April 24

Date:26 Apr, 2017

April 24

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 24

தேசிய செய்திகள் :

 • ஏழை நோயாளிகள் பயன்பெறும் வகையில் அரசுமருரந்துகள் மற்றும் மருத்துவமனைகளில் ஜெனரிக் எனப்படும் விலைகுறைந்த மற்றும் அனைத்து மூலக்கூறு மருந்துகள் அடங்கிய மருந்துகளே விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் மேலும் மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் மருந்தின் பெயர்களைத் தெளிவாக எழுத வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • அரசின் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்காக, மூத்த குடிமக்களுக்கான வயதை 60 ஆக நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல்வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அணி ஜனாதிபதி மைச் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

 

 • தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டீல், ஏப்ரல் 22 ம் தேதி 11.30 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது இஸ்ரேலிடமிருந்து இந்தியா மிக அதிக அளவில் பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி வரும் ஜீலை மாதம் இஸ்ரேலில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதால் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) செலுத்தும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 12 ஆக அதிகரிக்கப்படும் என்று விண்வெளி ஆய்வுத் தலைவர் ஏ.எல்.கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

 

 • ரயில்பயணம் குறித்து அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையிலும், அனைத்து சேவைகளையும் அளிக்கும் வகையிலும் புதிய செல்லிடப்பேசி செயலி (ஆப்) வரும் ஜீன் மாதம் அறிமுகப்படுத்தப்படயுள்ளது. “ஹண்ட் ரயில்” எனப் பெயரிடவுள்ள இந்த செயலி இப்போது பயன்பாட்டில் உள்ள ரயில்Nவு தொடர்பான அனைத்து செயலிகளின் ஒருங்கிணைப்பாக இருக்கும்.

 

 • ஐரோப்பா கண்டத்தில் உள்ள வடமேற்கு மற்றும் தென்மேற்கு நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் எரிக்கப்படும் நிலக்கரியில் இருந்து சல்பர்-டை-ஆக்ஸைடு வெளியாகிறது. ஆவை காற்றில் மாசாக படிந்து மழைநீருடன் மீண்டும் பூமிக்கு வருகிறது. இதுவே இந்தியாவின் வறட்சிக்கு காரணம் என்று ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் அபோஸ்டோலஸ் வல்காரகஸ் கூறியுள்ளார்.

பன்னாட்டு செய்திகள் :

 • அமெரிக்காவில் கன்காஸ் மாகாண பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல் கல்லூரி முதல்வராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமித் சக்ரவர்த்தி (வயது 57) நியமிக்கப்பட்டுள்ளார் இவர் அங்குள்ள பின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், இந்தியாவில் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பட்டமும், முதுநிலைப்பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • சீனாவில் டியான்ஜீ -1 சரக்கு விண்கலம் விண்வெளியில் இயங்கிவரும் டியான்காங்-2 விண்வெளி நிலையத்துடன் ஏப்ரல் 22 மதியம் 12 மணியளவில் இணைந்தது என சீனாவின் பெய்ஜிங் விண்வெளி கட்டுபாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 

 • வடகொரியா ஆணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. அதனால் வடகொரியா மற்றும் தென் கொரியாவில் உள்ள அமெரிக்கர்களை அங்கிருந்து வெளியேற்ற டெனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

 

 • ஹெச் 1 பி விசா விதிமுறைகளை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், காக்னிஸன்ட் ஆகியவை கடுமையாக மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளJ.

 

 • பிரான்ஸ் நாட்டில் பல தசாப்தங்களுக்கு பிறகு யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத அதிபர் தேர்தலின் முதல் சுற்று வாக்குப் பதிவு துவங்கியது.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை குஜராத் லயன்ஸ் அணி தோற்கடித்தது.

 

 • குஜராத் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான டுலைன் பிராவோ, ஐபிஎல் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகினார்.

 

 • ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடித்தது.

 

 • மாண்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • திருவாரூரில் மாநில அளவிலான மகளிர் செஸ் போட்டி ஏப்ரல் 23 ல் தொடங்கியது. இப்போட்டியில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 94 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

 

 • மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் ரபெல் நடால் பட்டம் வென்றார்.

 

 • 8 அணிகள் இடையிலான 10 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி குஜராத் அணியை தோற்கடித்து 3 வது வெற்றியை பெற்றது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • கடந்த நிதியாண்டில் 11500 வெளிநாட்டவருக்கு டிசிஎஸ் நிறுவனம் வேலை வழங்கியுள்ளது.

 

 • சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும். 4 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ 32,394 கோடி உயர்ந்துள்ளது. இதில் ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய 2 நிறுவனங்கள் அதிக ஏற்றத்தை பெற்றது.

 

 • இந்தியாவில் தொடங்கப்பட்ட 10 ஸ்டார் அப் நிறுவனங்களில் 3 அல்லது 4 நிறுவனங்கள் வெற்றி அடைகின்றன. இது நல்ல விகிதமாகும். சர்வதேச அளவீடுகளுடன் ஸ்டார் அப் நிறுவனங்கள் இருப்பதாக இன் போசிஸ் நிறுவன முன்னாள் தலைமை செயலதிகார் வி.பால கிருஷ்ணன் தெரிவித்தார்.

 

 • இந்திய தபால்துறை பேமெண்ட் வங்கி அடுத்தாண்டு முதல் காப்பீடு மற்றும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களை விற்க திட்டமிட்டிருக்கிறது.

 

 • நடப்பு நிதியாண்டின் முதல் தங்க பத்திர திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 28 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் சராசரி ஒரு கிராம் விலை 2951 ரூபாயாக இருந்தது ஆனால் ஒரு கிராம் விலை 2901 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Call Now