April 14

Date:16 Apr, 2017

April 14

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 14

தேசிய செய்திகள் :

 • ஏப்ரல் 15 அம்பேத்காரின் 126வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

 

 •  உத்திரப் பிரதேசத்தை ஒட்டிய எல்லைப்பகுதி பிரச்சனையை கூட்டு ஆய்வு மூலம் தீர்த்துக் கொள்ள இந்தியாவும் நேபாளமும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்தியாவும் நேபாளமும் 1751 கி.மீ நீள எல்லையை பகிர்ந்துகொள்கின்றன. உத்திரப்பிரதேசத்தின் கேரி மாவட்டத்தையொட்டி நேபாளத்தில் அமைந்துள்ள பகுதிகளில் இந்த கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

 

 •  முஸ்லீம், கிறித்துவ மற்றும் சீக்கிய சமூகத்தை சேர்ந்த ஏழை பெண்களுக்கு ஒரே இடத்தில் அரசுசெலவில் திருமணம் செய்து வைக்க உத்திரபிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் ஒப்புதல் அளித்தார். இந்த புதியதிட்டம் 100 நாள் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

 •  சி.பி.எஸ்.இ 12 ம் வகுப்புக்கான சுகாதாரம் மற்றும் உடற்கல்வி. பாடப் புத்தகத்தில் பெண்களின் உடல் வடிவமைப்பு பற்றி குறிப்பிட்ட புத்தகபதிப்பாளர் மீது மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை மந்திரி பிரகாஷ் ஜாவடேகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடபட்டுள்ளார்.

 

 •  மத்திய அரசின் பல்வேறுதுறைகள் மீதான ஊழல் புகார்கள் 67% அதிகரித்துள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது. 2015 ம் ஆண்டு புகார்களின் எண்ணிக்கை- 29838. 2016ம் ஆண்டு புகார்களின் எண்ணிக்கை 49847 ஆகும்.

 

 •  விதிமுறைகளின் படி முக்கியமான தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யாத நாடு முழுவதுமுள்ள 2000க்கும் அதிகமான பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

 

 •  திருமணத்துக்குப் பிறகுகடவுச் சீட்டில் உள்ளதங்களதுபெற்றோர் பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை பெண்கள் இனி மாற்ற வேண்டிய தேவையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

பன்னாட்டு செய்திகள் :

 • ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இடத்தை குறிவைத்து அணு அல்லாத மிகப்பெரிய குண்டை வீசிய அமெரிக்க ராணுவத்திற்கு அமெரிக்கஅதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

 •  அமெரிக்காவின் முதல் முஸ்லீம் பெண் நீதிபதி ஷீலாஅப்துல் சலாம், நியூயார்க் ஹட்சன் ஆற்றில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

 

 •  2016 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட உலகின் பல்வேறு பகுதிகளின் புகைப்படங்களை நாசாவெளியிட்டது. அதில் இந்தியாவின் இரவுத் தோற்றத்தையும் விண்வெளியிலிருந்து புகைப்படங்களாக எடுத்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான (நாசா) வெளியிட்டுள்ளது.

 

 •  வடகொரியா கடந்த 2006ஆம் ஆண்டு முதன்முதலாக அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டது. தொடர்ந்து 2009, 2013 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருமுறையும் கடந்த ஆண்டு 2 முறையும் அணு குண்டு சோதனைகளை நடத்தி உலக அரங்கை அதிர வைத்துள்ளது. தற்போது 6  வது முறையாக வடகொரியா நாட்டை நிர்மாணித்ததும் இல் சுங்கின் 105 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிற போது அணுகுண்டு சோதனை நடத்தப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

 

 •  இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தில் குறைந்து வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா, எனகண்டறிந்து பெண் குழந்தைகளுக்கு சுமக்கும் பெண்களுக்கு சிறப்பு கவனம் தருவதாக கூறி ஒருதிட்;டத்தை அரசு முன்மொழிந்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் கிங்ஸ் லைவன் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது.

 

 •  சர்வதேசபாட்மிண்டன் தரவரிசையில் இந்தியவீராங்கனைபி.வி.சிந்து 5வது இடத்துக்குதள்ளப்பட்டார்.

 

 •  ‘பார்க்வியூ’ ஒபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்;தில் குமார் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிஎஸ்ஏ உலக டூர் தொடரில் வேலவன் இறுதி சுற்றுக்கு முன்னேறுவது இதுவேமுதல்முறை.

 

 •  சாம்பியன்ஸ் லீக்கால்பந்து போட்டியில் 100 கோல்களை அடித்துமுதல்வீரர் என்ற சாதனையைரியல்மாட்;ரிட் ரொனால்டோபெற்றார்.

 

 •  தில்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளின் போது மைதானத்தில் குவியும் குப்பைகள் குறித்து தில்லிமாசுக் கட்டுப்பாட்;டுக்குழு கண்காணிக்க வேண்டும் என தேசியபசுமை தீர்ப்ப்hயம் உத்தர விடப்பட்டுள்ளது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • கடந்தநிதி ஆண்டுக்கான பி.எப். வட்டிவிகிதம் 8.65% ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

 

 •  நாட்டில் ஒரு முனை வரி விதிப்பான சரக்கு மற்றும்; சேவை வரிவிதிப்பு ஜீலை 1ம் தேதிமுதல் அமலாக உள்ளது. இந்தவரி விதிப்பில் முதல் ஆண்டில் வரிவசூல் கடுமையாக பாதிக்கப்படும் என மத்தியவருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.

 

 •  கடந்த மார்ச் மாத ஏற்றுமதி 27.6% உயர்ந்து 2930 கோடி டாலராக உள்ளது. பெட்ரோலியம், டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினியரிங் பொருள்கள் மற்றும் ஜீவல்லரி ஆகியபிரிவுகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.

Call Now