April 21

Date:24 Apr, 2017

April 21

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 21

தேசிய செய்திகள் :

 • ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் போன்ற அவசரகால மற்றும் நிவாரண சேவை வாகனங்களை தவிர்த்து பிறவாகனங்களில் சிவப்புநிற சுழல் விளக்குகளை பயன்படுத்துவதற்கு மேமாதம் 1ம் தேதிமுதல் மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

 

 •  புதிதாக 16 லட்சம் வாக்குஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை ரூ 3174 கோடிசெலவில் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

 • 2016-17 ஆம் நிதியாண்டிலிருந்து பிஎப் எனப்படும் தொழிலாளர் சேமநல நிதிக்கான வட்டிவிகிதம் 8.80சதவீதம் எனும் அளவில் இருந்து 8.65சதவீதம் ஆக குறைக்கப்படுவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

 • மாநிலஅரசுகளின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தாங்கள் செயல்படுத்தி வரும் முக்கியஅடிப்படைஉள்கட்டமைப்புவசதித் திட்டங்களுக்காக வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து நேரடி கடனுதவி பெறலாம்.

 

 • இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 1976 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட என்பி.சி.பி (பார்வையின்மையைக் கட்டுபடுத்துவதற்கான தேசியதிட்டம்) அளவுகோலின் அடிப்படையில் பார்வையின்மை வரையறுக்கப்படுகிறது. அதன்படி ஒரு நபரால் 6மீ தூரத்தில் காண்பிக்கப்படும் கைவிரல்களை எண்ண இயலாதத் தன்மை பார்வையின்மையாகக் கருதப்படும். தற்போது உலக சுகாதார நிறுவனம் மேற்குறிப்பிட்ட சோதனை தூரத்தை 3மீ ஆக நிர்ணயித்துள்ளது.

 

 •  இந்தியாவின் தங்கத்தின் தேவை 750டன்னாக உள்ளதாக உலகத் தங்கக் கவுன்சிலிங் சார்பில் இந்தியாவின் தங்கச் சந்தை குறித்த ஆய்வறிக்கை 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்டுள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

 • ஓபாமா அதிபராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்கா மேற்கொண்டதிலேயே மிகவும் மோசமான ஒப்பந்தம் என்று தற்போதைய அதிபர் டெனால்ட் டிரம்ப் விமர்சித்து வருகிறார். மேலும் அணுசக்தி ஒப்பந்தத்தை மறு ஆய்வுசெய்ய, அதிபர் டெனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

 

 • விண்வெளியில் பொருள்களை ஏற்றிச் செல்லும் சீனாவின் முதல் சரக்கு ராக்கெட், வியாழக்கிழமை அன்று செலுத்தப்படுகிறது. அந்த ராக்கெட் தியான்கோங் – 2 விண்வெளி ஆய்வகத்துக்கு எரிபொருள் ஏற்றிச் செல்கிறது.

 

 • ஆண்டுதோறும் அமெரிக்காவில் 65 ஆயிரம் ஹெச்.பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, அமெரிக்காவில் உயர்படிப்பு முடித்தவர்களுக்கு 20 ஆயிரம் ஹெச்.பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசாக்களில் பெரும்பாலானவற்றை இந்தியத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பெறுகின்றனர். இந்த சூழ்நிலையில், ஹெச்.பி விசா விதிகளை கடுமையாக்குவது தொழில்நுட்பத் துறை(ஐ.டி) மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

 

 • தென் இந்திய பகுதிகளில் காணப்படும் சளிப்படலம் போன்ற ஒரு வண்ணமயமான திரவத்தினை சுரக்கும் தவளையானது கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. புதிய ஆய்வின் படி இந்த திரவத்தினை கொண்டு வைரஸ் தொடர்பான பல்வேறு வைரஸ் நோய்களுக்கு மருந்துகளை தயாரிக்கலாம். திரவத்தில் உள்ள மூலக்கூறுகள் மூலம் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கமுடியும்.

 

 • 92 வயதானஅமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் நிமோனியா காய்ச்சலால் அவதியுற்று வருகிறார்.

விளையாட்டுச் செய்திகள் :

 • சீனமாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப், ஹர்ஷீல் டேனி ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • ஸ்பெயின் தலைநகர் மார்ட்ரிட்டில் நடைபெற்ற சேம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மார்ட்ரிட்டில் அணிஅரை இறுதிக்கு முன்னேற உள்ளது.

 

 • கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகவீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றார். மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. நேற்று தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்கம் சார்பில் மாரியப்பனுக்கு பாராட்டுவிழா சென்னையில் நடைபெற்றது.

 

 • ஐபிஎல் தொடரில் இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்8 பிளஸ் எனும் இரண்டு ஸ்மார்ட் போனை நேற்று அறிமுகம் செய்தது.

 

 • சீனாவைச் சேர்ந்த தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஹீவாய் நிறுவனம் இந்தியாவில் தனது சேவைகளை விரிவுபடுத்த ரெடிங்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

 

 • இந்தியாவில் மிகப்பெரிய ஜவுளித்துறை கண்காட்சியை காந்திநகரில் ஜீன் 30ம் தேதி மத்தியஅரசு நடத்த உள்ளது. இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.

 

 • கடந்தநிதி ஆண்டில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ முதலிடத்தில் இருக்கிறது. இந்தகார் தொடர்ந்து 13வது ஆண்டாக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 • சென்னையில் இருந்து “நீரா” எனப்படும் பானத்தை இறக்கி விற்பனை செய்வதற்கு தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது.

Call Now