April 15

Date:20 Apr, 2017

April 15

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 15

தேசிய செய்திகள் :

 • எதிர்வரும் 2022ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ளஅனைத்துமக்களுக்கும் வீட்டுவசதி ஏற்படுத்தித் தரப்படும் எனபிரதமர் மோடிஉறுதியளித்தார்.

 

 •  எதிர்வரும் 2022ம்ஆண்டுக்குள்சட்டமேதைடாக்டர் அம்பேத்கரின் 127 வது பிறந்ததினவிழா, மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் அமைந்துள்ள தீக்ஷாபூமியில் (அம்பேத்கர் புத்தமதத்தைதழுவிய இடம்) கொண்டாடப்பட்டது.

 

 •  ஜம்மு-காஷ்மீர்மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கிரீஷ் சந்திரசக்சேனா (90) தில்லியில் காலமானார். உ.பிரதேசமாநிலம் ஆக்ராவில் பிறந்தசாக்சேனா. ஓய்வுபெற்ற ஐபிஎஸ்அதிகாரியாவார். இந்தியஉளவு அமைப்பான ‘ரா’வின் தலைமை பொறுப்பை வகித்துள்ளார்.

 

 •  ஹஜ் புனிதயாத்திரைமேற்கொள்ளும் யாத்ரீகர்களை, கடல் மார்க்கமாக கப்பல்களில் சவூதிஅரேபியாவுக்கு அனுப்பி வைப்பது குறித்து மத்தியஅரசு பரிசீலித்துவருவதாக, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சா ;முக்தார் அப்பாஸ்நக்வி கூறினார்.

 

 •  நாடுமுழுவதும் எட்டாம் வகுப்புவரை ஹிந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலமனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 •  ஆந்திரபிரதேசமாநிலம்,அமராவதியில் ரூ 100 கோடிசெலவில் சட்டமேதைஅம்பேத்கரின் பெயரில் நினைவுப் பூங்கா அமைப்பதற்காக ஆ.பி. மாநிலமுதல்வர் சந்திரபாபுநாயுடு அடிக்கல் நாட்டினார். ஆமராவதியின் ஐனவோலு என்ற கிராமத்தில் இந்தபூங்கா அமையஉள்ளது.

 

பன்னாட்டு செய்திகள் :

 • விக்கி லீக்ஸ் ஏஷியாவுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு விரோதமாகவும் செயல்படும் நிறுவனம் எனஅமெரிக்காவின் மத்தியஉளவுஅமைப்பின் தலைவர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

 

 •  முன்னாள் இந்தியகடற்படைஅதிகாரிகுல்பூஷன் யாதவிற்குபாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததற்கு இந்தியாஎதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் காஷ்மீர் பகுதியில் இந்தியஉளவுஅமைப்பான‘ரா’அமைப்பை சேர்ந்த 3 இந்தியர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

 •  அமெரிக்கஅதிபர் டொனால்ட்டிரம்ப்க்கு எதிராக தங்களின்எதிர்ப்பு வாசகத்தை பதாகை ஒன்றில பொறித்துஅதை வெதர்பலூன் ஒன்றில் இணைத்து பூமியில் இருந்து 90,000 அடிஉயரத்தில் மிதக்கவிட்டுள்ளனர். உலக வரலாற்றிலேயே முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு எதிரான போராட்டம் விண்வெளியை எட்டியுள்ளது.

 

 •  ஐ.நா. சபையில் அம்பேத்கரின் 126 வதுபிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்தியஅரசுசார்பில்நடத்தப்பட்ட இந்தவிழாவில் ஐ.நா.துணைபொதுச் செயலாளர் அமினா முகமது சமுகந்தி, சமஉரிமைக்காக போராட அம்பேத்காரை பின்பற்றுவோம் எனஅழைப்புவிடுத்துள்ளார்.

 

 •  ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்குமிடங்கள் மீதுமிகப்பெரிய குண்டைவீசி தாக்குதல்நடத்திய அமெரிக்கராணுவத்துக்கு அதிபர் டிரம்ப் பாராட்டுதெரிவித்தார்.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பைக்குஎதிரானஆட்டத்தில் பத்ரீ ஹாட்ரிக் சாதனைபடைத்தும் பெங்களுர் அணி 3வது தோல்விஅடைந்தது.

 

 •  ‘பார்க்வியூ’ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் இறுதிசுற்றில் இந்தியவீரர் வேலவன் செந்தில் குமார் தோல்வியடைந்தார். இதனால் பி.எஸ்.ஏ போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பபை இழந்தார்.

 

 •  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை குஜராத் லயன்ஸ் அணிதோற்கடித்தது.

 

 •  ஆசியபில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியவீரர் பங்கஜ் அத்வானிசாம்பியன் பட்டம் வென்றார். இது அவருடைய 7 வதுஆசியசாம்பியன் பட்டமாகும்.

 

 •  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணிபெங்களுர்ஸ் ராயல் சேலஞசர்ஸ் அணியைத் தோற்கடித்தது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • சர்வதேசஅளவில் பலலட்சம் குழந்தைகளுக்குஅறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை தொடர்பாக பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளதாக டாடாசன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

 

 •  வாடகைகார் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஓலா நிறுவனத்தில் ஸாப்ட் பேங்க் நிறுவனம் ரூ 1657 கோடியை முதலீடு செய்துள்ளது. பெங்களுரைசேர்ந்த ஏ.என்.ஐ டெக்னாலஜீஸ் நிறுவனம் ஓலா என்றபெயரில் வாடகைடாக்ஸி சேவையைவழங்கிவருகின்றன.

 

 •  நடப்பு 2017-18ம் நிதியாண்டில் பரஸ்பர நிதிநிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துமதிப்புரூ 17.5 லட்சம் கோடியாகஉயரும் எனதரக் குறியீட்டு நிறுவனமான இக்ரா,தெரிவித்துள்ளது.

 

 •  குறைந்தகட்டணத்தில் உள்நாட்டு விமானசேவை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனம் வரும் ஜீன் மாதம் முதல் கூடுதலாக 18 விமான சேவைகளை இயக்க உள்ளது.

 

 •  ஆதித்யா பிர்லாகுழுமத்தைச் சேர்ந்த கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அன்னிய முதலீட்டை 495 ஆக உயர்த்தி கொள்ள ரிசர்வ் வங்கிஅனுமதி அளித்துள்ளது.

 

Call Now