April 22

Date:24 Apr, 2017

April 22

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 22

தேசிய செய்திகள் :

 • சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் தம்பிக்கு சொந்தமான அமெரிக்க கலைக்கூடத்தில் சோழர்கால பார்வதி, விநாயகர் ஐம்பொன் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இவற்றை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

 • நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.எச்) நடத்தும் மாநில அளவிலான புத்தக கண்காட்சி 31 இடங்களில் நாளை (ஏப்.23) தொடங்குகிறது. இதில் 50சதவீதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சிகளில் கலை இலக்கியம் பண்பாடு, வரலாறு, திறனாய்வு, அரசியல், அறிவியல், சூழலியல், வேளாண்மை, மருத்துவம், கல்வியியல், மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய நூல்கள், பொது அறிவு, சங்க இலக்கியம், பாரதி, பாரதிதாசன், திருக்குறள், சிறார் நூல்கள் கிடைக்கும். இக்கண்காட்சிகளில் 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

 

 • “தி இந்து – யங் வேர்ல்டு கிளப்” சார்பில் 8 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆன்லைன் கோடைகால சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று, கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் செலவிட விரும்பும் குழந்தைகள் 30ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த “யங் வேர்ல்டு கிளப்” என்பது விளையாட்டு மூலமாக குழந்தைகள் பல்வேறு தகவல்களை கற்றுக் கொள்வது மற்றும் பொது அறிவை வளர்த்துக்கொள்வதற்கான இணைய தளமாகும். இது குழந்தைகளை சிந்திக்க வைக்கவும் படிக்கத் தூண்டும் அம்சமாகவும் அமைகிறது.

 

 • இந்தியாவில் 275 பொறியியல் கல்வி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை மூட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் டி.சஹஸ்ரபுத்தே தெரிவித்தார்.

 

 • சென்னை புத்தகச் சங்கமம் சார்பில் 5-ம் ஆண்டு சிறப்பு புத்தகக் கண்காட்சி சென்னை பெரியார் திடலில் நேற்று தொடங்கியது. இங்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • சென்னை மாநகராட்சி மயானங்களில் வேலங்காடு, காசிமேடு உள்ளிட்ட மயானங்கள் நவீன மின் மயானங்களாக உள்ளன. இதை ஐசிடபிள்யூ நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக வேலங்காடு மயானத்தில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை வறட்சியால் குடிநீர் கிடைக்காமல் பறவைகள் இறப்பை தடுக்கும் விதமாக, மயானங்களில் குடிநீர் கிண்ணங்களை வைக்கும் திட்டம் வேலங்காடு உள்ளிட்ட 7மயான வளாகங்களில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

 

 • ரூ.2700 கோடி செலவில் நகர்ப்புற ஏழைகளுக்கு செயல்படுத்த மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது. இதில், இலவச வீட்டு வாடகை கூப்பன் அளிக்கும் பரிந்துரை அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.

 

 • குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜுலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசுத் தலைவர் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆலோசனை நடத்தி உள்ளார்.

 

 • ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படுவது கட்டாயமல்ல என்று உணவு மற்றும் நுகர்வோர் விவகார மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். பல ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் சேவைக்கட்டணம் என்று 5மூ முதல் 20மூ வரை வசூலிக்கப்படுவதாக ஏகப்பட்ட புகார்கள் வந்ததையடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

 • ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாகக் கூறியதால் எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட வீரர், நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளார்.

 

 • அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர் ராஸிடம் எச்1பி விசா மீதான புதிய உத்தரவுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து “ஆழ்ந்த கவலைகளை” மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எழுப்பியுள்ளார்.

 

 • mரசியல் முக்கியப் பிரமுகர்களின் வாகனங்களில் இருந்து சிவப்பு விளக்கை அகற்றும் முடிவைத் தொடர்ந்து, அவர்களது பாதுகாப்பைக் குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

பன்னாட்டு செய்திகள் :

 • ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில் பணவீக்கம், வறட்சி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பணத் தட்டுப்பாட்டால் ஏழை பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தைச் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். இச்சூழ்நிலையில் அந்த நாட்டு கல்வித்துறை அமைச்சர் “லாசரஸ் டொகோரா” கிராமங்களைச் சேர்ந்த ஏழை பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை ஆடுகளாகச் செலுத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

 • கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிகழும் பஞ்சம் அந்நாட்டின் வரலாற்றில் காணாத பஞ்சமாக மாறியுள்ளது. சோமாலியாவில் நிகழும் கடும் பஞ்சத்தால் சுமார் 2,70,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்படவுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் குழந்தைகள் நல உலக அமைப்பான யூனிசெஃப் எச்சரித்திருந்தது.

