April 12

Date:16 Apr, 2017

April 12

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 12

தேசிய செய்திகள் :

 • மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் ஏப்ரல் 21 முதல் 3 நாள் நடைபெறும் 29வது சாவர்க்கர் மாநாட்டைபாஜக தேசியதலைவர் அமித் ஷா தொடங்கிவைக்கிறார். தாணேயில் முதல் முறையாகநடைபெறும் இந்தமாநாட்டை ஸ்வாந்திரவீரசாவர்க்கர் மண்டல்,சாவர்க்கர் தர்ஷன் பிரதிஷ்டான், ஸ்வதந்திராவி.டி. சாவர்க்கர் பிரதிஷ்டான் ஆகியஅமைப்புகள் இணைந்துஏற்பாடுசெய்துள்ளன.

 

 •  நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐயுடன் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் உள்ளிட்ட ஐந்து துணைவங்கிகள் சமீபத்தில் ஒன்றிணைக்கப்பட்டன.அப்படி இணைக்கப்பட்ட துணை வங்கிகளின் ஊழியர்களுக்கு புதிய நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 •  கோவாமாநிலஅமைச்சரவை (ஏப்ரல் 12)ல் விரிவாக்கம் செய்யப்படஉள்ளது.

 

 •  ஏடிஎம் மையங்களில் உள்ளடெபாசிட் செய்யும் இயந்திரங்கள் மூலம் எத்தனைமுறைவேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் கட்டணமின்றி ரொக்கமாக டெபாசிட் செய்யலாம் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

 

 •  உத்திரபிரதேசத்தில் மின் விநியோகத்தை மேம்படுத்த கிராம புறங்களில் 18 மணி நேரமும், வட்டத ;தலைநகரங்கள், பந்தேல்கண்ட் பகுதியில் 20 மணிநேரமும், மாவட்டத் தலைநகரங்களில் 24 மணிநேரம் மின்விநியோகம் இருப்பதை உறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டன.

 

 •  2019ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் மின்சாரவசதி இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டு;ளளது.

 

 •  கேரள மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும்,பத்தாம் வகுப்புவரை மலையாளப் பாடம் கட்டாயம் என்பதற்கான அவசர சட்டத்தை கேரள மாநிலஅரசு பிறப்பித்துள்ளது,வரும் கல்வியாண்டு முதல் இது செயல்பாட்டுக்குவருகிறது. 

பன்னாட்டு செய்திகள் :

 • பாகிஸ்தானில் தலிடான்களின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி பின்னர் பெண்கள் கல்வியை வலியுறுத்தி சமூக சேவையாற்றி யமைக்காக நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் (19) கனடாவின் கௌரவகுடியுரிமைபெற்றார்.
  மலாலாவுக்கு கௌரவக் குடியுரிமை வழங்குவதாக கனடா 2014ம் ஆண்டு அறிவித்தது. அது தொடர்பான அதிகாரப் பூர்வ நிகழ்ச்சி கனடா தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்றது. கனடா நாடாளுமன்ற வளாக கோபுரத்தில் பறக்க விடப்பட்ட தேசியகொடி மலாலாவுக்கு வழங்கப்பட்டது.

 

 •  உலகின் பிறநாடுகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கையைவிட சீனா கடந்தஆண்டு 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு மரணதண்டனைகளை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

 •  ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை கலை, இசை, இலக்கியம், விளையாட்டு ஆகியவ்றறின் மூலம் பரப்பி வருவோருக்கு “ஐக்கியநாட்டின் அமைதிதூதர்” என்ற பட்டத்தைத ஐக்கியநாடு அமைப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்வி உரிமையாளர் மலாலா யூசுப்சாய் நியமிக்கப்பட்டார்.

 

 •  இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டில் யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப் படவில்லை என ‘ஆம்னெஸ்டி இண்டர் நேஷனல்;’ அமைப்பு தெரிவித்துள்ளது.

 

 •  சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தின் கீழ் உள்ள இத்லிப் மாகாணத்தில் கான் ஷேக்குன் நகரில் ஏப்ரல் 4-ல் போர் விமானங்கள் விஷவாயுதாக்குதல் நடத்தியதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்ததாக்குதலைசிரியாஅதிபர் பஷார் ஆல்அசாத் படைகள் நடத்தியதாகஅமெரிக்காவும் இங்கிலாந்தும் உறுதிசெய்தன.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் பெங்களுரில் பெங்களுருவுக்கும் மும்பை இந்தியாவுக்கும் இடையே ஐபிஎல் போட்டியில் கோலிபங்கேற்கஉள்ளார்.

 

 •  ஆசியகோப்பைதகுதிசுற்றுஆட்டத்தில் இந்தியமகளிர் கால்பந்து அணி ஹாங்காங் அணியைவீழ்த்தியது.

 

 •  அஸ்லான்ஷா ஹாக்கி தொடரில் பங்கேற்கஉள்ள இந்தியஆடவர் அணிக்குகேப்டனாக ஸ்ரீஜேஷ் நியமிக்கபட்டுள்ளார். இதில் புதிதாக 4 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 •  சர்வதேசகிரிக்கெட் கவுன்சிலின் புதியசீர்த்திருத்தங்கள் குறித்து வங்கதேசகிரிக்கெட் வாரியத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கலந்தாலோசிக்கிறது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • பி.எஸ்.வாகன விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையால், 1.2 லட்சம் வாகனங்கள் விற்பனையாகாமல் உள்ளதாக இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் உள்நாட்டில் பயணிகள் வாகனவிற்பனைவளர்ச்சி 7 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை இருக்கும் என இந்தியாமோட்டார் வாகனதயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

 •  தங்கம் இ.டி.எப். திட்டங்களிலிருந்துமுதலீட்டார்கள் சென்றநிதியாண்டில் ரூ.775 கோடியைவிலக்கிக் கொண்டுள்ளார்.

 

 •  இந்தியாவின் எரிபொருள் பயன்பாடுசென்றநிதியாண்டில் 5%  என்றஅளவில் மிதமானவளர்ச்சியைக் கண்டது. பெட்ரோலியப் பொருள்கள் பயன்பாட்டில் இந்தியா 3வது இடத்திலுள்ளது

Call Now