April 25

Date:26 Apr, 2017

April 25

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 25

தேசிய செய்திகள் :

 • நேதாஜி வாழ்ந்த நாகலாந்து கிராமமான ரூசாஸோவை தேசிய பாரம்பரிய கிராமமாக மாற்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • இலங்கை பிரதமர் ரணால் விக்ரமசிங்கே 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். இவரின் வருகையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கை செல்கிறார். அங்கு அவர் ‘ஐ.நா வெசாக் நாள்’ (புத்த பூர்ணிமா) கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ரிசர்வ் படைவீரர்களுக்கு பள்ளி மாணவ – மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

 

 • முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உறவினரான பி.கே நேருவின் மனைவி மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அத்தை ஷோபா நேரு (வயது 108) இன்று (ஏப்ரல் – 25) காலமானார். இவர் ஐ.நா சபைக்கான இந்திய தூதராகவும் பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் வீடு வாங்குவதற்கு தொழிலாளர் வைப்பு நிதியில் (பி.எப் பணத்தில்) இருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

 • அமெரிக்காவின் புதிய அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்ற நாள் முதலாக அந்நாட்டின் பல்வேறு துறைகளில் முக்கிய பதவி வகிக்கும் வெளி நாட்டினரை நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அமெரிக்க பொது சுகாதார சேவை ஆணையத்தின தலைவராக ஒபாமா ஆட்சியின் போது நியமிக்கப்பட்டிருந்த இந்திய வம்சாவளி மருத்துவர் நேற்று பதவியியல் இருந்து நீக்கப்பட்டார்.

 

 • வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வில் கிரீன் பேங்க் தொலைநோக்கு ஆய்வகத்தில் 11 மர்ம சிக்னல்கள் கிடைத்துள்ளன.

 

 • சீன அரசு என்ஜியாங் மாகாணத்தில் இஸ்லாமிய குழந்தைகளுக்கு இஸ்லாம், குர்ரான், மெக்கா, ஜிகாத், இமாம,; சதாம், ஹஜ் மற்றும் மதினா உள்பட 12 பெயர்களை வைக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 

 • இலங்கை ஜெயராஜீக்கு தமிழக அரசு சார்பில் கம்பர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும் விருது வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • 19 வது ஆசிய தனிநபர் சாம்பியன் ஷிப் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிகள் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஹாங்காங், ஈரான், சிங்கப்பூர், நேபாளம், பிலிப்பைன்ஸ், கொரியா, ஜோர்டான், மலேசியா, கத்தார் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

 

 • இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் சார்பில் 19வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்;டி சென்னையில் நாளை (26 ம்தேதி) முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.

 

 • பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவூர் 18-86 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்து தங்கப்பதக்கத்;தை வென்றுள்ளார்.

 

 • சாம்பியன்ஸ் டிராபி மினி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு மோர்கன் தலைமையிலான 15வீரர்கள் கொண்ட வலுவான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • காயம் காரணமாக டிவைன் பிராவோ ஐபிஎல் 2017-லிருந்து விலகியதையடுத்து அவரது இடத்திற்கு ஆல்ரவுண்டர் இர்பான் பத்தானை குஜராத் லயன்ஸ் அணி ஒப்பந்தம் செய்;துள்ளது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷனல் (ஆர்- காம்) நிறுவனமும் ஏர்செல் நிறுவனமும் இணைவது தொடர்பான தீர்மானத்துக்கு ஆர்-காம் பங்குதாரர்கள் ஏப்ரல் 24ம் தேதி ஒப்புதல் அளித்தனர்.

 

 • ஜனவரி – மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருவாய் ரூ.92,889 கோடியாகும். முந்தைய ஆண்டை விட 12.6 சதவீத வளர்ச்சியாகும் எண்ணெய் சுத்திகரிப்பும் பிரிவால் காலாண்டு வருவாயும் லாபமும் சாதனை அளவை எட்டியது இதில் குறிப்பிடத்தக்கது.

 

 • முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வெண்ட் இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டில் பெற்ற வருவாய் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

 

 • பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்திருக்கும் வாராக்கடன் வங்கி ஒன்று ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். தற்போது பொதுத்துறை வாராக்கடன் வங்கி தேவையில்லை. துனியார் மறுசீரமைப்பு நிறுவனங்களே சிறப்பாக செயல்படும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தெரிவித்தார்.

 

 • இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாலத்தீவு நாட்டில் உள்ள வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிவதற்காக இந்திய வணிகப் பிரதிநிதிகள் அடங்கிய குழு 3 நாட்கள் பயணமாக அந்நாட்டிற்கு 27ம் தேதி செல்கிறது.

Call Now