April 2

Date:03 Apr, 2017

April 2

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 02

தேசிய செய்திகள் :

 • ரிசர்வ் வங்கியின் ஆளுநர், துணை ஆளுநர்கள் ஆகியோரின் மாத ஊதியம் இரு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆளுநரின் அடிப்படை மாத ஊதியம் ரூ 90ஆயிரத்தில் இருந்து ரூ 2.5லட்சமாகவும், துணை ஆளுநர்களின் அடிப்படை மாத ஊதியம், ரூ 80 ஆயிரத்தில் இருந்து ரூ 2.25லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது.

 

 •  வயதான பெற்றோர் அல்லது மூத்த குடிமக்களுக்கு பராமரிப்பு செலவுக்காக அவர்களது பிள்ளைகள் கட்டாயம் குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல மற்றும் பராமரிப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வயதான பெற்றோருக்கு பிள்ளைகள் மாதத்துக்கு ரூ 10000 வழங்க வேண்டும் என மூத்த குடிமக்கள் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தற்போது பிள்ளைகளிடம் இருந்து பெறப்படும் தொகை மீதான உச்சவரம்பை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 •  குடிநீருக்காக 3 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசு அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை கர்நாடக அரசு நிராகரித்தது.

 

 •  பள்ளி மாணவர்கள் திடீரென உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ 1 லட்சம் வழங்க சத்தீஸ்கர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

 

 •  விசைத்தறி துறை மேம்பாட்டுக்கான மானியத்தை மத்திய அரசு 30சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் ‘முத்ரா’ திட்டத்தின் கீழ் விசைத்தறியாளருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கவும், இந்திய சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கியின் கீழ் கடன்கள் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதுமுள்ள விசைத்தறி கூடங்களின் மேம்பாட்டுக்கான மத்திய அரசின் விரிவான திட்டமான ‘பவர்டெக்ஸ் இந்தியா’ திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தொடங்கி வைத்தார்.

 

 •  நாட்டிலேயே முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து தெற்கு ஆசியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தற்போது கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

 •  கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கும், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

 

 • கோடை விடுமுறைக் காலத்தின்போது உச்ச நீதிமன்றத்தில் சிறு வழக்குகளை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு நியமிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்துள்ளார்.

 

 •  ராஜஸ்தான் மாநிலத்துக்கு உட்பட்ட அஜ்மீரில் புகழ்பெற்ற கவாஜா மெய்னுதீன் சிஸ்தி தர்கா அமைந்துள்ளது. இங்கு 805வது ஆண்டு உருசுவிழா கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி புனித போர்வை ஒன்றை தர்காவுக்கு நன்கொடையாக வழங்கினார்.

 

 •  30ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ முதன்முறையாக பெங்களுரை சேர்ந்த ஆல்ஃபா டிசைனிங் டெக்னாலஜீஸ் நிறுவனம் இதற்காக ரூ 400 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் துறையின் பங்களிப்புடன் இரு செயற்கைக்கோள்களை தயாரிக்க உள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

 • ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வசம் உள்ள மொசூல் நகரையும் அதனை சுற்றியுள்ள பகுதியையும் முற்றிலுமாக மீட்கும் பணியில் ஈராக் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதில் ஈராக் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 200 ஐ.எஸ்.பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 

 •  நியூசிலாந்து பிரதமர் ஜான் கே கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரியில் கொழும்பு வந்த போது 6 வயதான நந்தி என்னும் யானைக் குட்டியை இலங்கை அதிபர் சிறிசேனா பரிசாக அளித்தார். இலங்கை அரசால் நியூசிலாந்துக்கு பரிசாக அளிக்கப்பட்ட யானைக் குட்டியை நியூசிலாந்துக்கு கொண்டு செல்ல விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

 •  அண்டவெளியில் விஞ்ஞானி சந்திரசேகரன் பெயரில் அழைக்கப்படும் “சந்திரா களம் – தெற்கு” என்ற இடத்தில் பெரிய வெடிப்பு ஒன்று ஏற்படுவதை நாஸா அமைப்பின் எக்ஸ்ரே புகைப்படம் காட்டுகிறது. இந்த வெடிப்பு நிகழ்ந்த போது அண்டவெளியில் உள்ள அனைத்து நட்சத்திரங்களையும் விட ஆயிரம் மடங்கு பேரொளி ஏற்பட்டது. பூமியிலிருந்து 170 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள அண்டவெளிப்பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது என நாஸா தெரிவித்துள்ளது.

 

 •  உலக சுகாதார தினம் ஏப்ரல் 7ல் கொண்டாடப்படுகிறது. கடந்த 2005 முதல் 2015 வரையிலான காலத்தில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை 18 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்டோர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஸ்பெயனின் ராபேல் நடால் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • காயம் காரணமாக 2017 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் முழுவதும் அஸ்வின் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

 • ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 10வது சீசன் போட்டிகள் ஏப்ரல் 5ம்தேதி முதல் மே 21 வரை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. 56லீக் ஆட்டங்கள், பிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் இறுதிப்போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

 

 • உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 3வது முறையாக பட்டம் வெல்வதே எனது அடுத்த கட்ட இலக்கு என ஸ்பெயினின் கரோலினா மரின் தெரிவித்தார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • தொழில் நுட்ப மாற்றங்கள் அதிகரித்து வருவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும். ஆதனால் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் விரைவில் பயனற்றதாகும் என நிதிஆயோக் தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்தார்.

 

 • நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுஸ_கி, ஹ_ண்டாய் ஆகிய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்துள்ளன. இவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதற்கு அதிகளவில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியதே முக்கிய காரணமாகும்.

 

 • வுpரைவான நெட்வொர்க் என தனது விளம்பரங்களில் ஏர்டெல் நிறுவனம் குறிப்பிடுவதை நிறுத்துமாறு இந்திய விளம்பர தர கவுன்சில் ஏர்டெல் நிறுவனத்திடம் உத்தரவிட்டுள்ளது.

 

 • எஸ்.பி.ஐயுடன் அதன் 5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியவை இணைந்துள்ளதால் உலகின் 50 பெரிய வங்கிகளின் பட்டியலில் எஸ்.பி.ஐ இடம் பிடித்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.41லட்சம் கோடியாக உள்ளது. நேற்று இந்த இணைப்பு நடைபெற்றது.

Call Now