April 18

Date:23 Apr, 2017

April 18

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 18

தேசிய செய்திகள் :

 • இந்திய இதிகாசங்களில் முதன்மையானதாகக் காணப்படும் மகாபாரதத்தை ரூ 1000கோடி செலவில் பிரம்மாண்ட திரைபடமாக எடுக்க பிரபல தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி திட்டமிட்டுள்ளார்.

 

 •  ஏழைகளுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும் வகையில் ‘ஜெனரிக்’ மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு செய்திகள் :

 • டைம் இதழ் ஆன்லைன் மூலமாக நடத்தும் உலகின் செல்வாக்கான மனிதருக்கான தேர்வில் பிலிப்பைன்ஸ்அதிபர் ரோட்ரிகோடியுடெர்ட் முதல் இடம் பிடித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி ஒரு வாக்கு கூடபெறாமல் பின் தங்கியுள்ளார்.

 

 • துருக்கியில் அதிபருக்கு அனைத்து அதிகாரங்களையும் அளிக்கும் ஆட்சி முறை தொடர்பான வாக்கெடுப்பில் அதிபர் தலைமையிலான ஆட்சிமுறைக்கு ஆதரவாக துருக்கி நாட்டுமக்கள் வாக்களித்தனர்.
 • சீனாவின் முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி அரசுநிர்ணயித்த இலக்ககை விஞ்சி சாதனை படைத்ததாக சீனாவின் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
 •  

  அமெரிக்கதுணைஅதிபர் மைக்பென்ஸ் தென்கொரியா–வடகொரியாநாடுகளில் எல்லைப் பகுதியில் திடீர்ஆய்வுநடத்தினார்.

 • இஸ்ரேல் முழுவதும் உள்ள சிறைகளில் சுமார் 7000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உள்ளனர். இந்நிலையில் மார்வன் பர்கோட்டி என்ற பாலஸ்தீன தலைவர் தலைமையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் நேற்றுமுதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலஸ்தீனஅதிபர் முகமதுஅப்பாஸின் அரசியல் வாரிசாக மார்வன் பர்கோட்டி கருதப்படுகிறார்.

விளையாட்டுச் செய்திகள் :

 • மாநில அளவிலான வில் வித்தை போட்டிகள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 12 மாவட்டங்களில் இருந்து 180க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். வயது அடிப்படையில் 6 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும்.

 

 • ஆஸ்திரேலியாவுக்குஎதிரானடெஸ்ட் தொடரைக்கைப்பற்றிய இந்தியஅணிக்கானஊக்கத் தொகையைபிசிசிஐரூ 50 லட்சத்திலிருந்துரூஒருகோடியாகஉயர்த்தியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபிகிரிக்கெட் போட்டிக்கானவர்ணனையாளர்களாக இந்தியஅணிமுன்னாள் கேப்டன் கங்குலி,ரிக்கிபாண்டிங்,மெக்கல்லம்,குமாரசங்ககாராஉள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 • தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிபோட்டிமே -5 ம் தேதிதொடங்குகிறது. இப்போட்டியில் 16 அணிகள் கலந்துகொள்கின்றனர்.

 

 • 19வது ஆசியதனிநபர் சாம்பியன் ஷிப் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் வரும் ஏப்ரல் 26 முதல் 30 வரைநடைபெறஉள்ளது. ஆடவர் பிரிவில் ஹாங்காங்கைசேர்ந்தமேக்ஸ் லீக்குதரவரிசையில் முதல் நிலைஅந்தஸ்தம் இந்தியாவில்,சவுரல் கோஷலுக்கு இரண்டாம் நிலையும் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • கடந்த நிதியாண்டில் 49 துறைமுக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.8341 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 10.4 கோடி டன் சரக்குகள் கையாளும் திறன் அதிகரித்துள்ளதாக மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

 

 •  கருப்புப் பணம் குறித்து துப்பு அளிப்பதற்காக நிதி அமைச்சகம் அளித்த மின்னஞ்சல் முகவரியில் 38 ஆயிரம் மின்னஞ்சல் தகவல்கள் வந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 •  மாநிலங்கள் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் நடவடிக்கைகளால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் விவசாயக் கடன் தள்ளுபடி தொடரும்பட்சத்தில் 2019ம் ஆண்டு தேர்தலுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கடன் தள்ளுபடியின் மதிப்பு 2சதவீத அளவுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளது.

 

 •  அமெரிக்காவில் உள்ள சஹாரா நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்காததையொட்டி ஆம்பி வேலியில் உள்ள சொத்தை ஏலத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Call Now