April 1

Date:01 Apr, 2017

April 1

We Shine Daily News

jkpo;

ஏப்ரல் 01

தேசிய செய்திகள் :

 • எளிய முறையில் 2017 -18ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வசதியாக ஒரு பக்க படிவத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது வருமான வரித்துறையில் பெரிய புரட்சியாகும். அதே நேரத்தில் வருமான வரிக் கணக்குத் தாக்கலின் போது ஆதார் எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டுமென்றும், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிந்தைய 50 நாள்களில் ரூ 2 லட்சத்துக்கு மேல் வங்கியில் பணமாக டெபாசிட் செய்திருந்தால் அதை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 •  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ3.77, டீசல் விலை ரூ 2.91 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மார்ச் 31 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

 

 •  ராம நவமியை யொட்டி மாநிலங்களவைக்கு ஏப்ரல் 1 முதல் 4 நாள்களுக்கு விடுமுறை என துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அறிவிப்பை வெளியிட்டார்.

 

 •  ஆந்திராவின் புதிய தலைநகரை உருவாக்குவதில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சர்வதேச விருது வழங்கப்பட உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வரும் 8ம் தேதி இவ்விருது வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் அறிவித்துள்ளது.

 

 •  புதிய ரூபாய் நோட்டுக்களை குறைவாக புழக்கத்தில் விடத் திட்டமிட்டிருப்பதால் அவற்றை அச்சடிக்கும் செலவு வழக்கத்தைக் காட்டிலும் ரூ 1000 கோடி வரை குறைவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 •  கேரள போக்குவரத்துத் துறையின் புதிய அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாமஸ் சாண்டி பதவியேற்க உள்ளார்.

 

 •  உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்ட ‘உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2016’ -இல் உலகின் 144 நாடுகளில் இந்தியாவுக்கு 87வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் 2015ல் 125வது இடத்தில் இருந்த இந்தியா, 2016ல் 113வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

 

 •  பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் வாய்ப்பில் இந்தியா உலகளவில் 136வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சுகாதாரம், உயிர் வாழ்தலில் 142வது இடத்திலும், அரசியல் அதிகாரமளித்தலில் 9வது இடத்திலும் இந்தியா உள்ளது.

 

 •  மத்தியப் பிரதேசத்தில், முஸ்லிம்களுக்கான மதரஸா கல்வி வாரியம் சார்பில் வெளியாகும் பாடத்திட்டத்;தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை குறிப்பு இடம் பெறவுள்ளது.

 

 •  பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க்ஆப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கிகளும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இன்று முதல் இணைக்கப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப்பெரும் அரசு வங்கியாகும். இதனைத் தமிழில் இந்திய அரசு வங்கி என அழைக்கப்படுகிறது.

 

 •  சென்னை உள்பட நாடு முழுவதும் 100 இடங்களில் உள்ள 300 போலி நிறுவனங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

பன்னாட்டு செய்திகள் :

 • 6 நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த பயண தடை உத்தரவுக்கு ஹவாய் கோர்ட்டு காலவரையற்ற தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 9வது அப்பீல் கோர்ட்டில் டிரம்ப் நிர்வாகம் மேல் முறையீடு செய்துள்ளது.

 

 •  அமெரிக்கா பாராளுமன்றத்தின் செனட்சபைக்கு அடுத்த ஆண்டில் நடக்கும் தேர்தலில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து குடியரசுகட்சி சார்பில் போட்டியிடப் போவதாக இமெயிலை கண்டுபிடித்த அமெரிக்கவாழ் தமிழர் சிவா ஐயாத்துரை அறிவித்துள்ளார்.

 

 •  சிரியா அதிபர் பஷார் அல் அஸாதை பதவியிலிருந்து நீக்குவதற்கு அமெரிக்கா முக்கியத்துவம் தரவில்லை என ஐ.நாவுக்கான தூதர் நிக்கி ஹேலி தெரிவித்தார்.

 

 •  பாகிஸ்தானில் வடமேற்குப் பழங்குடியினப் பகுதியான குர்ரம் மாகாணத்தில் ஷியா பிரிவினரின் தலிபான் பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலியாகினர்.

 

 •  பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவுக்கு கிழக்கே ஜெனரல் நாகர் நகரில் கிளர்ச்சியாளர்களுக்கான தேடுதல் வேட்டை நடத்தியதில் ராணுவவீரர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 ராணுவ வீரர்களும் 10 கிளர்ச்சியாளர்களும் உயிரிழந்தனர்.

 

 •  பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிதி அமைச்சர் பிரவீண் கோர்தனுக்கும் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கும் கடந்த பல மாதங்களாக நிலவும் பனிப்போரில் தென்னாப்ரிக்க நாட்டின் மூத்த அரசியல்வாதியும் நிதிஅமைச்சருமான பிரவீன்கோர்தன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

 

 •  மும்பை மலபார் ஹில் பகுதியில் பாகிஸ்தான் நாடு உருவாக காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா இல்லத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள் :

 • ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்களை நடத்த அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேவையான நிதியை போட்டி தொடங்கும் முன்னதாக வழங்க பிசிசிஐ நிர்வாகிகள் குழு சம்மதம் தெரிவித்துள்ளது.

 

 •  மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் சானியா- ஸ்டிரைகோலா ஜோடி, மார்டினா ஹிங்கிஸ் – சான்யுன் ஜோடியை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

 

 •  மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் நிக்கிர்ஜியோஸைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 •  இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

 • புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் எண் மற்றும் செல்லிடைப்பேசி ஆகியவற்றை அளிப்பது இன்று முதல் கட்டாயமாகிறது

 

 •  2017 – 18ம் நிதியாண்டில் 5 பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர் பணியிடங்களுக்கான பெயர்களை வங்கிவாரியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

 

 •  5 புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய வர்த்தக துறை செயலர் ரீட்டா தியோஷியா தலைமையிலான அனுமதி வழங்கும் ஆணையம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

 

 •  பொது வருங்கால வைப்புநிதி, கிஸான் விகாஸ் பத்திரம், சுகன்யா சம்ரிதி திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டிவிகிதத்தை 0.1% அளவுக்கு மத்திய அரசு குறைத்திருக்கிறது.

 

 •  ஆப்பிள் நிறுவனத்தின் ஆலை இன்னும் 30 நாட்களுக்குள் பெங்களுருவில் அமையும் என கர்நாடக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்கார்கே தெரிவித்தார்.

 

Call Now