April 10

Date:16 Apr, 2017

April 10

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 10

தேசிய செய்திகள் :

 • ஆந்திரா மாநிலம் திருப்பதியில் அடுத்த ஒருசில நாட்களுக்கு வெப்பநிலை 119 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

 •  மத்திய அமைச்சர்கள் அனைவரும் கடந்த 3 ஆண்டுகளில் தாங்கள் செயல்படுத்திய பணிகள் குறித்த சாதனைப் பட்டியலை அளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 •  ரூ2 லட்சம் ரூபாய்க்கு மேலான கடன், கடன் அட்டைக்கான தொகையை,ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிந்தைய 50 நாட்களில் ரொக்கமாக செலுத்தினால் வருமான வரிகணக்கில் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 •  கடந்த ஆண்டு நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என தேசிய பாதுகாப்பு படையின் தேசிய குண்டுவெடிப்பு தகவல் மையம் தகவல் தெரிவித்தன.

 

 •  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின் கருப்பு பணத்ஐ;த டெபாசிட் செய்ய உத்தர பிரதேசத்தின் பரேலியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையை புதிதாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

 

 •  இந்திய வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு நடத்தும் “Economic Reform With Reference to Electrol issues” என்ற தலைப்பிலான கருத்தரங்கை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஏப்ரல் 8ல் துவக்கி வைத்தார்.

 

பன்னாட்டு செய்திகள் :

 • வடகொரியா கடந்த 2006 ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 11வது ஆண்டாக அனுஆயுத சோதனையிலும். கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்துவதற்கு தயார் நிலையில் இருப்பதற்காக கொரிய தீபகற்பம் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைகின்றன.

 

 •  சவுதி அரேபியா மக்களுக்கு இனி வருமான வரி கிடையாது என சவுதி அரேபியா நிதியமைச்சர் அல்ஜதான் அறிவித்துள்ளார்.

 

 •  இந்தியாவுக்காக பாகிஸ்தான் தூதராக சோஹைல் மகமூத் நியமிக்கப்பட உள்ளார்

 

 •  சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்காக கழுதை வளர்ச்சித்திட்டம் உருவாக்கப்பட்டு சுமார் ரூ 100 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

 •  லண்டன் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அனுஜா ரவீந்திரதிர் என்ற பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அனுஜா ரவீந்திரதிர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் முதல் வெள்ளையர் அல்லாத நீதிபதி என்பது முக்கிய அம்சமாகும்.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

 

 • பார்முலா 1 கார்பந்தயத்தின் சீன கிராண்ட்பிரியில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.

 

 •  பெண்கள் உலக ஆக்கி லீக் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • இந்தியாவில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) பங்குகளில் தனியார் முதலீடு 96 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 •  சமையல் எரிவாயு மற்றும் மின்சார இணைப்புகள் அதிகரித்து வருவதால் நாட்டில் மண்எண்ணெய் பயன்பாடு குறைந்துள்ளது. கடந்த நிதி ஆ;ணடில் (2016-017) மண்எண்ணெய் உபயோகம் 20 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரிகிறது.

 

 •  இணையதள பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் (2020-க்குள்) இந்த துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் ஈட்டும் வருவாய் 25,000 கோடி டாலராக உயரும் என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது

 

 •  உலக அளவில், உருக்கு உற்பத்தியில், 2018-ஆம் ஆண்டிற்குள் நம்; நாடு இரண்டாவது இடத்திற்கு வரும் என மத்திய அமைச்சர் சவுத்திரி வீரேந்திர சிங் கூறியுள்ளார்.

 

 •  கடந்த 2016-17ஆம் நிதி ஆண்டில் பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி 6,200 கோடி டாலரை எட்டி இருக்கும் என இத்துறைக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

 •  நடப்பு பருவத்தில் (2016 அக்டோபர் – 2017 செப்டம்பர்) காபி உற்பத்தி 3.17 லட்சம் டன்னாக குறையும் என்றும், கடந்த பருவத்துடன் ஒப்பிடும்போது இது 9 சதவீத சரிவாக இருக்கும் என்றும் காபி வாரியம் தெரிவித்துள்ளது.

Call Now