April 16

Date:20 Apr, 2017

April 16

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 16

தேசிய செய்திகள் :

 • நாடு முழுவதும் 10 உயர்நீதிமன்றங்களில காலியாக இருக்கும் நீதிபதிகள் பணியிடங்கள் 51 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் (நீதிபதிகள் தேர்வு குழு) பரிந்துரைத்துள்ளது.

 

 •  கருப்புப் பணப் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கப்பு கொடுப்பதற்காக, மத்திய நிதியமைச்சகம் தொடங்கியுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இதுவரை 38000 மின்னஞ்சல்கள் குவிந்துள்ளன.

 

 •  பாகிஸ்தானை தவிர, பிற ஆசிய நாடுகள் பயன்பெறும் வகையில் வரும் மே 5ம் தேதி, தெற்காசிய செயற்கை கோளை, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் உறுதி செய்துள்ளார்.

 

 •  வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ1000 நிதியுதவி அளிக்கும் திட்டத்தை ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் தொடங்கி வைத்தார்.

 

 •  தெலுங்கானாவில் முஸ்லிம்கள்,பழங்குடியின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதா தெலுங்கானா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

 

 •  மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் உ.பி அரசு கையெழுத்திட்டது. லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,மத்திய மின்சாரத்துறை இணையமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

பன்னாட்டு செய்திகள் :

 • கணினித் துறையில் நவீன கணினியையும்இ இண்டர்நெட் எனப்படும் வலையமைப்பையும் கண்டறிவதில் முன்னோடியான ராபர்ட் டைலர் தனது 85 ஆம் வயதில் மரணமடைந்தார்.டைலர்1961 ஆம் ஆண்டில் நாசாவில் பணியாற்றிய போது நவீன கணினி மவுசை கண்டு பிடிப்பதில் ஈடுபட்டார். பின்னர் 1996 ல் அமெரிக்க இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் போது கணினியின் மூலம் வலைப்பின்னலை உருவாக்குவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். 1990 ல் டைலரின் நிர்வாகத்தின் கீழ் ஆல்டோ விஸ்டா எனப்படும் செர்ஜ் இஞ்சின் ஏற்படுத்தப்பட்டது.
  1999 ல் அவருக்கு அறிவியல் கண்டுபிடிப்பிற்கான தேசிய பதக்கம் வழங்கப்பட்டது.

 

 •  ஆப்கானிஸ்தானில் நங்கர் ஹார் மாகாணத்தில் அச்சின் மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள்இ ஆயுதக்கிடங்குகள் உள்ளிட்டவற்றை குறி வைத்து கடந்த 13 ம் தேதி அமெரிக்காஇவெடிகுண்டுகளின் தாய் என்றழைக்கப்படுகிற 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஜி.பி.யு 43ஃபி என்ற ராட்சத குண்டு போடப்பட்டதில் பலியானோர் எண்ணிக்கi 94 ஆக உயர்ந்துள்ளது.

 

 •  இத்தாலிநாட்டில் 117 வயது மூதாட்டி மொரானோ மரணமடைந்தார். உலகின் மிக வயதான நபர் எனும் கின்னஸ் சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆவணங்களின் படி உலகில் அதிக காலம் வாழ்ந்த ஐந்தாவது நபர் எனும் பெருமையை பெறுகிறார்.

 

 •  அமெரிக்கா தனது வர்த்தக கூட்டாளிகளான சீனா, ஜெர்மனி,  ஜப்பான், தென்கொரியா, சுவிட்சர்லாந்து, தைவான் ஆகிய 6 நாடுகளின் பண நடவடிக்கைகளை கண்காணிப்பில் வைத்துள்ளது.

 

 •  உலகின் மிக அபாயகரமான ‘ஸ்மார்ட்’ அணுகுண்டு மாதிரி சோதனையை அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அமெரிக்காவிடம் 7200க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகளை வீச 94 போர் விமானங்கள் உள்ளன. தற்போதுள்ள அணுகுண்டுகளுக்கு பதிலாக பி 61-12 என்ற அதிநவீன ஸ்மார்ட் அணுகுண்டை தயாரிக்கும் திட்டத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐதராபாத்தை சாய்த்த கொல்கத்தா அணி 3 வது வெற்றியை பதிவு செய்தது.

 

 •  ஆசிய டேபிள் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சரத் கமல் தோல்வியடைந்தார்.

 

 •  குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

 

 •  சிங்கப்பூூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரணீத் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • நால்கோ நிறுவனம் கட்டமைத்த 4 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை மத்திய மின்சார மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார்.

 

 •  துனியார் துறையை சேர்ந்த டி.சி.பி வங்கியின் 4ம் காலாண்டு லாபம் 24% சரிவடைந்தது.

 

 •  சுஸீகி மோட்டார் கார்ப்பரேஷன்,தோஷியா கார்ப்பரேஷன்,டென்ஸோ கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளன. இதற்காக ரூ1200 கோடி முதலீட்டில் ஆலை அமைக்கவும் ஒப்புக் கொண்டுள்ளன.

 

 •  பிரிக்ஸ் வங்கி சார்பில் இந்திய ரூபாய் சீனாவின் யுவான் மதிப்பிலான பத்திரங்கள் இந்த ஆண்டில் வெளியிடப்படும் என பிரிக்ஸ் வங்கியின் தலைவர் கே.வி.காமத் தெரிவித்துள்ளார்.

 

 •  பிட்காயின் என்பது எலக்ட்ரானிக் அல்லது டிஜிட்டல் வடிவத்தில் இந்த நாணயம் இயங்கும் பணம மற்றும் நாணயம் போல அச்சிடப்படுவதில்லை. கணினிகளால் பிட்காயின் தயாரிக்கப்படுகிறது.

Call Now