April 17

Date:20 Apr, 2017

April 17

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 17

தேசிய செய்திகள் :

 • குஜராத்தில் 2 ம் நாளாகஇன்றுசுற்றுப் பயணம் செய்துவரும் பிரதமர் மோடி, அங்கு சூரத் நகரில் பன்னோக்கு மருத்துவமனை மற்றும் வைரம் உற்பத்திநிறுவனத்தைதிறந்துவைத்தார்.

 

 •  நடப்பு 2017-18 ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2%ஆக உயரும் என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும்உலகவங்கிதெரிவித்துள்ளது.

 

 •  ராஜஸ்தான் குஜராத்பஞ்சாப் உள்ளிட்டமாநிலங்களில்அடுத்த 3 நாள்களில் கடுமையான அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

 

 •  மருத்துவபடிப்பு முடிந்த மாணவர்கள், ‘டாக்டர்’பட்டம் பெறுவதற்கு முன்பு “தேசியகல்வி நிறைவுத் தேர்வு” நடத்துவதற்கு12 மாநிலங்களும்,4 யூனியன் பிரதேசங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது .

 

 •  தெலுங்கானா மாநிலத்தில் 11 வயதுமாணவர் அகஸ்தியா ஜெய்ஸ்வால் 12 ம் வகுப்புதேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளார்.

 

 •  ஜன்தன் வங்கிகணக்குகளில் ஏப்ரல் 5 ம்தேதியுடன் முடிவடைந்த ஒருவாரகாலத்தில் மட்டும் ரூ 1000 கோடிடெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

 • லண்டனில் தேவாலயத்ஐ தகட்டப் பணியாளர்கள் மறுசீரமைத்த போது ஐந்து எஞ்சிய கேன்டர் பெர்ரி பேராயர்களின் உடலகள் பலநூற்றாண்டுகளாக நிலவறைஒன்றில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். ஐந்து போராயர்களின் உடல்களில் ஒருவரதுஉடல் பேன்கிராஃப்ட் பேராயரின் உடலாகும். இவர் 1611 ம் ஆண்டுஜேம்ஸ் அரசர் வெளியிட்ட பைபிளை மேற்பார்வையிட்டவர்.

 

 •  வடகொரியாவின் ஹம்கியோங் மாகாணத்தில் உள்ளசின்போபகுதியில் ஏவுகணை சோதனை இரவு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த சோதனை தோல்வியில் முடிந்தது.

 

 •  ஈரான் நாட்டில் அடுத்தமாதம் 19ம்தேதிஅதிபர்தேர்தல் நடக்கிறது. இதில் 1600 பேர் வேட்பாளர்களாக போட்டியிட பதிவு செய்துள்ளனர்.  வேட்பாளர் இறுதிப் பட்டியல் 27ம் தேதிவெளியிடப்படுகிறது.

 

 •  இந்தியபெண் பொறியாளர் திருப்தி ஜெயின் இந்த ஆண்டுக்கான கார்டியர் விமன்ஸ் இன்ஷியேட்டிவ் விருதை வென்றுள்ளார். பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 2006ம் ஆண்டுமுதல் இந்தவிருது வழங்கப்படுகிறது. இந்தியஅரசில் 20 ஆண்டுகள் பணியாற்றிய ஜெயின் குஜராத்தை தலைமையமாகக் கொண்டு2013 ல் நைரீதா சர்வீஸஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம்நீர் மேலாண்மை கருவிகளை சிறு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.

 

 • துருக்கிஅதிபருக்குகூடுதல்அதிகாரம்வழங்குவதற்காக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் துருக்கிஅதிபர் எர்டோகன் வெற்றிபெற்றுள்ளார்.

 

 •  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்றுபாட்னாவுக்குவருகைதரஉள்ளார்.

 

 •  பிகார் மாநிலம் சம்பாரண் பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மகாத்மாகாந்தி 1917 ல் முதன்முறையாக சத்யாகிரகப் போராட்டத்தில்ஈடுபட்டார். ஆங்கிலேய அரசுக்கு எதிராக காந்தி பங்கேற்ற முதல்கிளர்ச்சி இதுவாகும். சம்பாரண் சத்யாகிரக போராட்டத்தின் நூற்றாண்டுவிழா  இந்தஆண்டு கொண்டாடப்படுகிறது.

 

 •  விமானபயணத்தின் போதுஅத்துமீறும் பயணிகள் மீதுஅபராதம் மற்றும் சட்டநடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகளை ஏர்இந்தியா நிறுவனம் வகுத்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • இந்தஆண்டுக்கானபார்முலா -1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 3வது சுற்றானபக்ரைன் கிராண்ட்ப்ரிசகிர் ஓடுதளத்தில் நேற்றிரவுநடந்தஆட்டத்தில் ஜெர்மனியின் செபாஸ்டியன்வெட்டல் 1மணி 33 நிமிடம் 53.374 வினாடிகளைகடந்துமுதலிடம்பிடித்தார்.

 

 •  கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலானசப் – ஜீனியர் கபடி போட்டியின் ஆடவர்பிரிவில் இந்திய விளையாட்டு ஆணைய அணியும், மகளிர் பிரிவில் ஹரியாணா அணியும் பட்டம் வென்றன.

 

 •  ஐ பிஎல் கிரிக்கெட்தொடரின் 17வதுலீக் ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர்ராயல் சேலஞ்சர்ஸ் அணியை ரைஸிங் புணே சூப்பர் ஜயன்ட்ஸ்அணி தோற்கடித்தது.

 

 •  சென்னைலீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் ஏஜிஓஆர்சி (பொதுகணக்காளர் அலுவலக மனமகிழ் மன்ற கிளப்) அணி வெற்றி பெற்றது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • கடந்தநிதியாண்டில் (2016-17) மியூச்சுவல் பண்ட்துறையின் மொத்தசொத்துமதிப்பு 42% வளர்ச்சிகண்டுள்ளது.

 

 •  ஏப்ரல் மாதத்தில் இதுவரை ரூ16,500 கோடி அந்நிய மூதலீடு இந்திய சந்தைக்கு வந்துள்ளது.

 

 •  நடப்பு 2017-18 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரவளர்ச்சி 72%ஆகஉயரும் என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் உலகவங்கிதெரிவித்துள்ளது.

 

 •  ஏடிஎம் இயந்திரங்களை நிர்வகிப்பது, அதற்கான பணப் பட்டுவாடாசெய்வது ஆகிய துறைகளில் 100%அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்தியஅரசு ஆலோசித்துவருகிறது.

Call Now