April 19

Date:23 Apr, 2017

April 19

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 19

தேசிய செய்திகள் :

 • புத்தர் பிறந்த நாள், ஞானம் அடைந்த நாள், பரிநிர்மாணம் அடைந்த நாள் ஆகிய 3 முக்கிய நிகழ்வுகளும் வைகாசி பௌர்ணமி தினத்தன்று நடந்ததாக புத்த மதத்தினர் நம்பி அத்தினத்தை புத்த பூர்ணி மாவாக கொண்டாடுகின்றனர். ஐ.நா சார்பில் மே 12 முதல் 14ம் தேதி வரை இலங்கையில் சர்வதேச விசாக தினம் (புத்த பூர்ணிமா) கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடியும் இக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.

 

 • உலக அளவில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக ஆளுநர் வித்யாசாகர்ராவ் பெருமிதம் தெரிவித்தார்.

 

 • குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இனி ஹிந்தியில் மட்டுமே உறையாற்ற வேண்டும் என்ற நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்து இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

 

 •  சார்க் நாடுகளின் செயற்கைக் கோள்களைக் கொண்டு செல்லும் பிஎஸ்எல்வி சி 38 ராக்கெட் மே முதல்வாரத்திலும், அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணுக்குக் கொண்டு செல்லும் மாக்-3(எம்கே 3) ராக்கெட் மே மாதத்தின் இறுதியில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ ராக்கெட் தயாரிப்புப் பிரிவு இயக்குநர் பி.வி. வெங்கடகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

 •  பாரத ஸ்டேட் வங்கி ஈஜிகி கேபிடல் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக எஸ்பிஐ கார்டு நிறுவனம் உள்ளது. நாடு முழுவதும் கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) வழங்கும் பணியை எஸ்பிஐ கார்டு செய்து வருகிறது. ரூ 2000 க்கும் குறைவான மதிப்பில் வழங்கப்படும் காசோலைக்கு ரூ 100 கட்டணத்தை எஸ்பிஐ கார்டு நிறுவனம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.

பன்னாட்டு செய்திகள் :

 • உலகின் வயதான பெண்மனி என்ற பெயருடைய ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த வைலட் பிரஷன் பெற்றுள்ளார். இவர் கடந்த 1900 ஆம் ஆண்டு மார்ச் 10ல் பிறந்தார். இத்தாலியின் எம்மா மார்ட்டின் லூகியாவுக்குப் பிறகு உலகின் வயதானபெண் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • 5முறை அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ள வடகொரியா வாரந்தோறும் ஏவுகணை சோதனை நடத்தப்படுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

 • எகிப்து நாட்டின் தெற்குபகுதியில் அமைந்த லக்சார் நகரத்தின் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வு 3500 வருடங்கள் பழமை வாய்ந்த கல்லறையில் 6 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளனர். அவற்றுடன் மரத்தனாலான வண்ணமிகு பெட்டிகள் மற்றும் சிலைகளும் இருந்தன. வேலி ஆப் தி கிங்ஸ் என்ற பகுதி எடு மக டிரா அபுல் நகா நெக்ரோபோலிஸ் என்ற இடத்தில் இந்த கல்லறை கண்டறியப்பட்டது.

 

 • அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் பதவியேற்று விழாவுக்காக ரூ 766 கோடி நன்கொடை திரட்டி புதிய சாதனை படைத்துள்ளார். இது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அதிபர் ஒபாமா திரட்டியதைப் போல் 2 மடங்கு அதிகம் ஆகும்.

 

 • “புதிதாக உருவாகி வரும் இளம் தலைவர்கள்”என்ற பெயரில் அமெரிக்க வெளியுறவுத்துறை ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. அமைதிக்காக சிறந்த முறையில் பங்களிப்பை வழங்கி வரும் பாகிஸ்தான் இளைஞர் ராஜ்குமார் அமெரிக்காவின் கௌரவ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 • பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜீன் 21ம் தேதியை சர்வதேச யோகாதினமாக 2015ல் ஐ.நா அறிவித்தது. சர்வதேச யோகா தினத்தன்று ஐ.நா சபை ‘ஓம்’ என்ற எழுத்தும் யோகாவின் பல்வேறு நிலைகளும் இடம்பெறும் சிறப்பு தபால் தலையை வெளியிடுகிறது. இந்த சிறப்பு தபால் தலை நியூயார்க் ஜெனிவா, வியன்னாவில் உள்ள ஐ.நா அலுவலகங்களில் வெளியிடப்படும்.

 

 • சூரிய குடும்பத்துக்கு அப்பால் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நிற நட்சத்திரத்தை எல்.எச்.எஸ் 1140பி, சூப்பர் எர்த் என்ற புதிய கிரகம் சுற்றி வருவதாக ஐரோப்பிய வானியல் மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிரகம் உருவாகி இருக்க கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள் :

 • 10 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி 4 வது வெற்றியை பதிவு செய்தது.

 

 • யு எஸ் ஓபன் கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் கடந்த 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரில் யாஸ்பால் சிங் தலைமையில் பங்கேற்ற இந்திய அணி 3 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது.

 

 •  பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இப்போட்டியில் நேற்று இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஸ்பெயின் ரபெல் நாடார் ஆகியோர் 2 வுத சுற்றில் வெற்றி பெற்றனர்.

 

 •  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • இந்தியாவில் பின்னனு முறையில் வர்த்தகம் புரியும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை என கோத்ரெஜ் குழுமத் தலைவர் ஆதி கோத்ரெஜ் குறிப்பிட்டுள்ளார்.

 

 •  இரும்பு துருப்பிடிப்பதைத் தடுக்கவும், காகிதக் கூழை வெண்மைப்படுத்தவும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. உள்ளுர் ரசாயன தயாரிப்பு நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் 6 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடு எனும் வேதிப்பொருள் மீது பொருள் குவிப்பு வரி (ஆன்டி டம்பிங்) விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 •  டாடா குழும நிறுவனங்களுள் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 4.2 சதவிகிதம் உயர்ந்து ரூ.6608 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.6340 கோடியாக இருந்தது.

 

 •  நுகர்வோர் மின்னனு பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கொரியாவை சேர்ந்த எல்ஜி நிறுவனம் இந்தியாவை தனது ஏற்றுமதி மண்டலமாக உருவாக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்தியாவுடனான நல்லுறவு வலுப்பெற்று வருகிறது. அதேசமயம் சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முடிவு செய்துள்ளதாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் கி வான்கிம் தெரிவித்தார்.

 

 •  இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீட்டு அளவு கடந்த மாதம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் 299 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன. பார்தி ஏர்டெல் நிறுவனம் 76 கோடி டாலரும், டாடா இன்டர்நேஷனல் நிறுவனம் 17கோடி டாலரும், ஓஎன்ஜிசி 7கோடி டாலரும் முதலீடு செய்துள்ளன.

Call Now