April 20

Date:24 Apr, 2017

April 20

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 20

தேசிய செய்திகள் :

 • நாடு முழுவதும் சரக்கு சேவை வளம் சட்டம் அமல்படுத்த திட்டமிட்டடிருப்பது இந்திய அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கை என பன்னாட்டு நிதியத்தின் தலைவர் கிரிஸ்டீன்லாகர்ட் பாராட்டு தெரிவிதுள்ளார். 

 

 • அருணாசலம் பிரதேசத்தில் உள்ள 6 இடங்களுக்கு சீனப் பெயர்களைப் சூட்டுவதால் அந்த பகுதிகளுக்கு சீனா உரிமை கோரமுடியாது. அருணாசலப் பிரதேசமாநிலம் இந்தியாவின் ஓர் அங்கமாகும் என இந்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

 • குடியரசுத் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி ஏப்ரல் 24 முதல் ஐந்து நாட்களுக்கு ஆர்மீனிவா, போலந்து ஆகிய இரு நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் செய்கிறார்.

 

 • இந்தியாவிலேயே முதல் முறையாக தில்லி மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறவுள்ள 13, 234 வாக்குச்சாவடிக்கு “புகையிலைபொருள்கள்” தடைசெய்யப்பட்ட பகுதியாக மாநிலதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

 

 • மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய உலகின் தலைசிறந்த 100 மனிதர்களின் பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “டைம்” இதழ் ஆண்டுதோறம் வெளியீட்டுவருகிறது. இந்த ஆண்டிற்கான அந்த பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. மின்னனு பணப்பரிமாற்றசேவை அளக்கும் “பே – டைம்” நிறுவனத்தை உருவாக்கிய விஜய் சேகர் சர்மா இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். 

 

 • 2008 நகரங்களில் 17.73 லட்சம் குறைந்த விலை வீடுகளைக் கட்டிதர மத்தியஅரசு நிதி ஓதுக்க செய்துள்ளது. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்துக்கு ரூ.96.266கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நகர்ப்புற வாடகை வீடுகள் கொள்கைக்கு மத்திய அமைப்பேரவை விரைவில் ஒப்புதல் அளிக்கஉள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

 • மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டமிகவும் அரிதான தபால் தலைகள், பிரிட்டனில் 5 லட்சம் பவுண்டுக்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ‘ஸ்டான்லிகிப்பன்’ என்ற நிறுவனம் ஏலத்திற்குவிட்டது. இவை மகாத்மா காந்தியின் உருவத்தை தாங்கி, 1948ம் ஆண்டு வெளிவந்த 10ரூ மதிப்பு கொண்ட தபால் தலைகளாகும்.

 

 • பதற்றம் நிலவும் நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் தேர்தல்களை நடத்துவதற்காக, ஐ.நாவில் தேர்தல் விவகாரப் பிரிவிற்கு இந்தியா 2.5லட்ச டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது.

 

 •  தற்போது விண்ணில் பறந்து கொண்டிருக்கும் டியாங்கோங் -2 ஆய்வு நிலையில் சோதனை முறையில் செலுத்தப்பட்டதாகும். இதன் ஆயுட்காலம் மிகவும் குறைவு எனக் கூறப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுக்குள் மாபெரும் புதிய விண்வெளி ஆய்வநிலையத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. அதன் ஆயுட்காலம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக இருக்கும்.

 

 • அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாஸ் மே-3 அன்று சந்தித்து பேச உள்ளதாக வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

 

 • இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஏப்ரல் 25 முதல் 39 வரை 5 நாள் அரசுமுறைப்பயணமாக இந்தியா வருகிறார். 26ம்தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

விளையாட்டுச் செய்திகள் :

 • வெஸ்ட்ரெண்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வேலவன் செந்தில் குமார் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

 • மினி உலகக்கோப்பை என்றுஅழைக்கப்படும் சேம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 15பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லிடேர் டெவில்ஸ் அணியைத் தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத். அந்த அணியின் ஆட்டநாயகனாக வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

 

 •  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் 8 வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்து மும்பைஅணி ஐபிஎல் – ல் 5வது வெற்றியைப் பெற்றுள்ளது.

 

 • சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஜுவென்டஸ் அணிக்கு எதிரான 2வது கட்ட கால்இறுதி ஆட்டத்தை பார்சிலோனா அணி கோல்களின் டிராவில் முடித்தது. முதல் கட்டகால் இறுதியில் பார்சிலோனா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்ததால் அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • மனிதவளக் குறியீட்டு காரணிகளால் சீனாவை விட இந்தியா சிறப்பாக உள்ளது என்றும், மேலும் சீனாவின் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் ஆரோக்கியமான சூழ்நிலையில் உள்ளதாகவும் பொருளாதார பேராசியர் ஜேக்கப் குரியன் தெரிவித்துள்ளார்.

 

 • சமீப ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரம் கவனிக்கத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது என்று பன்னாட்டு நிதியத்தின் முதன்மை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் சமீப ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் கவனிக்கத்தக்க வகையில் நல்லவளர்ச்சி அடைந்துள்ளது என்று ஐஎம்எஃப் நிதி விவகாரத்தை இயக்குநர் வைடோர் காஸ்பர் தெரிவித்தார்.

 

 •  கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் ரூ.30700கோடி வரி பாக்கி மற்றும் வட்டித்தொகை செலுத்தக்கோரி வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டிஸ்க்கு விளக்கம் அளிக்க 10 நாள் அவகாசம் தருமாறு கெய்ர்ன் எனர்;ஜி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளதாக வருமான வரித்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Call Now