 

 • மகாத்மா காந்தி உருவப்படத்துடன் வெளியிடப்பட்ட மிக அரிய 4 தபால் தலைகள் இங்கிலாந்தில் ஏலம் விடப்பட்டுள்ளன. அவற்றை ரூ.4 கோடியே 15 லட்சம் கொடுத்து ஒருவர் வாங்கி உள்ளார். இதுபோன்ற தபால் தலைகள் உலகளவில் இப்போது 13 மட்டுமே உள்ளன. இந்திய தபால் தலைகள் அதிகபட்ச ஏலத்தொகைக்கு விற்கப்பட்டதும் இதுவே முதல்முறை என்று இங்கிலாந்தில் அரிய தபால் தலைகளை விற்கும் “ஸ்டான்லி கிப்ஸன்” என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • ஈரானின் அணுசக்தி திட்டங்களை கண்காணிக்காவிட்டால் மற்றொரு வடகொரியாவாக உருவெடுக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

 

 • அருணாச்சலப் பிரதேசத்தில் 6 இடங்களின் சீன எழுத்தில் மாற்றுவதற்கு தங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை இருப்பதாக சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் சீன அரசு நாளிதழ்,‘தொடர்ந்து தலாய் லாமாவுக்கு ஆதரவு அளிக்கும் உத்தியை கடைபிடிப்பது இந்தியா அதிக விலை கொடுப்பதில் போய் முடியும்’ என்று எச்சரித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் போட்டியில் சென்னையை சேர்ந்த வேலவன் செந்தில் குமார் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கடந்த வாரம் அவர் பார்க்வியூ ஓபனிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டிகள் சீனாவில் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் இரு கட்டங்கள் வரும் 24ம் தேதி ஜியாசிங் நகரிலும், 27ம் தேதி ஜின்ஹவா நகரிலும், கடைசி இருகட்ட போட்டிகள் 30ம் தேதி சீன தைபேவிலும் நடைபெறுகிறது.

 

 • டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் விக்கெட் கீப்பர்ஃபேட்ஸ்மேன் ரிஷப் பந்த் மீது இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் புகழாரத்தை வீசியுள்ளார். தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இளம் வீரர் ரிஷப் பந்த் என்றும் தோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியில் இடம்பெற மிகுந்த பொருத்தமுடையவர் ரிஷப் பந்த் மட்டுமே என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

 

 • ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார்.

 

 • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஷாகித் அப்ரிடி கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது ஜெர்சியை அனுப்பி வைத்திருந்தார். அதில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர். மேலும் ஜெர்சியில் உங்களுடன் விளையாடியது பெருமையாக உள்ளது என்ற வாசகத்தையும் விராட் கோலி எழுதியிருந்தார்.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி “லக்ஷிமிதாஸ் வெக்கரியா” ஸ்கூட்டர்களை பரிசாக அளித்து ஊக்குவித்துள்ளார். பொருளாதார சூழல் சரியில்லாத நிலையிலும் நிறுவனத்தின் இலக்கை எட்ட உதவிய பணியாளர்களைக் கவுரவிக்கும் விதமாக ஸ்கூட்டரை பரிசாக அளித்துள்ளார்.

 

 • கடந்த செவ்வாய்க்கிழமை மிக அதிக மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற பெயரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெற்றது. நான்கு வருடங்களுக்கு முன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை டிசிஎஸ் நிறுவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 • வருமான வரி கணக்கில் காட்டப்படாத பணத்தை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இம்மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வருவதற்காக மத்திய அரசு ‘பிரதம மந்திரி கரிப் கல்யாண யோஜனா’ (பிஎம்ஜிகேஒய்) திட்டத்தை அறிவித்தது.

 

 • பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருகின்ற நிலையில் வணிகம் செய்யவும் தயங்குவதில்லை. இந்தியாவில் ஏற்கனவே பெண் கோடீஸ்வரர்கள் உள்ள நிலையில் முதன் முதலாக வியட்நாம் முதன் முதலாக ஒரு பெண் கோடீஸ்வரை பெற்றுள்ளது. வியட்நாமை சேர்ந்த அந்த பெண்மணியின் பெயர்நக்யுயென் தி புயோங் தாவோ. இவர் வியட்ஜெட் என்ற பயணிகள் விமான சேவையை அளித்து வருகிறார்.

 

 • அமெரிக்கப் பங்குச் சந்தைகளை விட இந்திய பங்குச் சந்தை ஒரு பங்கிற்கு 38 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளதைக் கண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். ஆசியாவில் இருந்து சீன பங்குச் சந்தை 23 சதவீதம் வரையிலும் ஒரு பங்கின் லாபத்தை அளித்துச் சராசரியாக 10 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது.

Call Now