April 26

Date:26 Apr, 2017

April 26

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 26

தேசிய செய்திகள் :

 • நாட்டில் பசுவதை தடுப்புச் சட்டம் அமலில் உள்ள சில மாநிலங்களில் ஜார்கண்ட் மாநிலமும் ஒன்றாகும். இறைச்சிக்காக பசுவை கொல்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் உள்ளது. மேலும் பசுக் கடத்தலைத் தடுக்க ஜார்கண்ட் அரசு 12 ஆயிரம் பசுகளுக்கு ஆதார் எண் போன்ற தனித்துவ அடையாள எண்ணை வழங்கியுள்ளது.

 

 • மாநில அரசுகளின் இணைய தளங்களில் தனி நபர்களின் ஆதார் தகவல்களை கசிய விடுவதை தடுத்து நிறுத்தும் படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்க்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் மாநில அரசு எச்சரித்துள்ளது.

 

 • பெரியாறு அணையைப் பாதுகாக்க தனி சட்ட மசோதா வரையறுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது மேலும் அனைத்து நதிகளையும் பாதுகாக்க தனி ஆணையம் அமைக்கவும் இது தொடர்பாக சட்டப்பேரவையில் விரைவில் மசோதா அறிமுகம் செய்யப்படும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

 

 • முஸ்லீம் சமுகத்தினருக்கு நல்ல கல்வியை அளிப்பதற்காக, நாட்டில் உள்ள ஒரு லட்சம் மகரஸாக்கள் (முஸ்லீம் மதப் பள்ளிகள்) நவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

 

 • வளரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோருக்கு பயனுள்ள தளமாக “முகநூல்” திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் முகநூலில் சிறப்பான பதிவுகளை வெளியிடுவதால் தங்களது மாணவர்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தில்லி பல்கலைக்கழகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

 •  அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கி போர்க் கப்பல் தென் கொரியாவின் பூசன் துறைமுகத்துக்கு நேற்று வந்தது. இதற்கு பதிலடியாக வடகொரியா நேற்று போர் ஒத்திகை நடத்தியது இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

 • வடகொரியா, ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால் அந்த ஏவுகணை பத்து நிமிடங்களில் ஜப்பானை அடைவதற்கு வாய்ப்பு உண்டு என்று அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 • இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு அமெரிக்காவில் முக்கிய உயர் பதவியை வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

 

 • பிரபல அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட்.எம்.பிர்ஸிக்(88) ஏப்ரல் 24 காலமானார். அவர் காலமான தகவலை அவரது பதிப்பகமான வில்லியம் மாரோ வெளியிட்டது. அவர் 1974ல் வெளியிட்ட “ஜென் அண்ட் தி ஆர்ட் ஆஃப் மோட்டார் சைக்கிள் மெயின்டனன்ஸ் என்ற புத்தகம் உலகப் புகழ் பெற்றது.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஸ்டட்கர்ட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி 15 மாத கால தடையை அனுபவித்த முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை, “வைல்டுகார்டு” சலுகை மூலம் நேரடியாக இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான மரிய ஷரபோவா இத்தாலியைச் சேர்ந்த ராபர்ட்டா வின்சியை இன்று எதிர்கொள்கிறார்.

 

 • இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் சுப்ரதா பால் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

 • அமெரிக்க ஓபன் கராத்தே சாம்பியன் ஷிரப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்றுள்ளது.

 

 • பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி நாசிர் ஷாம் ஷெத் உள்பட 5 வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது.

 

 

 • பால் சார்ந்த தயாரிப்பில் முன்னனியில் உள்ள ஹட்சன் அக்ரோ புராடெக்ட் (ஹெச்ஏபி) நிறுவனம் ரூ.20கோடி முதலீட்டில் சர்வதேச தரத்திலான பாட்மிண்டன் பயிற்சி அகாடமியை விருதுநகரில் தொடங்கியுள்ளனர். மேலும் இந்த அகாடமியின் முக்கிய நோக்கம் கிராமப் பகுதிகளில் உள்ள வீரர், வீராங்கனைகளிடம் உள்ள திறமைகளை மெருகேற்றி அவர்களை சர்வதேச அளவில் ஜொலிக்க வைப்பதே என்று ஹெச்ஏபி தலைவர் ஆர்.வி.சந்திர மோகன் தெரிவித்தார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • உத்திரப் பிரதேச மாநில அரசு ரூ36,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பின்பற்றப்படும் பட்சத்தில் ஜிடிபி வளர்ச்சியில் 2மூ குறையும் என மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

 • இந்திய பங்குச் சந்தைகளில் இன்று ஏற்றமான வர்த்தகம் தொடங்கியுள்ளது. சந்தையின் இந்த ஏற்றமான போக்கு அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எடெல் வைஸ் செக்யூரிட்டிஸின் தலைவர் விகாம் ஹெமானி குறிப்பிட்டுள்ளார்.

 

 • சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே உள்ள நீலா மங்கலத்தில் மத்திய அரசின் மானியத்தின் கீழ் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினரின் நிதி விதிக்கு ஏற்ப குறைந்த விலையில் ‘என் வீடு’ என்ற வீட்டு வசதித் திட்டத்தை எக்ஸ்.எஸ் ரியல் நிறுவனம் தொடங்கியுள்ளது.

 

 • தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. நிஃப்டி 9300 புள்ளிகள் என்ற அளவைத் தொடுவது இதுவே முதல் முறையாகும்.

Call Now