April 23

Date:26 Apr, 2017

April 23

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 23

தேசிய செய்திகள் :

 • கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் உள்ள ரத்த வங்கிகளில் சுமார் 28 லட்சம் யூனிட் ரத்தம் வீணடிக்கப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டுகளில் மட்டும் ;6.57 லட்சம் யூனிட்டுகளுக்கும் அதிகமான ரத்தம் மற்றும் அது சார்ந்த பொருட்கள் வீணடிக்கப்பட்டுள்ளது.

 

 • வாக்காளர்கள், வாக்களித்ததை உறுதி செய்யும் வசதி கொண்ட 16 லட்சத்திற்கும் மேற்பட்ட (விவிபிஏடி) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

 • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் ஏப்ரல் 23 நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. இதில் 30 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

 • நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிலையங்களும் விரைவில் பொதுவான ஹிந்தி பயிற்றுவிக்கும் திட்டம் ஒன்றறை அமல்படுத்த உள்ளன.

 

 • கோல்ட் மேன் சுற்றுச் சூழல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 பேரில் வேதாந்தா நிறுவனத்தின் நியாம்கிரி கனிவளம் தோண்டும் திட்டத்தை வெற்றிகரமாக தடுத்த சமூக செயல்பாட்டாளர் பிரபல்ல சம்ந்த்ரா என்பவருக்கு சான் பிரான்சிஸ்கோவில் விருது வழங்கப்பட்டது.

பன்னாட்டு செய்திகள் :

 • இந்தியாவுடன் இணைந்து எண்ணெய் கிடங்கு வசதியை திரிகோண மலையில் அமைக்கும் இலங்கை அரசின் முயற்சிக்கு இலங்கை நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

 

 • ஓபாமா ஆட்சியின் போது அமெரிக்க பொது சுகாதார சேவை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மருத்துவர் விவேக் மூர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

 

 • பின்லேடனுக்கு அடுத்த தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி பாகிஸ்தான், கராச்சி நகரில் ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் இருந்து வருவதாக அமெரிக்க ஊடகம் நியூஸ்வீக் செய்தி அறிக்கை கூறுகிறது.

 

 • இந்தியாவுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இலங்கை ஆர்வத்துடன் இருப்பதாக இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க் தெரிவித்தார்.

 

 • மெக்ஸிகோவில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் சென்ற மார்ச் மாதத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் நடப்பு 2017ம் ஆண்டு முதல் காலாண்டில் (ஜனவரி – மார்ச்) வன்முறை சம்பவங்களுக்கு 5775 பேர் பலியாகினர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 11% அதிகம்.

 

 • கனடாவில் ரியல் எஸ்டேட் சந்தைவிண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதனால் வெளிநாட்டினர் அங்கு வீடுகள் வாங்குவதற்கு உரிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

 • ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கில் ஜிம்பாவே நாடு உள்ளது. வறட்சி, பணவீக்கம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜிம்பாவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் ஏழை பெற்றோர் தங்கள் பள்ளிக் கட்டணங்களை ஆடுகளாக செலுத்தலாம் என ஜிம்பாவே அரசு அறிவிறுத்தியுள்ளது.

 

 • தெற்கு ஆசியாவில் அமைதி ஏற்படுவதில் காஷ்மீர் பிரச்சினை முக்கிய தடையாக உள்ளுத என பாகிஸ்தான் கூறியுள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • ஆக்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவைச் சேர்ந்த 101 வயது பாட்டி கவுர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இது இந்திய முதிய தடகள வீரர்கள் வாங்கிய 17- வது தங்கப்பதக்கம் ஆகும்.

 

 • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியில் சென்னையை சேர்ந்த வேலவன் செந்தில்குமார் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தார்.

 

 • மொனாக்காவில் மாண்டே கார்லோ மாஸ்டர்ல் ‘டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் இரட்டையர் கால் இறுதியில் இந்தியாவிலுள்ள ரோகர்ன் போபண்ணா குயவாஸ் ஜோடி 3-6, 6-3, 13-11 என்ற செட் கணக்கில் பின்லாந்தின் ஹென்றி காண்டினென், ஆஸ்திரேலியாவின் ஜான்பீர்ஸ் ஜோடியை வீழ்த்தியது.

 

 • ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ரைஸிங்புனே சூப்பர் லயன்ஸ் ஹைதராபாத்தை தோற்கடித்தது.

 

 • ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியைக் குஜராத் லயன்ஸ் அணி தோற்கடித்தது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகளால் மட்டுமே கறுப்புப் பண புழக்கத்தை வெளியிட முடியாது. அனைவரும் ஏற்கக்கூடிய பொதுவான விதிகள் மற்றும் சிறப்பான நேர்மையான நிர்வாகம் மூலமே கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்வி ரெட்டி தெரிவித்;துள்ளார்.

 

 • இந்தியாவில் பொறியியல் படித்து வெளிவரும் 95 சதவீதம் மாணவர்கள் சாப்ட்வேர் மேம்பாட்டு பணிக்கு தகுதியில்லாதவர்கள் என ஆஸ்பைரிங் மைண்ட்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் வேலைக்கான அடிப்படை புரோகிராமை 4.77 சதவிதம் மாணவர்கள் மட்டுமே சரியாக எழுதுகிறார்கள் எனவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

 

 • ஹெச்டி எப்சி வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 18.2 சதவீதம் உயர்ந்து ரூ 3,990 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ3,374 கோடியாக இருந்தது வங்கியின் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ662 கோடியில் இருந்து ரூ 1261 கோடியாக அதிகரித்திருக்கிறது.

 

 • சிறு தானிய உற்பத்தியை மேம்படுத்;துவதற்காக இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சென்னையில் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. அதில் அரிசி அளவைக் குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக சிறு தானியங்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Call Now