் கொண்ட இதில் 2 நிலைகளில் திட எரிபொருள் இருக்கும். இந்த ஏவுகணை அணு ஆயுதங்கள் மற்றும் 1.5டன் அளவுக்கு போர் ஆயுதங்களையும் ஏற்றிச் செல்லும். மேலும் இந்த ஏவுகணை சோதனையில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை அடைந்து சாதனை படைத்தது.

 

 • மருத்துவச் செலவுக்காக பி.எப் தொகையைப் பெறுவதில் முன்பிருந்த நடைமுறைகளை நீக்கி தொழிலாளர் நலத்துறை வழிவகை செய்துள்ளது. இதன்படி, தொழிலாளர்கள் தங்கள் பி.எப். கணக்கில் உள்ள பணத்தை மருத்துவச் செலவுக்காக எவ்வித கெடுபிடியம் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • பணியின் போது உயிரிழக்கும் கிராமப்புற அஞ்சலக ஊழியர்களின் வாரிசுகளுக்கு விண்ணப்பித்த மூன்று மாதங்களில் பலன்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • ஸ்ரீராமானுஜரின் 1000-வது அவதார திருநாளை முன்னிட்டு அவரது நினைவைப் போற்றும் வகையில் ஸ்ரீராமானுஜர் நினைவுத் தபால் தலை மே1 ம் தேதி வெளியிடப்படுகிறது.

 

 • சிறு நகரங்களுக்கு விமானச் சேவையை நீட்டிப்பதற்கும், ஏழை எளியோர் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்வதற்கும் வழிவகுக்கும் ‘உடான்’ என்ற புதிய திட்டத்தின் கீழான முதல் விமானச் சேவையை, ஹிமாசலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில் உள்ள ஜூப்பர்ஹட்டி விமான நிலையத்தில், பிரதமர் மோடி ஏப்ரல்.27ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பன்னாட்டு செய்திகள் :

 • வடகொரியா 6-வது முறையாக அணுஆயுத சோதனை நடத்த தயாராகி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, அணுஆயுத சோதனை நடத்தினால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 • சீனாவிலேயே முற்றிலுமாக உருவாக்கப்பட்ட மிகப் பெரிய போர்க் கப்பல் அந்நாட்டு டாலியன் நகரின் கடலில் இறக்கப்பட்டது. சுமார் 50 ஆயிரம் டன் எடை கொண்ட இந்தப் போர்க்கப்பலை உருவாக்கும் பணியை 2013-ம் ஆண்டு சீனா தொடங்கியது. இந்த நிலையில் முழு கட்டுமானப் பணி முடிந்த நிலையில் ஏப்.26ம் தேதியன்று இப்போர்க் கப்பலை கடலில் இறக்கி உலக நாடுகளிடையே தனது பலத்தை சீனா நிருபித்துள்ளது.

 

 • அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப்.கென்னடி இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்திய நாட்குறிப்பு சுமார் ரூ.4.74 கோடிக்கு (7,18,150 டாலர்) ஏலத்தில் விற்பனையாகியது. அந்த நாட்குறிப்பு மொத்தம் 61 பக்கங்களை உள்ளடக்கியுள்ளது. அதில், 12 பக்கங்களில் கென்னடி தனது கைப்பட எழுதியுள்ளார். எஞ்சியுள்ள 49 பக்கங்களில் தட்டச்சு மூலம் தனது எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • முன்னாள் அதிபர் ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக அனைத்துப் பிரிவினரின் வருவாய்க்கும் விதிக்கப்பட்ட கூடுதல் 3.8மூ வரி ரத்து செய்யப்படும். புதிய வரி விகிதங்களால் வரி ஏய்ப்பு குறையும், அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்பதால் தனி நபர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்குமான வருமான வரி விகிதங்களைக் குறைத்து அதிரடி மாற்றங்களை டிரம்ப் அறிவித்தார்.

 

 • வெறும் 100 டாலர்களை மட்டும் பெற்றுக்கொண்டு, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஒன்றை தென்கொரியா வழங்க உள்ளது. இது கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்த உதவியாக அமையும் என்று பிலிப்பைன்ஸ் கூறுகிறது.

விளையாட்டுச் செய்திகள் :

 • சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் கோடைகால கூடைப்பந்து பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் மே.1ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. 10 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள் என்று சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் எஸ்.எஸ்.நிசார் தெரிவித்துள்ளார்.

 

 • 19வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய முன்னணி வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜெம்கா அய்படோவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். அதே போல் சேத்துப்பட்டில் நடந்த ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபிகா பலிக்கல் மலேசியாலைச் சேர்ந்த லீ ஆன்ட்ரியாவை விரட்டியடித்து கால் இறுதியை எட்டினார்.

 

 • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 3வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தர வரிசையில் 15வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை அயா ஹோரியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

 

 • திருவாரூரில் கடந்த 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி நிறைவடைந்த 45-வது மகளிர் செஸ் போட்டியில் திருவாரூர், நாகை, திருச்சி, சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்பட 14 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னையைச் சேர்ந்த ஆர்.திவ்யலட்சுமி சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பெங்களுரு அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்திலும் தோல்வியடைந்தது. இதன் மூலம் பெங்களுரு அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 15.8 சதவீதம் உயர்ந்து ரூ.1,709 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,476 கோடியாக நிகர லாபம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • தனியார் துறையைச் சேர்ந்த லஷ்மி விலாஸ் வங்கியின் சென்ற நிதி ஆண்டு லாபம் 42.08 சதவீதம் அதிகரித்தது. லஷ்மி விலாஸ் வங்கி சென்ற நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.864.99 கோடி வருவாய் ஈட்டியது. முந்தைய 2015-16 நிதியாண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.758.84 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • அமெரிக்கா, ஹாங்காங் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய ஆபரணங்களுக்கான தேவை அதிகரித்ததையடுத்து, ஏற்றுமதி கணிசமான அளவில் அதிகரித்துள்ளது என்று கவுன்சிலின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • வணிக நூலகம் வளரும் உலகிற்கு புதிய பாதையாக ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகம் வல்லுநர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் மேலாண்மை உத்திகளை உருவாக்குபவர்களுக்கும் மிகவும் உதவியாக உள்ளது. மேலும் இந்த புத்தகம் மாறும் உலகத்தில் எவ்வாறு பயணிப்பது என்பதை பற்றிய கருத்துகளையும் அறியத் தருகிறது.

Call Now