April 11

Date:16 Apr, 2017

April 11

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 11

தேசிய செய்திகள் :

 • சுமார் 3000க்கும் மேற்பட்ட உள்நாட்டு வரைபடங்களை பதிவிறக்கம் செய்வதற்கான பிரத்யேக இணையதளத்தை இந்திய நில அளவைத்துறை (சர்வே ஜெனரல் ஆஃப் இந்தியா) தொடங்கியுள்ளதாக இந்திய நிலஅளவைத் துறையின் 250வது ஆண்டுவிழா தில்லியில் கொண்டப்பட்டது.

 

 •  மகாத்மாகாந்தி சத்யாகிரகப் போராட்டத்தை தொடங்கியதன்; நூற்றாண்டை முன்னிட்டு காந்தி குறித்த 3 புத்தகங்களை மத்தியஅரசு மறு வெளியீடு செய்துள்ளது. ‘காந்தி இன் சம்பரன்’,‘ரோலண்ட் அண்ட் காந்தி கரஸ்பாண்டன்ஸ்’, ‘காந்தியின் புதியபதிப்பை வெளியிட்டார்

 

 •  இந்தியா ஆஸ்திரேலியா இடையே பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது உள்பட 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தியாவில் 4வது நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தில்லிக்கு வருகை தந்தார். 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியப் பிரதமராக பொறுப்பேற்ற மால்கம் டர்ன்புல் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவேமுதன்முறை.

 

 •  இந்திய வங்கதேச தொழில் நிறுவனங்கள் இடையே ரூ.54000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மின் உற்பத்தி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுஉற்பத்தி ஆகியது றைகளில் இரு நாடுகளுக்கு இடையேயுள்ள வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

 •  2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று இந்தியபிரதமராக மோடி பதவியேற்றதை தொடர்ந்து 2017,ஏப்ரல் வரை 56 வெளிநாட்டு சுற்றுபயணங்களை மேற்கொண்டுள்ளார்.

 

 •  மோடியின் சாதனைகள்:  2015ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். இதன் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதன் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.                                           1956ம் ஆண்டுமுன்னாள் பிரதமர் நேருவுக்கு பிறகு சுமார் 60 ஆண்டுகள் ஆனநிலையில், இந்தியா பிரதமர் மோடி அயர்லாந்திற்கு பயணம் மேற்கொண்டார்.

                                          முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு 34 ஆண்டுகளுக்குபின் 2015 ஆகஸ்டில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியபிரதமர் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

                                           1973ம் ஆண்டு இந்திராகாந்தி பயணித்த கனடாவுக்கு 42 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் மோடி சென்றது வரவேற்கத் தக்கது.

                                           நமது அண்டை நாடான இலங்கைக்கு 2015 மார்ச் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். 29 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை செல்லும் முதல் இந்தியபிரதமர் என்ற பெருமையை மோடிபெற்றார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொண்டமுதல் வெளிநாட்டுப் பயணம் பூடான்.

பன்னாட்டு செய்திகள் :

 • வருகிறஏப்ரல் 14 ம்; தேதிதமிழ் புத்தாண்டு தினம் ஆகும். இந்தநிலையில் பீஜிங் தமிழ்ச்; சங்கத்தின் சார்பில் பீஜிங்கில் தமிழ் புத்தாண்டுவிழாகொண்டாடப்படுகிறது.

 

 •  சவுதிஅரேபியாதலைமையிலான 41 முஸ்ஸீம் நாடுகளின் கூட் ராணுவப் படைக்கு தலைவராக பாகிஸ்தான் ராணுவமுன்னாள் தளபதி ரகீவ் ஷெரிப்  நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • குரூப் ஆஃப் செவன் எனும் பணக்காரநாடுகளின் வெளியுறவுத் துறைஅமைச்சர்களின் மாநாடு இரண்டுநாட்டுகளுக்குநடைபெறயுள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • இந்தியாவில் விளையாட்டு வீரர் வீராங்கனையாக உருவெடுக்க விரும்புவோர் இந்திய விளையாட்டு ஆணையம் தங்களை அடையாளம் காணும் வகையில் தங்களது வீடியோ பதிவு மற்றும் தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கான இணையத்தளத்தை மத்தியஅரசு உருவாக்கி வருகிறது.

 

 •  சென்னைலீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் இந்திய வங்கி அணியை வீழ்த்தி சென்னை சிட்டி எப்சி அணி வெற்றிபெற்றது.

 

 • உலகமகளிர் ஹாக்கிலீக் ரவுண்ட் போட்டியில் இந்தியஅணிசாம்பியன் ஆனது. இந்தியஅணிதனது இறுதிசுற்றில் சிலிஅணியைதோற்கடித்தது.

 

 •  உலக ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பாகாலியிறுதிக்குமுன்னேறியுள்ளார்.

 

 •  சென்னைலீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணி வெற்றிபெற்றது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • வாரத்தின் முதல்; வர்த்தக தினமான திங்கள் கிழமையன்று பங்குவர்த்தகம் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டுஎண்; சென்செக்ஸ் 131 புள்ளிகள் வீழ்ந்தது. தேசியபங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 17 புள்ளிகள் இறங்கியது.

 

 • இந்தியாவில் கடந்தமார்ச் மாதத்தில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விற்பனை 0.60 சதவீதம் சரிவடைந்துள்ளது.

 

 • நடப்பு நிதிஆண்டில் (2017-18) வர்த்தக வாகனங்கள் விற்பனை 8 சதவீதம் வரை அதிகரிக்கும் எனகடன் தகுதி தர நிர்ணய நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.

 

 • சர்வதேச அளவில், கடந்த மார்ச் மாதத்தில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Call Now