April 27

Date:27 Apr, 2017

April 27

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 27

தேசிய செய்திகள் :

 • இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, 5நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தில்லியில் அவரை மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறைகள் அமைச்சர் நிதின் கட்கரி ஏப்.26 அன்று சந்தித்து பேசினார். அப்போது சாலை கட்டுமானத்தில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயல்பட்டு இலங்கையின் யாழ்ப்பாணம் பிராந்தியத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி தருவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் யாழ்ப்பாணமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • இந்தியாவுக்குள் 5 ஆண்டுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லும் வகையிலான சுற்றுலா விசா, வங்கதேச விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் என்று இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

 

 • கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை மற்றும் அணு ஆயுதத் தாக்குதல் மிரட்டல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் “தாட்” வான் பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடம் தென் கொரியாவில் நிலை நிறுத்தப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. அதே மாதிரி சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவின் அதி நவீன “தாட்” வான் பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடம் தென் கொரியாவைச் சென்றடைந்தது.

 

 • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலை சீனா நேற்று அறிமுகப்படுத்தியது. இந்த கப்பல் சீனாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல் ஆகும். இது கடந்த முதல் 2020 ஆம் ஆண்டு சீனக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தப் புதிய விமானம் தாங்கிக் கப்பலை சீனா உருவாக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • இலங்கையில் செல்வந்தர்களும், கோயில்களும் யானைகளை வளாப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. பாரம்பரியத்தைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

 

 • இளநிலை ஆராய்ச்சியாளர், உதவி பேராசிரியர் பணி தகுதி பெற விரும்புவோருக்கு, “நெட்” என்னும் தேசிய தகுதித் தேர்வு ஆண்டுதோறும் ஜீலை மாதமும் டிசம்பர் மாதமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை பணி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு நடத்த முடியாது என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை அணுகி, சி.பி.எஸ்.இ தெரிவித்தது. இதையடுத்து இந்த ஆண்டு நெட் தேர்வு ஜீலை மாதம் நடைபெறும். இதை சி.பி.எஸ்.இ நடத்தும் என பல்கலைக் கழகம் மானியக்குழு தெரிவித்துள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

 • மத்திய அமெரிக்காவில் உள்ள நிகாராகுவா தலைநகர் மனாகுவாவில் நடைபெற்ற இளம் வயதினருக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிருஷ்டி கவுர் முதலிடம் பிடித்து மகுடம் சூடினார்.

 

 • அண்டை நாடான மெக்ஸிகோவிலிருந்து சட்ட விரோத ஊடுருவலைத் தடுக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே தடுப்புச் சுவர் எழுப்பப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.

 

 • பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றத்தின் இந்திய உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

 • சிரியாவில் கடந்த 4ம் தேதி நடத்தப்பட்ட விஷவாயு தாக்குதலின் பின்னணியில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகள் இருப்பதாக பிரான்ஸ் உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • சனி கிரகத்தை சுற்றி வந்தபடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள காசினி விண்கலம் தனது கடைசி பயணத்தின் போது புதிய சாதனையை செய்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • பள்ளிகள் இடையிலான உலக செஸ் போட்டி வரும் ஜீன் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா உள்பட 10 நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்தியா சார்பில் சென்னை அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் பயிலும் 6ம் வகுப்பு மாணவர்களான வெ.பிரணவ், ர.குகேஷ், 7ம் வகுப்பு மாணவன் மென்டோன்கா லியான் லூக் மற்றும் மாணவி ரக்ஷிதா ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

 • ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 • ஐபிஎல் தொடரில் நேற்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 2 அணிகளும் மோதின. இதில் உத்தப்பா மற்றும் கம்பீர் அதிரடியாக விளையாடியதால் கொல்கத்தா அணிக்கு 6வது வெற்றி கிடைத்தது.

 

 • லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் ஏப்.25ம் தேதி நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் வில்லா ரியல் அணியிடம் அட்லெடிகோ மாட்ரிட் அணி தோல்வியடைந்தது.

 

 • இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் சார்பில் 19வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சுனைனா குருவில்லா வெற்றி பெற்றார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விதிக்கும் திட்டம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

 

 • மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் ஒரு நிதியாண்டில் ரூ.50,000 வரை டிஜிட்டல் வாலட்கள் மூலம் முதலீடு செய்யலாம் என பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ஆனால் மியூச்சுவல் பண்ட்களில் இருந்து பணத்தை எடுக்கும் பட்சத்தில் வங்கி கணக்கு மூலமாக மட்டுமே எடுக்க முடியும் எனவும் செபி தெரிவித்திருக்கிறது.

 

 • பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கில் இந்தியாவின் கோரிக்கையை சர்வதேச தீர்ப்பாயம் ஏற்க மறுத்து விட்டது. இது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

 

 • இந்தியாவின் முன்னணி தங்க நகை நிறுவனமான கல்யாண் ஜிவல்லரி, ஆன்லைன் தங்க நகை விற்பனையில் ஈடுபட்டுள்ள கண்டேர் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ஆன்லைன் விற்பனையில் கல்யாண் ஜிவல்லரி இறங்கியுள்ளது.

 

We Shine Daily News

English

April 27

 • PM Modi to flag off just RCS UDAN flight from shimla tomorrow. An Alliance Air – 42 aircraft with 15 passengers will take off from shimla airport.

 

 • Reliance Industries Ltd fourth quarter profit soars by 12.3%.

 

 • Maruti Suzuki reports 15.8% rise in 24 net profit.

 

 • Bill Gates praises PM Modi’s effort to end open defection in India. Microsoft founder Bill Gates on Wednesday praised Prime Minister Narendra Modi’s Swachh Bharat campaign in a blog titled ‘India is winning its war on Human waste’.

 

 • Chinese military modernization is focused on defecting American in Asia – US general. China has fundamentally altered the physical and political Landscape in strategic south china sea through Militarisation.

 

 • Udaipur boy kalpit veerval tops JEE main with 100% score.

 

 • In compliance with a Supreme Court ada, Sahara Chief Subrata Roy on Thursday assured the court that he will pay Rs.1500 crore in the SIBI – Sahara account.

 

 • AAP appoints Gopai Rai as New Delhi convenor.

 

 • US Air force test unarmed ICBM. An unarmed intercontinental ballistic missile was launched during an operational test from an air base in the State of California.

Call Now